#அதிமுகதலைமையிலான_பாஜக்கூட்டணி
••••••
வரும் 2026 தேர்தல் வியூகத்தின் படி #அதிமுகதலைமையிலான_பாஜக்கூட்டணி மற்றும் பாமக அன்பு மணி டாக்டர் கிருஷ்ணசாமி போன்றவர்களின் கட்சி சார்ந்த கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் அவர்களுக்குள் ஒரு நிலைப்பாடு எடுப்பதற்கு என இயங்கிக் கொண்டிருக்கும்போது அதில் பிளவு உண்டாக்கும்படி இன்றைய ஸ்டாலின் திமுகவின் தந்திரோபாயங்கள் அவர்களின் வழக்கமான நக்கல் நையாண்டிளுடன் ; இந்த மாற்று அரசியல் கூட்டணியில் சீரழிவை உண்டாக்கும் வகையில் பல காலமாக உண்டு கொழுத்த திமுகவைச் சார்ந்தவர்கள் வன்முறையாக ஈடுபட்டு வருவது ஜனநாயக முறையில் அருவருப்பானது. மட்டுமல்லாமல் அதிகார மமதைகளின் குயுக்திகளோடு திமுக என்ற கட்சியையும் தாண்டிக் குடும்ப அரசியலையே மீண்டும் மீண்டும் அரியணை ஏற்றுவதை நோக்கமாகக் கொண்டது . மாற்று அரசியலை திமுகவோ அதன் வலது சாரி அதிகாரத்தைச் சார்ந்து இருக்கின்ற கம்யூனிஸ்ட் கட்சிகளோ தீர்மானிக்க முடியாது. அமித்ஷா வந்தார் எடப்பாடி இருவரும் இணைந்து தேர்தல் கூட்டணி பற்றிய பேச்சு வார்த்தையில் இருக்கும் போது அதை உடைப்பதற்காக முட்டாள்தனமான திமுகவின் தந்திரங்கள் எதிர்காலத்தில் அதற்கு நேர் எதிராகத்தான் போகும் என்பதுதான் எதார்த்தம் . இந்த இடைப்பட்ட நேரத்தில் அதிமுகவும் பாஜகவும் ஒரு மாற்று அரசியலை தமிழகத்தில் எப்படி உருவாக்குவது என்பதைத் தெளிவாக உணர்ந்து செயலாற்ற வேண்டும். திமுகவின் சுயலாப நோக்கம் கொண்ட அல்லது அனைத்து துறைகளிலும் ஊழல் செய்கிற இன்றைய திமுகவின் பலகீனமான குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் எதிர்கால தமிழகத்தின் நலனுக்கு உகந்ததாக இருக்கும். அது எந்த வகையிலும் பாழ்பட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காக என்னைப் போன்றவர்கள் கவலைப்படுவதைவிட திமுகவின் அடாவடித்தந்திரோபாயங்களை முடிவிற்கு கொண்டு வருவதே மக்களுக்கான அரசியல் அறம் ஆகும் . அதற்கு அத்தனை ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்கிற நிலையில் உறுதியாக நின்று செயலாற்றுவதில் பாஜகவும் அதிமுகவும் தீவிரமாக ஒன்றிணைந்து வரும் தேர்தலை எதிர் கொள்ள வேண்டும். ஓட்டு வங்கியை பிச்சையிட்டு வாங்கி வாழும் திமுக
முழுக்கப் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து தான் அரசியல் அதிகாரத்தை அபத்தமாகச் சாதித்து இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. இந்த ஆட்சியை நீக்க மாற்றுக் கூட்டணி அரசியல் மிக முக்கியம் என்பதை வரும் தேர்தலில் தமிழகம் சந்திக்கத்தான் போகிறது. திமுகவை மேல் எழும்ப விடாமல் எம்ஜிஆரும்,ஜெயலலிதாவும் எவ்வாறு சாதித்தார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment