Tuesday, May 7, 2024

Meenanbakkam old airport bomb blast1984,now cargo #TEAGroup #Panakotai Maheswaran #Kathersan

Meenambakkam old airport bomb blast1984,now cargo



#TEAGroup  #Panakotai Maheswaran
#Kathersan


*1960 களில், எங்க காலத்துல SSLC எந்தப் பாடத்துலயும் நூத்துக்கு நூறு அவ்வளவு எளிதாக வாங்க முடியாது*. *கணிதத்தில் 90- 96 வரை கிடைப்பது அன்று பெரிய விஷயம். எனக்கு SSLC இல் Social Studies- History & Geography இல் Madras State first rank கிடைத்தது…

*1960 களில், எங்க காலத்துல SSLC எந்தப் பாடத்துலயும் நூத்துக்கு நூறு அவ்வளவு எளிதாக வாங்க முடியாது*. *கணிதத்தில் 90- 96 வரை கிடைப்பது அன்று பெரிய விஷயம். எனக்கு SSLC இல் Social Studies- History & Geography இல் Madras State first rank கிடைத்தது… IAS  போகலாம் என நினைத்த எனக்கு சட்டக்கல்லூரி - மாணவர் அரசியல் என ஊழ் தள்ளியது. Mark Sheet 40 பக்க நோட்டு மாதிரி இங்கு பேனாவில் எழுதப்பட்ட சுய விபரங்கள் , பெற்றோர் கையெப்பம்,  அதன் 6 ஆம் பக்கத்தில் சிவப்பு மையில்  எழுதப்பட்ட மதிப்பெண்கள் பாட வாரியாக இருக்கும்*
 
#sslccertificate #ksrpost



#கேஎஸ்ஆர்போஸட்
7-5-2028.


ஈழத்தமிழர்- நேரு

இலங்கை தமிழர் பற்றிய கேள்விகளுக்கு நேருஜீயின் பதில் : 1961 மே 6 வீரகேசரியில்.... 

இலங்கையில் 1961ஆம் ஆண்டு ஏற்பட்ட மொழிப் பிரச்சினை தொடர்பாக அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் இந்திய லோக்சபையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர், இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் ஸ்நேகபூர்வமான முறையில் யோசனைகள் கூற முடியும் என்றும் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் இந்தியா தலையிடுவது முறையாகாது என்றும் பதிலளித்திருந்தார். 

அன்றைய மொழிக் கிளர்ச்சி தொடர்பாக நேரு கூறிய விடயத்தை 1961ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி வெளியான வீரகேசரி பத்திரிகையின் முதல் பக்கத்தில் காணலாம். 
www.virakesari.lk/article/182808
 #SriLanka #Nehru #நேரு


#*திருநெல்வேலி* #*திருப்புடைமருதூர்* #*நீதிபதி எஸ்.ரத்தினவேல்பாண்டியன்*

#*திருநெல்வேலி* 
#*திருப்புடைமருதூர்* #*நீதிபதி எஸ்.ரத்தினவேல்பாண்டியன்*
————————————
திருநெல்வேலி மாவட்டத்தில் திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில் தாமிரபரணியாற்றங்கரையில் அம்பாசமுத்திரத்திற்கு வடகிழக்கே பத்தமடை அருகே அமைந்துள்ள சிவாலயம் உள்ள திருப்புடைமருதூர் கோவிலானது மிகக் தொமையானது
.அக் கோவிலைப் புணரமைக்க அக்காலத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த அந்த ஊரின் மைந்தர் அண்ணாச்சி மறைந்த  எஸ். ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் முயற்சி எடுத்து அதற்கான செயல்பாடுகளை மேற்கொண்டார்.

அம்முயற்சிக்கு உறுதுணையாக பெரிய செல்வந்தர்கள் மற்றும் டாட்டா  பிர்லா போன்றவர்கள் கூட நிதி உதவி வழங்கிக் கோவிலை அழகுறப் புதுப்பித்தார்கள். நேர்மையான தீர்ப்புகளுக்கு பேர் போன திரு ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் சொன்னால் அப்போது அதைச் செய்வதற்கு அவ்வளவு பேர் இருந்தார்கள்.




அக்கோவிலின் சுவற்றில் வரையப்பட்டிருக்கக் கூடிய ஓவியங்கள் அனைத்தும் மிக அழகிய கலை எழில் மிக்க வேலைப்பாடுகள் நிறைந்தவை.

மிக முக்கியமாகச் சொல்வதென்றால் எல்லாமே பச்சிலைகளால் குறிப்பாகச் சொன்னால் மூலிகை வண்ணங்களால் வரையப்பட்டவை.

உலகத்தின் பல பாகங்களில் இருந்தும் கோயிலுக்கு வந்து செல்கிறவர்கள் காணும் வகையில் அந்த ஓவியங்கள் நீண்ட காலமாக அங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இத்தனை வருடங்கள் ஆகியும் அந்த ஓவியங்கள் புதிய பொலிவுடன் அங்கு காட்சியளிக்கிறது என்றால் அதற்கு காரணமாக இருந்து அதை புனரமைத்த உச்சநீதி அரசர் திரு ரத்தினவேல் பாண்டியன் அவர்களின் அரும்பணிதான் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது.

