#விருதுநகர்மாவட்டம்
விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தைக் குறித்து மற்றுமொரு பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் பற்றிய ஒரு வரலாற்றுக் கருத்தரங்கை அந்த மாவட்ட ஆட்சியரின் மூலம் மிகச் சிறப்பாகப் பலரும் கவனிக்கத்தக்க வகையில் நடத்தியுள்ளது. அங்குள்ள படைப்பாளிகள் மற்றும் அதன் கலாச்சார பண்பாட்டு வரலாறுகள் கோவில் கல்வெட்டுகள் பட்டயங்கள் அகழாய்வுகள் யாவற்றையும் ஒருங்கிணைக்கும் வகையிலும் அதைச் சார்ந்து பலரின் கட்டுரைத் தொகுப்புகளையும் இணைத்து ஆய்வுக் கோவையாக்கி “வைப்பாற்றங் கரையின் வரலாற்றுத் தடங்கள்” என்ற தலைப்பில் நூலாக்கம் செய்து வெளியிட்டு இருக்கிறது.ஏற்கனவே 1997 இல் இம் மாவட்டத்தின் ஆட்சி தலைவராக இருந்த எஸ். கிருஷ்ணன் ஆங்கிலத்தில்
இதே பொருளடகத்தை குறித்து
சொந்த முயற்சியில் 200 பக்கங்களில்
வெளியிட்டார்.
இந்த மாபெரும் வரலாற்று ஆவணத்தை அந்த மாவட்ட ஆட்சியர் செய்து முடித்து இருப்பது என்னைப் பொறுத்தவரையில் அவர் காலத்தில் செய்த சிறந்த மக்கள் பணிமட்டுமல்ல அங்கு வாழும் மக்களுக்கு நம்பிக்கையூட்டக்கூடிய அல்லது மறு மலர்ச்சி ஊட்டக்கூடிய முக்கியமான செயல்பாடாகக் கருதுகிறேன். இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இதை முன்னுதாரணமாகக் கொண்டு செய்து காட்டினால் தமிழகம் முழுமைக்கும் தமிழ் மொழிக்கும் அதன் மக்களுக்கும் அவர்கள் வாழ்வின் விழுமியங்களைச் சேகரித்து தருகிற மேலும் உலக அளவில் தமிழக வாழ்வைக் கொண்டு செல்கிற பணியாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
மேற்சொன்ன பணிகளால் இலக்கியம் மட்டுமல்ல நமது வளமையும் பெருகும் மக்களுக்கான உரிமைகளும் கிடைக்கும் என்பதை ஒரு பெருமையாகவே சொல்லிக் கொள்கிறேன்.
அந்த வகையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரை நான் மனமார வாழ்த்தி மகிழ்கிறேன். ஒருபுறம் கரிசல் இலக்கிய விழா, புத்தகக் கண்காட்சி மறுபுறம் பல்வேறு வகையான கருத்தரங்குகள் ஆய்வுகள் மாவட்டம் சார்ந்த பணிகள் குறைதீர்க்கும் விண்ணப்பங்கள் யாவற்றையுமே சிறப்பாகக் கவனித்துக் கொண்டு வரும் எங்கள் மாவட்ட ஆட்சியர் மக்களுக்கான சேவைகளைச் செய்வதில் முன்னுதாரணமாக இருக்கிறார்.நம்பிக்கையூட்டும் ஆட்சியருக்கு மீண்டும் எனது வாழ்த்துகள்!
No comments:
Post a Comment