ஓ.பி.ஆர் எனும் ஓமந்தூர் பெரியவளவு இராமசாமி ரெட்டியார் அவர்களின் பிறந்தநாள் இன்று,,,
திண்டிவனம் வட்டம் ஓமந்தூர் பெரியவளவு முத்துராம ரெட்டியார் அரங்கநாயகி அம்மையார் தம்பதியரின் மகனாக 1895 ஜெய ஆண்டு தைத்திங்கள் 20 ஆம் நாள் [01-02-1895 ] பிறந்தவர் தான்,,,, இராமசாமி ரெட்டியார்.
1910 ல் திண்டிவனம் வால்டர் ஸ்கட்டர் உயர்நிலைப்பள்ளியில் படிக்கிறார்!
1938 ல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகிறார் !
1946 ல் தென்னாற்காடு மாவட்ட கஸ்தூரிபாய் அறக்கட்டளையின் தலைவர்
23-03-1947 ல் மதராஸ் மாகாண முதலமைச்சர் ஆகிறார் !
ஆலயங்களுக்குள் அனைவரும் செல்லலாம் என சட்டம் இயற்றுகிறார் !
பூரண மது விலக்கினைக் கொண்டு வருகிறார்.
தேவதாசி ஒழிப்புச் சட்டத்தினை அமல் படுத்துகிறார்.
ஜமீந்தாரி ஒழிப்புச் சட்டத்தினை அமல்படுத்துகிறார்.
சுதந்திர இந்தியாவில் பல சமஸ்தானங்கள் தனியே இயங்குவோமென தலைகீழாக ஆடிக் கொண்டிருந்த பொழுதில்,,,
ஹைதராபாத் நிஜாமும் கலகத்தினை தூண்டி விட்டு குளிர்காய நினைக்கையில்,,,
அதற்காக ஆயுத சேகரிப்பினில் ஈடுபட்ட போது,,,
அதனைத் தடுப்பதற்காக சர்தார் படேல் அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர்….
இத்தனையும், செய்த மனிதரை காங்கிரஸ் புறந்தள்ளுகிறது !
06-04-1949 ல் முதலமைச்சர் எனும் தோள் துண்டினை தூக்கி எறிகிறார் !
அதுவரை வடலூர் இராமலிங்கசுவாமிகளின் கருத்துக்களோடு தனிப்பெருங்கருணையோடு பயணித்த அந்த மனிதர்
1951 லிருந்து வள்ளலார் வாழ்ந்த ஊரான வடலூரிலேயே தங்க ஆரம்பிக்கிறார்.
சுத்த சன்மார்க்க சங்கம்
அப்பர் அனாதை இல்லம்
அப்பர் சான்றோர் இல்லம்
இராமலிங்கர் தொண்டர் இல்லம்
வள்ளலார் குருகுலம் உயர்நிலைப்பள்ளி இவற்றை எல்லாம் ஆரம்பித்ததோடு இல்லாமல் ஒழுங்காகவும், சிறப்பாகவும், தனது நேரடிக் கண்காணிப்பில் நடத்துகிறார்.
விவசாயத்திலும், நிலச்சீரமைப்பிலும், சுயதேவைகளைப் பூர்த்தி செய்யும், விவசாயத் தொழில் நுட்பத்தினையும், அப்பகுதியில் செயல்படுத்துகிறார்.
வடலூரினை விட்டு எங்கும் செல்லாமல்,,,
அரசியலற்ற மனிதராக , அருள்நெறி பரப்பும், மனிதராக, வடலூரிலேயே வாழ்ந்த இராமசாமி ரெட்டியார்,,,,
வடலூர் தியான நிலையத்தினை அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்களிடம் 1969 ஆம் ஆண்டு ஒப்படைக்கிறார்.
25-08-1970 ஆம் ஆண்டு செவ்வாய்க்கிழமை நண்பகலில் இந்த மண்ணை விட்டு மறைகிறார்…
தான் ஆரம்பித்த வடலூர் வள்ளலார் குருகுலப் பள்ளியிலேயே அவரது பூதவுடல் சமாதியாகிறது !
அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக வாழ்ந்து மறைந்த அந்த நல்லமனிதர்
ஓமந்தூர் பெரியவளவு இராமசாமி ரெட்டியார் அவர்களின் பிறந்தநாளில்,,
No comments:
Post a Comment