 இது இன்று இருக்கும் பலருக்குத் தெரிந்திருக்காது.  வரலாற்றில் இவை எல்லாம் குறிப்பிட வேண்டிய செய்திகளும் பதிவுகளும் ஆகும்.அவர் மாதிரி கலைகள் மீதும்  கலாச்சார மரபுகள் மீதும் பற்றுள்ள ஒரு நீதிபதியை இனிப் பார்ப்பது அரிது.

facebook.com/share/p/aDNMys…

#திருநெல்வேலி #பத்தமடை #நெல்லை #திருப்புடைமருதூர் 
#jususticeratnavlpandiyan #நீதிபதிரத்தினவேல்பாண்டியன்
#tirupudaimarthur
#tirunelvli #nellai

#KSRpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
7-5-2024.


*Be yourself, none is perfect, to get everything right*.

*Be yourself, none is perfect, to get everything right*. If something goes wrong, that is completely okay, it happens. Step up to get things back on track with a smile. Go forward in life with a twinkle in your eye and a smile on your face, but with great and strong purpose in your heart. Yes understand it's only your outlook on life that counts. If you take yourself lightly and don't take yourself too seriously, pretty soon you can find the humor in our everyday lives. And sometimes it can be a lifesaver...

#ksrpost
7-5-2024.


Monday, May 6, 2024

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்த புத்தகங்கள் வெளிவருகின்றன*.

1. கடந்த 1977-லிருந்து 47 ஆண்டுகளாக நான் தினமணியில் எழுதிய கட்டுரைகள் (இன்றைக்கு பொருந்தாதவை தவிர்த்து) ஏறத்தாழ 2000 பக்கங்களுக்கு 5 தொகுப்பாக ‘உரிமைக்குகுரல்கொடுப்போம்’
வெளிவருகின்றது. (முதல் பதிப்பு)

2. ⁠தமிழகத்தில் நீண்டகால கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள், உரிமைகள் குறித்து 500 பக்கங்களில் வெளிவருகின்றன. (உதராணமாக, நதி நீர் சிக்கல்கள், கண்ணகி கோவில், கச்சத்தீவு, சேதுகால்வாய் போன்ற பிரச்சனைகள்)

3. ⁠ முல்லைப் பெரியாறு அணை

4. தூக்குக்கு தூக்கு (இரண்டாம் பதிப்பு)

5. தமிழக மேலவை (இரண்டாம் பதிப்பு)

6. சேதுக்கால்வாய் திட்டம்  (இரண்டாம் பதிப்பு)

என்ற நூல்கள் முதல் கட்டமாக வருகின்றன. ஏற்கனவே கடந்த வாரம் ‘கனவாகிப் போன கச்சத்தீவு’ வெளிவந்துவிட்டது. மேலும் மற்ற பத்து நூல்கள்  உள்ளன.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
6-5-2024.


#*மர்ம மரணங்கள்*

#*மர்ம மரணங்கள்*
—————————- 
இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே.ஜெயக்குமார் தனசிங் (60) மர்ம மரணம் தொடர்பான விசாரணையில் பல்வேறு முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் உள்ளது.  அவர் எங்கேயாவது  நெல்லை பக்கம் பார்த்தால் அண்ணா என்பார். அவர் மரணம் அடைந்ததை ஒட்டி விசாரணைகள்நடந்துகொண்டிருக்
கிறன. பல்வேறு  மாதிரியான யூகங்கள் வெளி வருகின்றன. 

இது மாதிரியான வழக்குகள் முன்பே தமிழகத்தில் உதாரணமாக2012ல் அமைச்சர் கே என் நேரு அவர்களின் தம்பி ராமஜெயம் கொலையுண்டது இன்னும் கண்டுபிடிக்க முடியாத மர்மமாகவே இருக்கிறது. எந்த துப்பும் கிடைக்கவில்லை. பத்தாண்டுகள் கடந்து விட்டன.

அதுபோல ஆட்டோ சங்கர் விவகாரத்தில் இதுவரை முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. அதிலும் இன்னும் பல மர்மங்கள் ஒளிந்து கிடக்கின்றன.

ராஜீவ் காந்தி மரணத்திலும் குற்றப் பின்னணிகள் பற்றி ஏதும் தெளிவாகச் சொல்லப்படவில்லை. மேலும்  பல வகையான குளறுபடிகளோடு அவ்வழக்கிற்கான காரணங்களை முழுமையாக அல்லது ஒரு கறாரான விசாரணைகளின் வழியே இன்னும் கண்டுபிடிக்கப்பட்ட முடியவில்லை. உண்மையான குற்றவாளிகள் யார் என்பது இதுவரை வெளிப்படவில்லை. 

