Thursday, February 28, 2019

நீர்க்குமிழி போன்று...... இதுதான் வாழ்கை

————————————————-
உன்னுடைய மரண நேரத்தில் சஞ்சலப்படாதே....!!

உன்னுடைய இறத்துப்போன உடம்பிற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படாது....!!

உற்றார் உறவினர்கள் உனக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வர்.....!
1.உனது ஆடைகளை களைவர்.
2.குளிப்பாட்டுவர்.
3.புது துணி அணிவிப்பர்.
4.உன்னுடைய வீட்டை விட்டு வெளியாக்குவர்.
5.சுடுகாடு என்ற புதிய வீட்டிற்கு எடுத்துச் செல்வர்.
6.உனது கூட வரும் பலர்.
7.உன்னை அடக்கம் செய்வதில் அல்லது எரிக்க குறியாக இருப்பர்.
8.உன்னுடைய பொருட்கள் உன்னை விட்டும் பிரிக்கப்படும்
* உன்னுடைய திறப்புகள்
*புத்தகங்கள்
*பைகள்
*செருப்புகள்

•உறுதியாக விளங்கிக்கொள்
•.உனது பிரிவால் உலகம் கவலை படாது
•பொருளாதாரம் தடைப்படாது
•.உன்னுடைய உத்தியோகத்தின் வேலைக்கு வேறொருவர் வருவார்
•.உனது சொத்து வாரிஸிற்கு போய்விடும்
•அந்த சொத்திற்கு உன்னிடம் கேள்வி கேட்கப்படும்

நீ மரணித்தவுடன் முதலில் செல்வது உனது பெயரை......

உனது குடும்ப கெளரவம்,பட்டம், பதவி உன்னை ஏமாற்றி விட வேண்டாம்

உன்னைப்_பற்றிய_கவலை -3 பங்காக்கப்படும்
1.உன்னை அறிந்தவர்கள் சொல்வார்கள்....பாவம் என்று.
2.நண்பர்கள் சில தினங்களுக்கு உன்னை நினைப்பர்
3.உன் குடும்பத்தினர் சில மாதங்கள் கவலைபடுவர்
4.மக்களுடன் உன்னுடைய தொடர்பு முடிந்து விட்டது.
5.உன்மையான உனது வாழ்க்கை இப்போது தான் ஆரம்பம்.மறுமை

அப்போது உன்னை_விட்டும்_நீங்கியது
1.உயிர் 
2.சொத்து
3பிள்ளைகள்
4.மனைவி/கணவன்.

எனவே,
நல்லதை சொல்
நல்லவைகளை சிந்தனை செய்
நல்ல செயல்கள் செய்.
கெடுதல் செய்யாதே

என் மரணம் ஏற்பட்ட  பிறகு நீங்கள் என் உறவுகளையும் சொந்தங்களையும் சந்திக்க வருவீர்கள். ஆனால் அதை நான் பார்க்க போவதில்லை. ஏன், நான் இருக்கும் போதே வருவீர்களானால் மகிழ்ச்சி தானே.  என் மரணம் ஏற்பட்ட  பிறகு நீங்கள் என் தவறுகளையும் குற்றங்களையும் மன்னித்து விடுவீர்கள். ஆனால் அதை நான் பார்க்க போவதில்லை. ஏன், நான் இருக்கும் போதே மன்னித்து விடுவீர்களானால் மகிழ்ச்சி தானே.

மரணம் ஏற்பட்ட  பிறகு நீங்கள் எனக்கு மரியாதை செய்வீர்கள். என்னை பற்றி நல்ல விஷயங்களை பேசுவீர்கள். ஆனால் அதை நான் கேட்கப் போவதில்லை. ஏன், நான் இருக்கும் போதே சொல்வீர்களானால் மகிழ்ச்சி தானே.

என் மரணம் ஏற்பட்ட  பிறகு, இந்த மனிதன் இன்னும் கொஞ்ச காலம் நம்மோடு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என  நீங்கள் நினைக்கலாம்.  அதனால் நாம் இருக்கும் போதே உறவுகளை கொண்டாடினால் மகிழ்ச்சி தானே.

அதனால் தான் சொல்கிறேன். காத்திருக்க வேண்டாம். சில சமயங்களில் காத்திருத்தலில் காலமே முடிந்து விடுகிறது.

ஆகையால் உறவுகளை கொண்டாடுங்கள், இப்போதே  மன்னித்து விடுங்கள். இப்போதே மன்னிப்பு கேளுங்கள்.

மனம் ஆசைகளினூடே அல்லாடிக்கொண்டே இருக்கும்.  வாழ்க்கை நம்மிடையே வாழ்ந்து விட்டு போய் விடும். நாம் வாழ்வது எப்போது ?
#ksrpost
28-2-2019.

Wednesday, February 27, 2019

*தேசிய இனங்களின் பிரச்சனை -வந்தேறிகள்*

இன்றைய (27-02-2019) தினமணியில் *தமிழ் தேசியம், வந்தேறிகள்* குறித்தான என்னுடைய பத்தி வெளிவந்துள்ளது.ஆனால்
முழமையாக வெளியாக வரவில்லை . முழ கட்டுரை வருமாறு.....

