Saturday, October 17, 2020

#டெல்லி_ராஜபாட்டை_சாலை.....

 #டெல்லி_ராஜபாட்டை_சாலை.....

————————————————


டெல்லி ராஜபாட்டை சாலையில் ராஷ்டிரபதி பவன், நாடாளுமன்றம், இந்தியாவின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைச்சகங்கள் நார்த் செளத் ப்ளாக்கில் அமைந்துள்ளன. இந்த ராஜபாட்டை சாலையில் விலையுர்ந்த கார்களும் செல்கின்றன, சாதாரண சைக்கிளை உருட்டி கொண்டு செல்கிற நபர்களும் செல்கின்றன. எத்தனையோ பேர் பயணித்த ராஜபாட்டையில் பல கமுக்கங்களும், பல அறியா சங்கதிகளும், சமாச்சாரங்களும் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக நடந்துள்ளது. இந்த சாலை மட்டும் அவற்றை அறியும்.

கடந்த 1972லிருந்து எத்தனையோ முறை இந்த சாலையில் பயணித்து விட்டேன். அரசியலில் அடியெடுத்து வைத்தபோது அடுத்த வேளை உணவுக்கு வழியின்றி வாடியவர்கள் இன்று பங்களாக்களும், பண்ணை வீடுகளும், ஆடிகார்களுமாக நம் கண் முன்பு, எந்தச் சமூகக் கூச்சமுமின்றி வலம் வருவதை நாம் மவுனப்பார்வையாளர்களாகப் பார்த்துக் கொண்டுதானேஇருக்கிறோம்.

அமைச்சராக இருந்த முக்கிய தலைவராக நாடு அறிந்த தாரகேஷ்வரர் சின்ஹா, என்னை முதன் முதலாக நாடாளுமன்றத்திற்குள்ளே 1972ல் அழைத்து சென்று காட்டினார். 48 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. My dear Son,One day you you must sit this circular building as MP. I wish u.என தாரகேஷ்வரர் சின்ஹா அப்போது கூறினார்.பலமுறை நாடாளுமன்றம் செல்ல வாய்ப்பு கிடைத்தும் சில புண்ணியவான்களால் அது தடுக்கப்பட்டது. 70 களில் நாடாளுமன்றத்தை பார்க்காதவர்கள் எல்லாம் இன்றைக்கு நாடாளுமன்ற மூத்த உறுப்பினர்கள்.நான் அரசியல் களத்தில் உழைக்கும் பார்வையாளன் என நினைக்கின்றனர். இதுதான் இன்றைய அரசியல் சூழல். வாழ்க நமது ஜனநாயகம்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

17-10-2020.

#KSRPostings

--

K. S. Radhakrishnan,

http://ksradhakrishnan.in

When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*

*When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*. But always remember so are You. Belive the stren...