அண்ணாமலை பல்கலைகழக மாணவர்
உதயகுமார்….
பூலவாரி சுகுமாரன், தா. கிருட்டிணன் என…..
அதேபோல் இந்திரா நகர் பிரேமா வழக்கு சம்பந்தமாக பல பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.1980களில் நடந்த வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டுக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதுபோல தமிழகத்தில் தொடர்ந்து;  திரைத்துறையை சார்ந்தவர்களை  தாறு மறக்க தாக்கி 'இந்து நேசன்' பத்திரிக்கையில் எழுதி வந்த லட்சுமிகாந்தன்.
இதனால் 08-11-1944 அன்று லட்சுமிகாந்தன் மதராஸ் மாகாணம் புரசைவாக்கம் பகுதியில் ரிக்‌ஷாவில் சென்ற போது மர்மநபர்களால் கத்தியால் குத்தப்பட்டார்.  1945 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவ்வழக்கு மதராஸ் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. தியாகராஜ பாகவதர் உள்ளிட்ட 8 பேருக்காக அன்றைய பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட இந்தியாவிலிருந்த மிகப்பெரிய வழக்குரைஞர்கள் வாதிட்டனர்.
வழக்கில் தயாரிப்பாளர் ஸ்ரீராமுலு நாயுடு மற்றும் இன்னொருவர் மீது குற்றச்சாட்டு வலுவாக இல்லாத காரணத்தால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். மீதமிருந்த தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் உட்பட அனைவருக்கும் குற்றத்தில் தொடர்பு இருப்பதாக கூறி 1945-ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்தது. இதிலும் சரியாக விசாரிக்கப்படவில்லை என அன்று விமரசானங்கள் எழுந்தன.

இப்படி நடந்து வரும் பல மர்மமான கொலைகள் அதற்கான வழக்குகள் குற்றவாளிகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாமலே கிடப்பில் இருக்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் காவல் நிலைய மரணங்கள் மட்டும் 100க்கு மேல் நடந்திருக்கின்றன.

பாளையங்கோட்டை மருத்துவமனை எதிரில் ஒரு பெண்ணை பட்டப்பகல் 12 மணிக்கு வெட்டிக் கொலை செய்து விட்டு போகிறார்கள்.

இதுபோல பல வழக்குகள் காரணம் என்னவென்று தெரியாத அளவில் தமிழகத்தை சுற்றி நடந்து கொண்டிருக்கின்றன. சட்டம் ஒழுங்கு குறித்த நடவடிக்கைகள் ஏன் தாமதப்படுத்தப்படுகின்றன. அல்லது ஏன் கண்டுபிடிக்க முடியாமல் போகின்றன. இது போன்ற காரணங்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.

இப்படியான பல மர்ம மற்றும் காவல் மரணங்கள் பொதுமக்கள் மனதில் விளைவிக்கும் அச்சம் என்பது உளவியல் பூர்வமாக மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். 

மக்கள்  நல அரசு இவற்றின் மீது விழிப்புணர்வோடு இருக்க  வேண்டும்.  அனைத்து வழக்குகளையும் கண்டுபிடித்து குற்றவாளிகளை அம்பலப்படுத்த வேண்டும்.  சட்ட ஒழுங்கு குறித்த அவர்களின் நடவடிக்கைகள் நவீனமான முறையில் மாற்றப்பட வேண்டும்.தமிழகத்தில் லஞ்சம் ஊழல் ஒருபுறம் இருந்தாலும் அன்றாடவாழ்வில் பொதுமக்கள் தினம் தினம்  இப்படி பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
6-5-2024.


நம்மை விரும்பாதவர்களை தேடிக்கொண்டே இருக்கும் அளவிற்கு இந்த வாழ்க்கை அவ்வளவு பெரியதல்ல! நமக்கு அவர்கள் தேவையும் இல்லை . நாம் அடிமைகள் அல்ல. அதுதான் உண்மையான #தன்மானம், #சுயமரியாதை

நம்மை விரும்பாதவர்களை தேடிக்கொண்டே இருக்கும் அளவிற்கு இந்த வாழ்க்கை அவ்வளவு பெரியதல்ல! நமக்கு அவர்கள் தேவையும் இல்லை . நாம் அடிமைகள் அல்ல. அதுதான் உண்மையான 
#தன்மானம், #சுயமரியாதை

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
6-5-2024.


Make a choice to get better, and to move forward. Move boldly against any currents*

*Make a choice to get better, and  to move forward. Move boldly against any currents*. Be persistent and consistent with your change, no matter what happens. The difference between where you currently are and where you visualize yourself, is in your daily choices and actions to do better and get better. Don't look back. Don't give up. Don't judge any moments that might cause you to revert back. The point is to recognize, decide, and go forward always. You have a great purpose, and it is time to live it out. Be bold and keep moving... 
••••••••••••••••

“*In this world everything attracts something*. 
*Those of the Fire attract those of the Fire*. 
*Those of the Light attract those of the Light*.”

— #*Rumi*

#ksrpost
6-5-2024.


Sunday, May 5, 2024

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️
•••••
இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள் உட்பட இந்திய அரசியலை அறிந்த மிகநுட்பமானவர்கள் உட்பட ஏன் தங்களின் அன்றாட வாழ்க்கையின் ஊடாக  தெருக்களில் நின்று அரசியலைப் பேசி வரும் பொதுமக்கள் வரை குழம்பிப் போய்த்தான் இருக்கிறார்கள்.

இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பிற்காக நிற்கும் ராகுல் காந்தி
ஏன் இடதுசாரிகள் ஆட்சியில் இருக்கும் கேரளாவில் மீண்டும் மீண்டும் நிற்க விரும்புகிறார்.

அவரை எதிர்த்து அங்கே டி ராஜா அவர்களின் மனைவி கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிடுகிறார். அந்த வகையில் அவர் அங்கே ராகுல் காந்தியைக் கடுமையாக எதிர்த்து விமர்சிக்கிறார். அவரைத் தோற்கடித்து தான் வெற்றி பெற விரும்புகிறார். இதெல்லாம் புரிந்து கொள்ளக் கூடியது தான். 