#வந்தேறிகள்
#தமிழ்_தேசியம்
#KSRpostings
#KSRadhakrishnanpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
27-02-2019

------------------------------------------------
- வழக்கறிஞர். கே.எஸ். இராதாகிருஷ்ணன்.

வனாந்திரங்களில் வாழ்ந்த மானிடம் இனம், இனமாக ஓரிடத்தில் கூடினர். உலகில் நாகரிகங்கள் தோன்றியபோது, பொதுவான குணங்கள், தன்மைகள், உறவுகள் மக்களிடையே உருவானது. தங்கள் இனம், மண் என்ற சூழலுக்கு தள்ளப்பட்டனர். தங்கள் மண், தங்களுடைய பேச்சு வழக்கு என்ற நிலையில் அமைப்பு ரீதியான இனப் பாகுபாடுகள் என்ற இயற்கையான வரையறைக்கு மக்கள் ஆட்படுத்தப்பட்டனர். ஒரு இனம், தங்களை சார்ந்த மண் (தேசம்) வாழ உட்படுகிறது. அந்த இனம், மொழி பேசுகிற இனம் தனக்கென ஒரு நாடும் கொண்டிருந்தால், ஒரு நீண்ட வரலாறு கொண்டு ஒரு தொடர் நிலத்தில் அந்த இனம் வாழ்ந்தால், அது தேசிய இனமாகிறது.

ஒரு நாட்டில் நிலையாகக் குடி வாழும் மக்கள் அனைவரும் ஒரே தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களா என்பதும் விவாதத்திற்குட்பட்டது. உதாரணத்திற்கு கனடாவில் கியூபிக் பிரச்சனையும், சுவிட்சர்லாந்தில் ஜெர்மானியர், பிரஞ்சுக்காரர், இத்தாலியர் போன்ற நாட்டினர் வாழ்வதால் சுவிட்சர்லாந்தியர் என்ற புதிய தேசிய இனமாக இவர்கள் ஒன்றுபட்டுவிடவில்லை. மேற்கண்ட மூன்று இனத்தவரும் அவரவர்கள் மொழியின் அடிப்படையில் தனித்தனி தேசிய இனங்களாகத் தனித்தனிப் பகுதிகளில் சுயாதிக்க உரிமையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

ஒரு தேசிய இனத்தை பகுத்தாய்வு செய்யும்போது மதம் அடிப்படையாக இருக்குமா என்று வினாவும் எழுகிறது. இதைக் குறித்தான விவாதங்கள் நடந்த வண்ணம் இருக்கிறது. மேற்கே அல்ஜீரியாவில் இருந்து, வளைகுடா நாடுகள், கிழக்கே இந்தோனேசியாவில் இஸ்லாமிய இனத்தவர்கள் வாழ்கின்றனர். அதை ஒரு தேசிய இனமாக கருத முடியாது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. ஏனெனில் இஸ்லாம் மதத்தில் சில பிரிவுகள் இருப்பதால் அது ஒரு தேசிய இனமாக பிரித்து காண முடியாது என்று கருத்தைச் சொன்னாலும், அதற்கு முரணாண கருத்துக்களையும் சிலர் வைக்கின்றனர். அரேபிய மொழி பேசும் முஸ்லீம்கள் அரேபியர் என்றும், துருக்கி மொழி பேசும் முசுலீம்கள் துருக்கியர் என்றும், புஸ்டு மொழி பேசும் முசுலீம்கள் புஸ்டுக்கள் என இந்தோனேசியா வரை வாழும் இஸ்லாமியர்கள் ஒரே தேசிய இனத்துக்குள் உட்பட்டவர்கள் அல்ல என்ற கருத்தை உறுதிப்படுத்துகின்றன. எனவே ஒரே மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், பல்வேறு மொழிகள், கலாச்சாரம், பண்பாடுகளுடன் வாழும் மக்களை ஒரு

தேசிய இனம் என்று சொல்லிவிட முடியாது. தேசிய இனத்திற்கு மொழி, மரபு ரீதியான பழக்கவழக்கங்கள், கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை முறைகள் என்பதையே கணக்கில் கொள்ளப்படுகிறது. ஒரு தேசிய இனம் வாழும் நிலப்பகுதி, எல்லைகளோடு கூடிய மண், ஒரு நாடாக (State) அழைக்கப்படுகிறது. நாடு (State) என்பது அரசு, அது இறையாண்மை கொண்ட நிலப்பரப்பில் வாழும் மக்கள் சமுதாயத்தை குறிப்பிடுவதாகும்.

அது எத்தனை மொழிகள் கொண்டதாகவும் இருக்கலாம். ஆனால், ஒரு தேசம் (Nation) என்பது மரபு வழியாக ஒரு மொழி, கலாச்சாரம் கொண்டதாக இயங்க வேண்டும். ஒரு தேசம் என்பது ஒரு நாடாக இருக்கலாம். தனி நாடு சுயநிர்ணய உரிமையில் பிரியும்போது பன்னாட்டு அங்கீகாரமும் ஒரு முக்கியமான காரணியாகும். ஒவ்வொரு நாடும் ஒரு தேசமாக இருப்பதுவும் இல்லை என ஜான் ஹட்சின்சன் மற்றும் ஆன்டனி டி. ஸ்மித் ஆகியோர் நேசனலிசம் (Nationalism) என்ற ஆங்கில நூலில் குறிப்பிடுகின்றனர்.

இலங்கையில் கூட முள்ளிவாய்க்கால் போருக்குப்பின், ஒரு நாடு இரண்டு தேசங்கள் என்று வலியுறுத்தப்பட்டது. இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கி, பன்மையில் ஒரு குடையின் கீழ் கூட்டாட்சி என்று சொன்னாலும், ஒற்றையாட்சி தான் இங்கு நடக்கின்றது.தொல்காப்பியர் குறிப்பிட்டவாறு, “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’’ தமிழகத்தின் எல்லைகள் அக்காலத்திலேயே வரையறுக்கப்பட்டது. இந்த எல்லைகள் அமைந்த இந்த நிலையை ஒரே மொழி, இலக்கிய சொறிவுகள், தொன்மையான இனப் பண்பாடுகள் ஒருங்கிணைந்து அமைந்த இந்த மண்ணில் அரசு (Government) அமைந்து நிர்வாகத்தை பரிபாலிக்க வேண்டும். இதன் கீழ் குடிகள் வாழ்வார்கள். அவர்களுடைய வாழ்க்கை முறைகள் சீராக்கப்படும். இப்படித்தான் தேசிய இனங்கள், பொதுப் பழக்கவழக்கத்தில் தங்களுக்காகவே அமைத்துக் கொள்கின்ற நாடு, அரசு ஆகும். அதற்கு அடிப்படை ஒரே மொழியும், கலாச்சாரமும் பழக்கத்தில் கொண்ட மக்களின் கூட்டமைப்பே ஒரு தேசிய இனம் (Nationaity) (நேசனாலிட்டி - நேசன் - தேசம்) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.

தமிழ் தேசியம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவெடுத்து ஒரு தொன்மையான மூத்த இனமாகவும், தமிழ்மொழி மூத்த மொழியாகவும் அறியப்பட்டது. ஆதியில் தமிழ்மொழி காலத்தில் வழக்கத்தில் இருந்த ஹீப்ரூ, லத்தீன் போன்ற மொழிகள் இன்றைக்கு வழக்கத்தில் இல்லை. தமிழ் மொழி இன்னமும் கன்னித் தன்மையோடு சிரஞ்சீவியாக பழக்கத்தில் உள்ளது. இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி வருவதற்கு முன் பல்வேறு மன்னர்களின் ஆட்சியில் கீழ் வட்டார வட்டாரங்களாக நிர்வாகம் இருந்தது. ஒரு குடையின் கீழ் காஷ்மீரிலிருந்து தென்குமரி வரை யாரும் எந்த மன்னரும் ஆட்சி செய்யவில்லை.

ஆங்கிலேயர் வருகை, விடுதலைப் போராட்டம் முடிந்து நாடு விடுதலைப் பெற்றபின் பல சமஸ்தானங்களை இணைத்து இந்தியக் குடியரசு என்று அமைந்தது. விடுதலைப் பெற்று 71 ஆண்டுகளாகியும் இந்தியாவினுடைய பல்வேறு தேசிய இனங்களில் பிரச்சனைகளும், வட்டார ரீதியிலான புறக்கணிப்புகளும் நடந்த வண்ணம் இருக்கின்றது.இருப்பினும், தொல்காப்பிய பாயிரம் எல்லைகள் சொன்னாலும், சேரன் செங்குட்டுவன் இமயத்தில் போய் கல்லெடுத்ததும், யுவான் சுவாங் போன்ற சீன யாத்திரீகர்களும், புத்த பிட்சுகளும் காஞ்சிக்கு வந்ததெல்லாம் வரலாற்றுச் செய்திகள். பண்டைய தமிழ் இலக்கியங்களிலே சங்கத்தமிழ் – இமயம் - பொதிகை – குமரிமுனை வரையான தொடர்புகளை பகிர்கின்றன.

வடவேங்கடம் தென்குமரி ஆயிடை என்று தமிழ்ப் பேசும் மக்கள் வாழும் நிலப்பரப்பைக் குறிப்பது போன்று இமயம் முதல் குமரி வரை என்றும் இமயம் முதல் பொதிகை வரை என்றும் இந்தியாவின் நிலப்பரப்பையும் தமிழ் நூல்கள் குறிப்பிடுவதையும் பார்வையில் படுகின்றனது.

”பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே…” (புறநானூறு 2) 
”பொன்படு நெடுங்கோட்டு இமயம் சூட்டிய…” (புறநானூறு 39) 
”பொன்னுடை நெடுங்கோட்டு இமயத்தன்ன….” (புறநானூறு 369) 
”தென்குமரி வடபெருங்கல்….” மதுரைக் காஞ்சி (வரி 70)
”பேரிசை இமயம் தென்னங்குமரியோடு ஆயிடை…..” பதிற்றுப்பத்து (பாடல் 11) 
என்று இந்த நூல்கள் குறிப்பிடுகின்றன. 

இவற்றுடன் சிறுபாணாற்றுப்படை (வரி 48), நற்றிணை (பாடல் 356 வரி 3, பாடல் 369 வரி 7), குறுந்தொகை (பாடல் 158 வரி 5), பரிபாடல் (பாடல் 1 வரி 51, பாடல் 5 வரி 48), பரிபாடல் திரட்டு (பாடல் 1 வரி 77), அகநானூறு (பாடல் 127 வரி 4, பாடல் 265 வரி 3) இவ்வாறான தரவுகளால் இந்தியாவின் வடபுலமும், தென்புலத்திற்கான தொடர்புகள் வந்துள்ளதாக சிலர் சொல்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குப் பிறகுதான் இந்தியாவை ஒருங்கிணைந்த நிலப்பரப்பாக இந்திய மக்கள் பார்த்தார்கள் என்று கூறுவார்கள். இப்படிக் கூறுவதை முழுமையாக ஒத்துகொள்ள முடியாது என்பதற்கு மேற்குறிப்பிட்ட சான்றுகள் வெளிப்படுத்துகின்றன. நதிநீர் தாவாக்கள், சமன்பாடற்ற நிதி ஒதுக்கீடுகள், திட்டங்களின் செயல்பாடு என்பதில் மாற்றாந்தாய் போக்கில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், இந்தியாவில் இந்தி எதிர்ப்பிற்கு தமிழ்நாடு 1965இல் கிளர்ந்து எழுந்தது. ஆந்திரத்தில் தெலுங்கானா போராட்டம், காஷ்மீர் சிக்கல், பஞ்சாப் பிரச்சனை, அஸாம் மாணவர் போராட்டம், வடகிழக்கு மாநிலங்களின் உரிமை மீட்பு அமைப்புகளின் செயல்பாடுகள் எல்லாம் நாம் கவனித்தோம்.

பல மாநிலங்களும் தங்களுடைய தேவைகளை பூர்த்திச் செய்ய இந்திய அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்துகின்றன. இந்தியா என்பது ஒரு கூட்டாட்சி என்று நாம் வகுத்துக் கொண்டாலும் அந்த கூட்டாட்சியின் வீரியம் செயல்பாடுகளில் இல்லை என்பது தான் யதார்த்தம். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், கூட்டாட்சியா? அல்லது சரிபாதி கூட்டாட்சியா? என்பதை குறிப்பிடவில்லை. இப்போது நிடி ஆயோக் என்று அழைக்கிறார்கள். இதற்கு முன் திட்டக் கமிசனாக இருந்தது. இதைக் குறித்து ஒரு வார்த்தை கூட இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் எங்கும் குறிப்பிடவில்லை.

அப்படியான நிலையில் ஒரு சூப்பர் கேபினெட்டாக டெல்லியில் இயங்கி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை தன் விருப்பத்திற்கேற்றவாறு வினாக்களை எழுப்பி தான்தோன்றித் தனமாகவும் நடந்து கொண்டது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் நிதி கமிசனைப் பற்றி குறிப்பிட்டிருந்தாலும், நிடி ஆயோக்கிற்கு உள்ள அதிகாரங்கள் நிதி கமிசனுக்கு கிடையாது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை கொண்ட ஒரு மாநில அரசை மத்திய அரசும், திட்டங்களை ஒழுங்குப்படுத்தும் அமைப்பும், இதுவரை நடத்தி வந்த முறை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. இதனால் தான் மாநிலங்களுடைய அபிலாஷகளும், நியாயமான ரணங்களும், மொழிவாரியாக தங்களுடைய தேசிய இனத்தைப் பாதுகாக்க இந்தியக் கூட்டாட்சியில் மத்திய அரசிடம் போர்க் குணத்தைக் காட்டுகிறது. இந்த நிலையில் மாநில சுயாட்சி, மாநிலங்களுக்கு அதிக அதிகரம், கூட்டாட்சி பாதுகாப்பு, பிரிவு 356ஐ நீக்குவது, அதிகாரப் பட்டியல்களை மாற்றியமைப்பது, நிதிப் பகிர்வதில் தாராளம் போன்ற சிக்கல்கள் எல்லாம் இன்றைக்கு மத்திய – மாநில உறவுகளில் உள்ளன. மாநில சுயாட்சி என்பது காங்கிரசாரின் குரல் தான். 1915இல் கோபால கிருஷ்ண கோகலே தனது அரசியல் சாசனம் (Political Testament) என்ற நூலில் மாகாணங்களவை, அதற்கான சுயஉரிமைகள் பற்றி முதன்முதலாக தெளிவுப்படுத்தினார். தொடர்ந்து சுதந்திரப் போராட்டக் காலத்திலும், மாகாண சுயராஜ்யம் என்பதையும் காங்கிரசார் தொடர்ந்து வலியுறுத்தினர்.

