Friday, May 9, 2025

வீடே தீப்பிடித்து எரிந்தாலும் எதையும் இழக்காத நீதிபதி ஒருவர் இருந்தார்.

 


வீடே தீப்பிடித்து எரிந்தாலும் எதையும் இழக்காத நீதிபதி ஒருவர் இருந்தார்.

அவர் தான் மாதவாச்சாரி எம்.சீனிவசன்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி. வெளியில் சாப்பிட மாட்டார். பருகும் நீர் முதற்கொண்டு வீட்டில் இருந்தே எடுத்துச் செல்வார். எந்தக் கறையும் படியாதவர். 'ப்ளெசண்ட் ஸ்டே' ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவிற்கு எதிராகத் தீர்ப்பளித்தார். தீர்ப்பில் திருக்குறளைத் தாராளமாக உபயோகித்தார். அடுத்த 4 நாட்கள் தி.நகரில் இருந்த அவரது வீட்டிற்கு மின்சாரம், தண்ணீர் விநியோகம் இல்லை. ஊடகம் பேசியவுடன், இரண்டும் திரும்பின. ஹிமாசலப்பிரதேச உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆனார். பின்னர் தில்லி உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் போது இறைவனடி சேர்ந்தார்.
தனக்குச் சொத்து என்று சேர்த்து வைத்தது நல்ல பெயரை மட்டுமே.
இன்றைய நீதபதிகள்……
"Caesar's wife must be above suspicion"

No comments:

Post a Comment

விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...

  விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...