பிரனாய்ராயும் வயநாட்டில் எப்படியேனும் ராகுல் காந்தியைத் தோற்கடிக்க வேண்டும் என்று தான் உள்ளார விருப்பப்படுகிறார்.

ஆக ஏற்கனவே காங்கிரசிற்கும்  கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் உள்ள முரண்பாடுகள் வய நாட்டில் வெளிப்படுகிறது. சரிதான் காங்கிரசுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும்  ஆகாது என்று நாம் வரலாற்றுப் பூர்வமாக உணர்ந்துள்ளோம். உண்மையில் கடந்த 60 வருடங்களாக காங்கிரஸை மாற்றி மாற்றி தோளில் தூக்கிச்சுமந்தவர்கள்தான் இந்தியக் கம்யூனிஸ்ட்கள்.

இப்போது நமக்குள் ஒரு கேள்வி எழுகிறது. உத்திரபிரதேசத்தில் எப்பொழுதும் காங்கிரஸின் செல்லத் தொகுதியான ரேபரேலியில் நேரு இந்திரா முதற்கொண்டு அவர்கள் குடும்பமே நாடாளுமன்றத் தேர்தலில் எப்போதும் போட்டியிட்டு ஜெயித்து வந்துள்ளார்கள். 

ஆனால் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதே ரேபரேலியில் ராகுல் காந்தி காங்கிரஸின் செல்லத் தொகுதியில் போட்டியிட்டு ஸ்மிர்தராணியிடம் தோற்றுப் போகிறார்.

அந்த அச்சத்தின் காரணமாக அவர் கேரளாவில் உள்ள வயநாட்டில் வந்து போட்டியிடுகிறார்… என்று தானே நாம் நினைக்கிறோம். அப்புறம் மீண்டும் நம்மிடம் ஒரு கேள்வி மிஞ்சுகிறது. தமிழ்நாட்டில் திராவிட இயக்கமும் காங்கிரஸ் கட்சியும் ஒன்றுக்கொன்று தழுவிக் கொண்டு கூட்டணி ஏற்படுத்திக் கொண்டதோடு இந்தியா முழுமைக்குமான கூட்டணிலும் பங்கு வகிக்கிறார்கள்.

அப்படியான நெருக்கத்தின் அல்லது நேரு இந்திரா குடும்பத்தின் மீதான அன்பின் பெயரால் தமிழக மக்களின் ஆதரவை பெற்ற ராகுல் காந்தி  தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் இ‌‌.ந்.தி.யா கூட்டணியில் இடம் பெற்றுள்ள திராவிட முன்னேற்றக்கழகத்தின் நலலாதரவைப்பெற்று  இணைந்து    போட்டியிட்டு வெற்றி வாய்ப்பைப் பெறலாமே.

அதைவிட்டு விட்டு ஏன் வயநாட்டில் போட்டியிடுகிறார்.

இங்கேதான் நாம் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். பிராந்திய மாநிலக் கட்சிகளின் ஆதரவும் வேண்டும் ஆனால் மத்தியில் காங்கிரஸ் தனி மெஜாரிட்டி பெறவேண்டும். இதுதான் காங்கிரசின் பாசிச மனம்.

அந்தவகையில் அவர் இடதுசாரி அரசியலை ஒழித்துக்கட்டி விட்டு 
இன்றைய வலதுசாரி அரசியலில் கொழுத்து வளர்ந்திருக்கும் திமுகவை தென் மாநிலங்களின் புத்திசாலித்தனமான அதாவது ஒரு ஊழல் அமைப்பை சட்டசபை அதிகாரமாக வளர்த்து வந்திருப்பதை மக்கள் அறியாத அதன் நவீன மோசடிகளை ராகுல் புரிந்து கொள்கிறார். ஏற்கனவே தாங்கள் ஆட்சியில் இருந்தபோது பலவகையிலும் ஊழல் செய்து மாட்டிக்கொண்ட காங்கிரஸின் முட்டாள்தனத்திற்கு பதிலாக எப்படி இவர்கள் விஞ்ஞானப் பூர்வமாக மாட்டிக் கொள்ளாமல்  மாட்டிக் கொள்ளாமல் ஊழல் செய்கிறார்கள் என்றவகையில் மகிழ்ச்சியுடன் திமுகவுடன் இனம் காண்கிறார். அவருக்குத் தமிழ்நாட்டில் திமுக வழியே ஆன ஆதரவு உறுதி செய்யப்பட்டு விட்டது.தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் மத்தியில் காங்கிரஸ் வந்தால் நமக்கு அமைச்சரவையில் வாய்ப்பு உண்டு என்பதை மனதில் வைத்திருக்கிறார்.ஆகவே அங்கு போட்டியிடாமல் ராகுல்காந்தி கம்யூனிஸ்ட் மாநிலத்தில் ஒரு பிரதம வேட்பாளர் அந்தஸ்த்தில் புத்திசாலித்தனமாகப்போட்டி இடுகிறார். அது ஒரு புறம் இருக்கட்டும் .

இப்போது நாம் இன்றைய நாடாளுமன்றத்தேர்தல்ப் பார்வைக்கு வந்துவிடுவோம்.

வயநாட்டில் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிடும் டி.ராஜா அவர்களின் மனைவியான ஆனி என்ன சொல்ல வருகிறார் என்பதை கேட்டால் உங்களுக்கு நகைப்பு வந்து விடும். 

ஒருவேளை வயநாட்டில் தான் தோற்றுப் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று அஞ்சும் ராகுல்காந்தி உபி ரேபரேலித் தொகுயிலும் தனது தாயான இந்திரா காந்தி எப்போதும் இரண்டு தொகுதியில் நின்றது போல   தனது வேட்பு மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.

அதை ஒட்டி சிபிஎம் சார்பாக வயநாட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் ஆனி சொல்கிறார்.நான் ராகுல் காந்திக்கு சார்பாக ரேபரேலித் தொகுதியில் அவரது வெற்றி வாய்ப்பிற்கென  அங்கு சென்று பிரச்சாரம் செய்வேன் என்கிறார்.

எனக்குத்தான் புரியவில்லை உங்களுக்கு ஏதேனும் புரிகிறதா? 
கேரள வயநாட்டில் ராகுல்காந்தியைத் தோற்கடிப்பார்களாம்.
உபி ரேபரேலியில் அவரைச்ஜெயிக்கவைப்பார்களாம்.

ஆக மொத்தத்தில் கொள்கைகளோ கோட்பாடுகளோ மக்கள் நலனோ இந்த பாராளுமன்றத தேர்தலில் அதனதன் கூட்டணிகளோடு முன்னிறுத்தப்படவில்லை.

எல்லோருக்கும் பதவி ஆசை மட்டுமே இருக்கிறது அதை வைத்து அரசியல் வியாபாரம்   செய்து தங்களை வளப் படுத்திக் கொள்ளலாம் என்பதே தேர்தல் வெற்றியாகப் பார்க்கப்படுகின்றது என்பதே உண்மை.

குறிப்பாக இ.ந்.தி.யா கூட்டணி தங்களுக்கான மாநில உரிமைகளைக் கேட்கவில்லை.மாறாகப்
 பதவியைப்பெற்று தங்கள் குடும்பத்திற்கான அரச முதலாளித்துவத்தையே தேர்தல் மூலம் சுலபமாகச் பெற்றுக்கொள்கிறார்கள் என்பதையே இங்கு நான் மீண்டும் மீண்டும் முன்வைக்கிறேன்.

#இந்தியாதேர்தல்க்கூட்டணி
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
5-5-2024.


there was no one left To speak out for me

First they came for the Communists
And I did not speak out
Because I was not a Communist

Then they came for the Socialists
And I did not speak out
Because I was not a Socialist

Then they came for the trade unionists
And I did not speak out
Because I was not a trade unionist

Then they came for the Jews
And I did not speak out
Because I was not a Jew

Then they came for me
And there was no one left
To speak out for me


Lost on Me by Veronica Raimo and translated by Leah Janeczko Longlisted for the International Booker Prize 2024

Lost on Me by Veronica Raimo and translated by Leah Janeczko

Longlisted for the International Booker Prize 2024

Deliciously enjoyable' Katherine Heiny

'I adored it' Naoise Dolan

'Wild, funny and disturbing' Roddy Doyle

'Thrillingly original' Monica Ali

'It would be simply impossible for a book this good to go unnoticed' Big Issue

A delightfully funny Italian novel about sex, love, family - and how a writer transforms her life into art

Vero has grown up in Rome with her eccentric family: an omnipresent mother who is devoted to her own anxiety, a father ruled by hygienic and architectural obsessions, and a precocious genius brother at the centre of their attention. As she becomes an adult, Vero's need to strike out on her own leads her into bizarre and comical situations: she tries (and fails) to run away to Paris at the age of fifteen; she moves into an unwitting older boyfriend's house after they have been together for less than a week; and she sets up a fraudulent (and wildly successful) street clothing stall to raise funds to go to Mexico. Most of all, she falls in love - repeatedly, dramatically, and often with the most unlikely and inappropriate of candidates.

As she continues to plot escapades and her mother's relentless tracking methods and guilt-tripping mastery thwart her at every turn, it is no wonder that Vero becomes a writer - and a liar - inventing stories in a bid for her own sanity.

Narrated in a voice as wryly ironic as it is warm and affectionate, Lost on Me seductively explores the slippery relationship between deceitfulness and creativity (beginning with Vero's first artistic achievement: a painting she steals from a school classmate and successfully claims as her own). Deceptively simple, its tenderness offset by moments of cool brutality, Lost on Me is a masterwork of human observation

@hachette_india 
@viragopress 
#BahrisonsAt70 .


*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*. Learn that the simplest of times brings the grandest of pleasures and the hardest goodbyes often lead to the best hellos. Understand that crazy chances guide you to unexpected discoveries and that tough times unveil the sincerity of people. Learn to have a mind that is open to everything and attached to nothing. Learn to hold onto your smile every day and free yourself from all things that make you unhappy.... 

( Pic-Actress Vidhubala 1974)

#ksrpost
 5-5-2024.


Saturday, May 4, 2024

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to know when to let go and then do it.You got to know when to hold and know when to fold and know when to walk away and know when to run.Believe yourself  and understand you have little power to choose what happens, but you have complete power over how you respond. Start where you are. Use what you have. Do what you can and keep going.....