தமிழ் தேசியம் என்பது, தொன்மையான உரிமை. அதனுடைய தன்மைகளை பாதுகாத்து தமிழர்களுடைய நலனை பேணுவது அவசியமானது தான். யாரும் மறுக்கவில்லை. ஆனால் இன்றைய நிலையென்ன? பிரதமர் நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் 1990களின் துவக்கத்தில் தாராளமயமாக்கல், பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்ததன் விளைவால், தமிழ் தேசியம் என்றொரு நோக்கத்தை எட்ட முடியுமா? என்பதை பல ஆய்வுகளுக்கும், விவாதங்களுக்கும் உட்படுத்தி சிந்தனை செய்தாலும் அதற்கான சாத்தியக் கூறுகள் அரிதாகியுள்ளது.

தமிழ்தேசியத்தில் நியாயங்கள் இருந்தாலும், உலகமயமாக்கல், உலக மக்களிடையே செயற்கையான பிணைப்பு என்பது தடையாக அமைந்துவிட்டது. உலகமே ஒரு கிராமம் என்ற கருத்தும் நம்மை வேறு திசையை நோக்கி அழைத்துச் செல்கின்றது. ஒரு தேசிய இனத்தின் காலச்சாரம் அதன் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் எல்லாம் இந்த உலகமயமாக்கலுக்குள் புகுந்துவிட்டது. உலக சார்பு நடைமுறைகள் இன்றைக்கு மேல்நோக்கி வருகின்ற நிலையில் தனி தேசிய பிணைப்பு என்ற வகையில் சிலத் தடைகளும் பெருகி வருகின்றன.

இலங்கையில் எல்லா காரண காரியங்களும், நியாயங்களும் இருந்தும் ஈழம் அமையவிருந்தும் விடுலைப் புலிகள் கடுமையாக போராடியும், இப்போதும் தொடர்ந்து 44 ஆண்டுகளாக போராடிக் கொண்டு இருக்கின்றார்கள். இன்னும் அவர்களுடைய நியாயமான நீண்டகாலக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. வரலாற்றில், 2008இல் கொசோவா, தென்கிழக்கு ஐரோப்பியாவில் பால்கன் நாடுகள், யூக்கோஸ்லோவியாவில் இருந்து ஸ்லோவேனியா (1990), குரோஷியா (1991), மாசிடோனியா (1991), உக்ரைன் (1991), ஜார்ஜியா (1991), டிரான்ஸ்னிஸ்டீரியா (1991), போஸ்னியா (1992), எரித்ரியா (1993), மால்டோவா (1994), கிழக்கு தைமூர் (1999), மாண்டிநிக்ரோ (2006), தெற்கு ஒசேடியா (2006), தெற்கு சூடான் (2011), கினா, ஹெரிசிகோவினா ஆகிய நாடுகள் பொதுஜன வாக்கெடுப்பு நடத்தி பிரிந்த நாடுகள் ஆகும்.

போகைன்வில்லே நியூசிலாந்திடமிருந்தும்; நியூகலிடோனியா பிரான்ஸ் நாட்டிடம் இருந்தும்; ஸ்பெயின் நாட்டிலுள்ள கேடலோனியா பகுதி மக்களின் தனி நாடு கோரிக்கை, மேற்கு சகாரா ஆகிய நாடுகள் தன்னுடைய தனி இறையாண்மையை வழங்க கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பொதுஜன வாக்குரிமை வேண்டும் என்று போராடி வருகின்றன.

மக்கள் பொது வாக்கெடுப்புகளின் வினோத தன்மையையும் தாண்டி, தனி நாடாக வேண்டும் அல்லது ஒரு அமைப்பிலிருந்து ஒரு நாடு வெளியேறுவது போன்ற அம்சங்களின் மீது ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படும் போது, அது பலரின் கவனத்தையும் ஈர்க்கிறது. 1945-ஆம் ஆண்டிலிருந்து, விடுதலை கோரும் 50-க்கும் மேற்பட்ட வாக்கெடுப்புகள் இதுவரை நடந்துள்ளன. இவற்றில் 27 வாக்கெடுப்புகள் விடுதலை வேண்டுமா என்பதற்கு “ஆம்” என்றும், 25 வாக்கெடுப்புகள் “இல்லை”; என்றும் வாக்களித்துள்ளன. 1990களில் 14 நாடுகள் விடுதலை கோரி வாக்களித்தன.  சோவியத் யூனியன் உடைந்தபோது, அவற்றில் 8 நாடுகள் அதிலிருந்து பிரிந்தன. முன்னாள் யூகோஸ்லாவியாவிலிருந்து 3 நாடுகள் பிரிந்தன, எத்தியோப்பியாவிலிருந்து ஒரு நாடு பிரிந்தது. மேலும் விடுதலை கோரி பிரிந்த ஒரு நாடு தற்போதுள்ள கிழக்கு தைமூர் ஆகும்.