#ksrpost
4-5-2024.


Friday, May 3, 2024

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect*

Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 1981. Their decision had a ripple effect on other parts of Tamil Nadu. It was reported that over 2,000 families had renounced Hinduism in a span of eight months, as against 1,500 between 1944 and 1980.

The Hindu 
3-5-2024

1981 மீனாட்சிபுரம் மதமாற்றம் என்பது தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டத்தின், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின், தேன்பொத்தை ஊராட்சியில் உள்ள தே. மீனாட்சிபுரம் கிராமத்தில், 1981ஆம் ஆண்டில் நூற்றுக்கணக்கான இந்து சமயத்தைச் சேர்ந்த தலித்துகள், சாதி பாகுபாடுகளை எதிர்த்து இஸ்லாம் சமயத்துக்கு மாறிய நிகழ்வாகும்.
இந்தச் சம்பவம் இந்தியாவில் மத சுதந்திரத்தின் மீது விவாதத்தைக் கிளப்பியது மற்றும் அரசு மதமாற்றச் சட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்தது.

#மீனாட்சிபுரம்மதமாற்றம்_1981
#Meenakshipurammassconversion 

#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
3-5-2024.


#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing*



, a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not come again is what makes it so sacred. Do what you feel in your heart to be right for you'll be criticized anyway. Accept both compliments and criticism. It takes both sun and rain for a flower to grow. Respect yourself. Yes respecting yourself also means being mindful of the things you allow to pass through your eyes and ears. Choose content, knowledge, and conversations that uplift, not undermine...

#ksrpost
3-5-2024.

Thursday, May 2, 2024

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்)

மதுரை- #அழகர்கோவில்
சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே...
-#பெரியாழ்வார்

#அழகர்கோவில்
#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
2-5-2024.


காடு- மலை….

முடிந்த அளவு மரசெடிகள் நட்டு வளர்க்கனும் எல்லா..அந்தந்த பகுதி சூழலகளுக்கு ஏற்றவாறு..

பூமியைக் காப்பது பற்றி நான் உரையாடப்போவது இல்லை. ஏனெனில், பூமிக்குத் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளத் தெரியும்.

#மலைகளை வெட்டுகிறீர்களா? 
நன்றாக வெட்டுங்கள். 
பெருங் கடல்களுக்குக் கீழே உள்ள கண்டத் திட்டுகளை சில அடிகள் நகர்த்திக்கொண்டால், கடலுக்கு மேலே புத்தம் புதிய மலைகள் முளைத்து வந்து விடும். 

#இமயமலை பூமியால் அப்படி உருவாக்கப் பட்டதுதான். பெருங்கடலுக்கு அடியே உள்ள கடின நிலத்தை ஓரிரு ஆழிப்பேரலைச் சீற்றங்கள், சில நிலநடுக்கங்கள் வழியாக அப்படியே மேலே கொண்டுவந்துவிடுவது பூமிக்கு எளிதான செயல். இமயமலையின் உச்சியில் இப்போதும் கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கிடைக்கின்றன.

எரிவாயு எடுக்கிறீர்களா? 
நன்றாக எடுங்கள். அதற்காக நிலத்தைத் தோண்டி நிலத்தடி நீரை உறிஞ்சித் துப்புகிறீர்களா?
நன்றாகத் துப்புங்கள்.

ஒரே ஒரு #நிலப்பிளவு, நிலத்தின் மேல் உள்ள பல கோடி உயிரினங்களை உள்ளே
 விழுங்கிக் கொள்ளும்.
 அந்த #உயிரினங்கள் யாவும் மட்கி, எரிவாயுவாகவும் தங்கமாகவும் வைரமாகவும் நிலக்கரியாகவும் இன்னும் பல விலைமதிப்பற்ற ‘செல்வங்களாகவும்’ மாற்றப்படும்.

#காடுகளை அழிக்கிறீர்களா?
 நன்றாக அழியுங்கள்.
ஒரே ஒரு பெருமழை, காடுகளை அழித்து நீங்கள் நட்டுவைத்த வண்ணக்கொடிகளையும் 
கட்டி வைத்தக் கட்டடங்களையும்
விழுங்கிச் செரித்துவிடும். 
ஆகப்பெரிய அரண்மனைகளின் மதில்களில்கூட அரசமரங்கள் முளைத்துக்கிடக்கும்.

#பூமி, தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும். 
அதற்குப் பின்னர், `#முன்னேற்றம்' `#வளர்ச்சி' போன்ற சொற்கள் எழுதப்பட்ட புத்தகங்களும் பதாகைகளும் ஏதோ ஒரு கடலுக்கு அடியில் அல்லது ஏதோ ஒரு பனிமலையின் உச்சியில் சிதைந்து கிடக்கும் கழிவுகளாகத்தான் இருக்கும்.




ஆயிரம் சூரியன்
 ஆயிரம் சந்திரன் 
ஒரே ஒரு பூமி

நிறுத்து அனைத்து
அழிவு திட்டங்களையும் நிறுத்து.. 
நிறுத்தி  உன்னை
 நீ காப்பாற்றிக்கொள் .. 
இல்லாவிடில்
 பூமி தன்னை காப்பாற்றிக்கொள்ள
 உன்னை கொல்லும்..

திருக்குற்றாலக்குறவஞ்சி பாடிய #திரிகூடராசப்பக்கவிராயர் வீடு இன்றும்…. #குற்றாலம் மேலகரம் நடுத்தெரு

#திருக்குற்றாலக்குறவஞ்சி பாடிய 
#திரிகூடராசப்பக்கவிராயர் வீடு இன்றும்….
#குற்றாலம்
மேலகரம்
நடுத்தெரு
—————-


மா கவி பாரதி

மா  கவி #பாரதியை கொண்டட வலம்புரி ஜானின் இந்த ‘’பாரதி - ஒரு பார்வை’’ யும் (பதிப்பு-1982)அவசியம் வாசிக்க வேண்டும்.

#பாரதி
#வலம்புரிஜானின்_பாரதிஒரு பார்வை
#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸட்
2-5-2024



@highlight


*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*, then you are living your life wrong and not true. Everything you do should resolve around you. Every person, place and moment should start and end with you. This is your life you shouldn't spend it on dull things and on people  who don't understand and love you. You only live once it is your job to make it count. so let everyday be yours, own it and never apologize for being who you are(yourself).....

#ksrpost
2-4-2024.


Wednesday, May 1, 2024

#கனவாகிப்போனகச்சத்தீவு #கச்சதீவு #KanavaiPonaKachaTheevu #Katchatheevu

‘*கனவாகிப் போன கச்சத்தீவு’ என்னும் என்னுடைய விரிவு படுத்தப்பட்ட நான்காவது பதிப்பு வெளிவருகிறது.  நண்பர்கள், ஊடக தோழர்கள், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி நூலகங்களுக்கு விரைவில் பிரதிகளை அனுப்ப வேண்டும்*.

*Revised fourth edition of my book 'Kanavai Pona Kacha Theevu' is almost ready for release. I'll soon be sending copies to friends, members of the media, and university and college libraries*.

*work and knowledge are the well-springs of our life. They should also govern it. Attention is the rarest and purest form of generosity*.

#கனவாகிப்போனகச்சத்தீவு
#கச்சதீவு
#KanavaiPonaKachaTheevu
#Katchatheevu

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸட்
1-5-2024.


*நாம் நாமாக வாழ நினைத்தால் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை*,

*இந்த பாடல் இருத்தலியல் குறித்த கேள்வியை 9ஆம் நூற்றாண்டில் எழுப்பியிருக்கிறது* ..

*வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி*
*ஊனாகி உயிராகி உண்மையுமாய்* *இன்மையுமாய்*
*கோனாகி யானெனதென்  றவரவரைக் கூத்தாட்டு*
*வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே*

-*மாணிக்கவாசகர்*.

*நாம் நாமாக வாழ நினைத்தால்*
மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை*, 

நாம் மற்றவரைப் போல் வாழ 
நினைத்தால்  மகிழ்ச்சிக்கு 
வாய்ப்பே இல்லை....
காலத்திடம் விடுவிடுங்கள் 

உங்களிடம் நடித்தவர்கள் விரைவில் மேடையை விட்டு ஓடிவிடுவார்கள்...

சோகத்திலும்  மகிழ்ச்சியிலும் உங்கள் பலவீனங்களை 
உளறி வைக்காதீர்கள்...

அதையே தனக்கு சாதகமாக  பயன்படுத்திக் கொள்ளும் உலகமிது..!!

வாழ்க்கை என்பது இருட்டில் நடக்கும் நீண்ட நெடிய போராட்டம். வெற்றிகரமான ஓட்டப்பந்தய வீரன் தன் சிறிய தீப்பந்தத்தைக் கைமாற்றிவிடுவதைப் போன்று உங்களது தனித்த சிந்தனையை மனித குலத்துக்கான பங்களிப்பாக விட்டுச்செல்வதே நீங்கள் ஆற்றக்கூடிய ஒரே மகத்தான பணி.

தன்னை மிஞ்சியவர் யாருமில்லை என்று நினைப்பவர்களிடம் விவாதம் செய்யாமலிருப்பதுதான் ஆகச்சிறந்தது ....

தளர்த்திக்கொள்ள 
விரும்பாத
வாழ்வின் பிடிமானம்
வேண்டும்.

#ksrpost
1-5-2024.


Understand everything that surrounds you is temporary only

Understand  everything that surrounds you is temporary only the love from your family will last forever and be thankful for everybody in your family. GOOD or BAD- PAST or PRESENT they all made you the person that you are Today. As long as we have memories yesterday remains, as long as we have hope tomorrow awaits... . 

Pic-Aaranya Alli

#ksrpost
1-5-2024.


Tuesday, April 30, 2024

*இவரை தம்பி பிரபாகரன், அ.அமிர்தலிங்கமும் இவரிடம் மாற்று கருத்து இருந்தாலும் ஈழவேந்தனை மதிப்பார்கள். தமிழகமும் அறிந்த முக்கிய புள்ளி* . *என்ன வேதனை என்றால், இவர் மறைவு குறித்து, ஊடகங்களிலோ செய்தித்தாள்களிலோ செய்திகளாக இன்று வரவில்லை. நாம் எப்படி வரலாற்றை பாதுகாக்கப் போகிறோமோ*? #ஈழவேந்தன் #eelavendan

*ஈழத்தமிழர் போராட்டத்தில் நன்கு அறிந்த தலைவர் ஈழவேந்தன் நேற்று காலமானார்*.