இதன் முடிவினை அங்குள்ள போராளிக் குழு எதிர்த்தது. சமீபத்தில் பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்து பிரிவதற்கான பொது வாக்கெடுப்பில் பிரிந்து செல்லும் உரிமைக்கு மாறாக வாக்குகள் அதிகமாக இருந்தது. எனவே நீண்டகாலமாக எதிர்பார்த்த ஸ்காட்லாந்து பிரிட்டனில் இருந்து பிரிய இயலவில்லை. “The Theory of Self-determination”, பெர்னான்டோ ஆர். டீசன் தன்னுடைய நூலில் சுயநிர்ணயமும், பிரிந்து செல்லுதல் உரிமை என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கான தகுதிகள் அந்த பிரச்சனைகளில் இருக்க வேண்டும். உலக நாடுகளின் ஆதரவு வேண்டும். அது மட்டுல்ல இன்றைய சந்தை ஜனநாயகம், தாராளமயமாக்கலால், சுயநிர்ணய உரிமை சிறிது சிறிதாக மட்டுப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

இப்போது தமிழகத்தில் பேசப்படும் தமிழ் தேசியம் சாத்தியப்படுமா என்பது தான் விவாதப் பொருள். மேலே குறிப்பிட்ட நிகழ்வுகளும், சூழல்களும் நியாயமான தமிழ் தேசியம் என்ற நோக்கத்திற்கு சாதகமாக இல்லை என்பது தான் என் போன்றவர்களின் கருத்து. தமிழ் தேசியம் என்பது புனிதமாக கருதப்பட வேண்டிய விசயமாகும். அதை யாரும் எளிதாக நினைத்துவிட முடியாது. ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவே. எனவே இதை மிகவும் ஆழமாக பரிசீலனை செய்து, அடுத்த நகர்வு என்னவென்ற கவனிக்க வேண்டும். இப்படியான அகப்புறப் சூழலில் தமிழ் தேசியம் என்ற அடிப்படையில் தனி நாட்டிற்கு சாத்தியமில்லை. ஈழத்தில் கடுமையாக போராடி, நியாயங்கள் இருந்தும் வெற்றி இலக்கை இன்னும் நாம் அடையவில்லை. தமிழ் தேசியம் என்ற வகையில் தனி நாடு அமைய நம் மீது உலக நாடுகளின் பார்வையும், அங்கீகாரமும் மிகவும் அவசியம்.

அது சாத்தியக்கூறா என்பதையும் கவனிக்க வேண்டும். அவ்வாறு சாத்தியமாகும் வரை மாநில சுயாட்சி, ஓரளவு கேரளம், கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரம், புதுவை இணைந்து தென் மாநிலங்கள் கூட்டுறவான சமஷ்டி முறையில் திராவிட நாடு என்ற நிலைப்பாட்டில் இணைந்து தங்களுக்கான நலன்களைப் பேணி பிரச்சனைகளை ஓரளவு தீர்க்க முனைப்புக் காட்டுவது தான் இன்றைய சாத்தியமாகும்.

இந்த கருத்து என்னுடைய தனிப்பட்ட கருத்து. தவறாகக் கூட இருக்கலாம். நான் குறிப்பிட்ட கருத்துகளைக் கொண்டு விவாதம் நடத்தி  தமிழகத்திற்கு நலன் பயக்குமோ அதை முன்னெடுங்கள். இதில் மாற்றுக் கருத்தில்லை. மற்றொரு பிரச்சனை வந்தேறிகள். இந்த மண்ணில் பிறக்காமல், இந்த மண்ணுக்காகவும், தமிழகத்தின் உரிமைக்காகாவும் இதயசுத்தியோடு போராடாமல் கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்திற்கு வந்து ஆதாயத்தைப் பெற்றவர்களை வேண்டுமெனில் குற்றம் பாருங்கள்.

தன்னுடைய மூதாதையர்கள் தமிழகத்தில் பிறந்து இதை தாயகமாக கொண்டு அவர்களின் வழி வழியாக வந்து தமிழ் மண்ணை நேசித்து இந்த மண்ணுக்காக நேர்மையாக போராடும் நல்லுள்ளங்களையும் வந்தேறிகள் என்று காயப்படுத்துவதனால் எந்த நலனும் கிடைக்கப்போவதில்லை. அரசியலமைப்புச் சட்டம் இதை குறித்து தெளிவாக சொல்கின்றது. அதை மீறியும் ரணத்தை உண்டு பண்ண வந்தேறிகள் என்று சொன்னால் அது தனிப்பட்ட முறையில் தன் இருப்பைக் காட்டி பரபரப்பை ஏற்படுத்துவது மட்டும் தான் நடக்கும். எனவே வந்தேறிகள் கோஷம் என்பது யாரைச் சொல்கிறார்கள்? அதற்கான அளவீடுகள் என்ன? குறியீடுகள் என்ன? அதற்கான தகுதியும், தன்மையும், தரமும் எப்படி வகுக்கப்படுகின்றது என்பதெல்லாம் இல்லாமல் இந்த மண்ணில் பிறந்து, சுவாசித்து தமிழகத்திற்காக பாடுபடுபவர்களை வந்தேறிகள் என்று சகட்டுமேனிக்கு அர்த்தமற்று பேசுவது நியாய அரங்குகளில் எடுபடாது. 

உண்மையாக தமிழகத்தை வாட்டி கொழுக்கும் வந்தேறிகள் யாரென்று கண்டறியுங்கள். உரத்தக் குரலில் பேசுங்கள். தவறே இல்லை. இன்றைக்கு உலகமே மானிடம் வந்து செல்கின்ற பூமி தான். யாரும் நிரந்தரமானவர்கள் இல்லை. ஒரு காலத்தில் அமெரிக்காவிற்கு பணிக்கு செல்வது குதிரைக் கொம்பாக இருந்தது. இன்றைக்கு எனது கிராமத்திலேயே 40, 50 பேர் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற பல நாடுகளுக்கு வேலைக்குச் சென்று அங்கேயே நிரந்தரக் குடியுரிமையைப் பெற்றுவிட்டார்கள். அது மட்டுமா? உலகம் முழுவதும் 1 கோடிக்கு மேல் தமிழர்கள் வாழ்கின்றனர். இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் 65 லட்சம் தமிழர்கள் உள்ளனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மேயர்கள், ஏன் பிரதமர் பொறுப்பில் கூட இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நாட்டிற்கு அவர்கள் உழைக்கிறார்கள்.

வந்தேறிகள் என்று அங்குள்ள தமிழர்கள் மீது ரணங்களை உருவாக்கும் விமர்சனங்கள் இல்லை. எனவே இந்த காலக்கட்டத்தில் தாராளமயமாக்கப்பட்ட சந்தை ஜனநாயகத்தில் போர் கொண்டு தனி நாடு பிரிந்தது எனக்குத் தெரிந்தவரை பங்களாதேஷ். அதன்பின் ஐக்கிய சோவியத் ரஷ்ய நாடுகள் தனித்தனியாகப் பிரிந்தன.

மற்ற நாடுகள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் பிரிந்து சென்றதெல்லாம் உலக நாடுகள் தலையீடு, ஐநா தலையீடு, இரு நாடுகளும் கூடி மனமுவந்து பிரிந்து செல்வது என்ற முன்னெடுப்பு தான் புது நாடுகளின் துவக்கமாகும். இன்றைய தொலைத்தொடர்பு, சமூக வலைத்தளங்கள், தாராளமயமாக்கல் என்ற வகையில் நாம் கோரும் தமிழ் தேசியமும், வந்தேறிகள் என்று ஒரு அளவுகோல் இல்லாமல் பேசுவது எந்த வகையிலும் பயனளிப்பதில்லை. அந்த நோக்கத்திற்கே ஊறு விளைவித்துவிடும். இந்த பிரச்சனை உணர்ச்சிப்பூர்வமான பிரச்சனை என்பதால் கவனமாக கையாள வேண்டும்.

செய்தித்தொடர்பாளர், திமுக.
இணையாசிரியர், கதைசொல்லி,
நிறுவனர், பொதிகை - பொருநை கரிசல்,
rkkurunji@gmail.com

இன்றைய (27-02-2019) தினமணியில் "தமிழ் தேசியம், வந்தேறிகள்" குறித்தான என்னுடைய பத்தி வெளிவந்துள்ளது.

தேசிய இனங்களின் பிரச்சனை

Monday, February 25, 2019

இதுதான் பாதை, இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது.

எவரும் அறிவுரைகள், ஆலோசனைகளைவிட தங்களை முழுமையாக புரிந்துக் கொண்டு செயல்படுபவரால் தான் நல்வினையை ஆற்ற முடியும்.

போதனைகளை புரிந்து கொள்ள நாம் இங்கு இல்லை. நம்மை நாமே பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அடுத்தவர் சொல்வதை புரிந்து கொள்ள முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். பிம்பத்தைக் காட்டும் கண்ணாடியைப் போல உங்களை நீங்களே சீர்தூக்கி பார்த்து புரிதலடைந்துவிட்டால் பிம்பம் காட்டும் நிலைக்கண்ணாடி கூட அவசியமற்றதாகிவிடும். அந்த அளவில் நமக்கு நாமே என்ற நிலையில் நல்லது கெட்டதை பிரித்தறிந்தாலே ஆரோக்கிய வாழ்வை நோக்கி நாம் நகரலாம்.
---
ஒருவருக்கு பாராட்டுகளைவிட நினைவில் கொள்ளும் அவமானங்களே பால பாடங்களாக அமைந்து பாதுகாக்கிறது. உதட்டளவில் பாராட்டுக்கள் என்பது வெறும் வெற்று வார்த்தைகள் தான். நமக்கு ஏற்படுகின்ற அவமானங்கள் நம்மிடையே ஊடுருவி சிந்திக்கத் தோன்றுகிறது. 
---
நமது வாழ்வில் ஏராளமான மனிதர்களை கடக்கின்றோம். பல மனிதர்களுக்கு உதவுகின்றோம். துணையாக இருக்கின்றோம். ஏணியாக இருக்கின்றோம். ஆனால், அந்த உள்ளார்ந்த நோக்கத்தை அந்த மனிதர்கள் புரிந்துகொள்வதில்லை. நம்முடைய பணி அவர்களுக்கு பயனாகிறது. அந்த பணி அவர்களுக்கு முடிந்தவுடன் நம்மை அழுக்கு துடைக்கும் நாப்கின் தாள்களை போல துடைத்துவிட்டு எறிபவர்களிடம் என்ன நியாயம் எதிர்ப்பார்க்க முடியும். எனவே நாம் நாமாகவே இருக்க வேண்டும். நமக்காக பொதுநலத்தோடு சிந்திப்பது தான் சாலச் சிறந்தது.

ஒருவன் தன்னுடைய இயல்பான சிந்தனைகளை வெளிப்படுத்தவில்லை என்றால் அவன் அடுத்தவர்களுக்கு அடிமை தான். உலகோடு ஒட்டி வாழவேண்டும் என்பது நியாயம். அதேபோல, தனக்கு எதிர்காலத்தில் வரும் சிக்கல்களை அறிந்து தனித்தும் வாழ வேண்டும்.
---
எவரும் எவருக்காகவும் இருக்கவோ, இறக்கவோ முடியாது. பூமிப்பந்தில் இருக்கின்ற காலத்தில் அமைந்த வாழ்க்கையும், கிடைத்த வாய்ப்புகளையும் சிறப்பாக பயன்படுத்துவதே மானிடம். 

#ksr_postings #k_s_radhakrishnan_postings கே.எஸ். இராதாகிருஷ்ணன் 25.02.2019

Sunday, February 24, 2019

சென்னை உயர்நீதிமன்றத்தின் வித்தியாசமான பழைய படம்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் வித்தியாசமான பழைய படம். ------------------------------------------------
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் வளாகக் கட்டட வளைவிலிருந்து (1940-ல்) பாரிமுனையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. கட்டடம் தொலைவில் தெரிகிறது. இது என்னுடைய அறையான 22 லா சேம்பர்ஸ் முன்பு உள்ள வளைவே இது. இந்த வளைவின் அருகில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன், வை.கோ, நெடுமாறன், கோவை கருத்திருமன், இந்திய கம்யூனிட்ஸ் கட்சி தலைவர் அழகர்சாமி, சட்ட பேரவை முன்னாள் துணைத்தலைவர் பெ.சீனிவாசன், எஸ்.எஸ்.தென்னரசு மற்றம் இலங்கை தமிழ் தலைவர்கள் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், யோகேஸ்வரன், சம்பந்தன், கரிகாலன், சேனாதிராஜா, பேபி என பலரோடு, வழக்கு விசயங்களை தனியாக பேசிய நினைவுகள் எல்லாம் வந்து செல்கின்றது. இந்த அறையில் என்னோடு சீனியர் வழக்கறிஞர் காந்தி அவர்களின் கீழ் என்னுடன் வழக்கறிஞர்களாக பணியாற்றியவர்கள் இப்போது உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகளாக 8 பேர் இருந்தனர், இன்னும் சிலர் இருக்கின்றனர்.
The YMCA building on Esplanade around 1940s from the stone arched window of Madras High Court. This building was inaugurated in 1900 by Arthur Havelock Governor of Madras. Designed by architect G.S.T. Harris the Indian Jaipuri style was preferred by Governor Havelock. Namberumal Chetty the contractor of the period was responsible for the construction. The attraction of the building is its richly decorated facade, arches, projecting ornamental balconies, parapet wall with stone jallis. Made of Red sandstone facade said to be mined from nearby Tada.
Picture : Kings own Museum

#madrashighcourt #chennai #pariscornor #சென்னைஉயர்நீதிமன்றம் #பாரிமுனை #ksrpost #ksradhakrishnanpost கே.எஸ். இராதாகிருஷ்ணன் 24.02.2019

ஏழரை

சமீபத்தில் நண்பர் ஒருவரின் இல்லத் திருமண விழாவின் அழைப்பிதழை பார்க்க நேர்ந்தது. அதில் வித்தியாசமாக திருமண நேரத்தை "06.00 மணிக்கு மேல் 07.29 மணிக்குள்" என குறிப்பிட்டிருந்தனர். இதுவும் ஒரு நல்ல நேரமாக கருதி நண்பர் அச்சடித்துள்ளார். ஏழரை (07.30) என்பது எல்லோராலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாக சமுதாயம் கருதுகிறது.

#KSRPostings
#KSRadhakrishnan_postings
KSRadhakrishnan
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
24-02-2019

*Being happy and joyful doesn't mean everything is perfect; it means you've learned to see the beauty in bad. Don't wait for things to get easier, simpler, better*.

*Being happy and joyful doesn't mean everything is perfect; it means you've learned to see the beauty in bad. Don't wait for thi...