*இவரை தம்பி பிரபாகரன், அ.அமிர்தலிங்கமும் இவரிடம் மாற்று கருத்து இருந்தாலும் ஈழவேந்தனை மதிப்பார்கள். தமிழகமும் அறிந்த முக்கிய புள்ளி* .
*என்ன வேதனை என்றால், இவர் மறைவு குறித்து, ஊடகங்களிலோ செய்தித்தாள்களிலோ செய்திகளாக இன்று வரவில்லை. நாம் எப்படி வரலாற்றை பாதுகாக்கப் போகிறோமோ*?

#ஈழவேந்தன் #eelavendan

#ksrpost
30-4-2024.


*Life is all about living in peace*.

*Life is all about living in peace*.Life is not about  ups and down, right and wrong, success and failure. Know that failure simply states that you lack the necessary skills and knowledge but when you overcome these shortcomings you achieve success in life and career. Everyone has to face failure in life, but only those who have the courage to overcome the shortcomings reach the peak of success. It’s ok to face failure, your today’s trouble will be tomorrow’s reward, just don’t give up.Keep moving... 

#ksrpost
30-4-2024.


Monday, April 29, 2024

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*..

————————————
என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர் 
ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். மாணிக்கவாசகர் கனகேந்திரன் (ஈழவேந்தன்)
14 செப்டம்பர் 1932 - 
28 ஏப்ரல் 2024

கடந்த 1983 இல் என் ஏற்பாட்டில் சென்னை உயர்நீதி மன்றத்தில்
என் சீனியர் ஆர். காந்தி தலைமையில் ஈழத்தமிழர் துயர் குறித்து பேசினார். அதே ஆண்டு கோவில்பட்டி காந்தி மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பேச அழைத்து சென்றேன். நெடுமாறன், வைகோ இதில் பங்கேற்றனர். எனது கிராமத்தில் தங்கி எங்கள் பம்பு செட் கிணற்றில் குளித்து சந்தோஷ பட்டார். எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் மதுரையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில் என்னுடன் கலந்து கொண்டார் . ஆய்வு கட்டுரையை வாசித்தார்.

கொழும்பு மத்திய
வங்கியில் பணி புரிந்து கொண்டே தமிழரசுக்கட்சி மேடைகளில் முழங்கிய
அந்தக் குரல் ஓய்ந்து விட்டது.
நம்ப முடியவில்லை.இறுதியாக 2008இல் கொழும்பில் சந்தித்தது…
இன்றும் மனத்திரையில்.
தமிழ் தமிழ் தமிழீழம் என்று இறுதிவரை
செயற்பட்டவர்.
தந்தையாரின் பிரிவுத் துயரில் ஆழ்ந்திருக்கும் அன்னாரின் அன்பு மகள்
யாழினி அரசேந்திரன் மற்றும் குடும்பத்தவரின் துயரில் நானும் பங்கு
கொள்கிறேன்.
ஆழ்ந்த இரங்கல்,

#ஈழவேந்தன் #ஈழம்


When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*

*When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*. But always remember so are You. Belive the strength in you, yes when you are having a rough time, just remember that hardest battle can only be faced by strongest soldiers. Hardest and rough times are teachers in life, yes, no matter who tries to teach you lessons about life, you won't understand it until you go through it on your own. You know experience is the hardest kind of teacher. It gives you the test first and the lesson afterward.. Be bold and keep moving..

#ksrpost
29-4-2024.


Sunday, April 28, 2024

#*Salman Rushdie* , #*Knife*

#*Salman Rushdie* , #*Knife* 
————————————
Milan's words in "Knife" resonate deeply: "'Dad,' he said, 'there are so many cases where somebody gets stabbed just once and dies. And you got stabbed like fifteen times and you're still alive.'"
-Salman Rushdie , Knife
( his latest work) pg. no 83
•••
Me: They say one betrayal can leave you broken. But here I am, like the character in the quote, piecing myself back together, stronger with each blow.  For  52 years, I've encountered  unexpected  thankless villains , even while trying to help them. Despite the betrayals, I stand tall, my smile a testament to my resilience.

#SalmanRushdie , #Knife

#ksrpost
28-4-2024


*Being happy and joyful doesn't mean everything is perfect; it means you've learned to see the beauty in bad. Don't wait for things to get easier, simpler, better*.

*Being happy and joyful doesn't mean everything is perfect; it means you've learned to see the beauty in bad. Don't wait for things to get easier, simpler, better*. Life will always be complicated. Look for small opportunities for happiness in the moment you are in right now. Otherwise, you might run out of time. You can't often choose your circumstances, but you can better control your reactions and emotions. Choose small moments of joy. Yes enjoy the little things, for one day you may look back and realize they were the big things.... 

#ksrpost
28-4-2024.


இந்திய ஆட்டோமொபைல் துறையின் முன்னோடியான டி.வி.சுந்தரம் ஐயங்கார்

ஏப்ரல் 28 - பிரபல T.V.S. குழுமத்தின் நிறுவனர் T.V. சுந்தரம் நினைவு நாள் இன்று (1955 ).

இந்திய ஆட்டோமொபைல் துறையின் முன்னோடியான டி.வி.சுந்தரம் ஐயங்கார் 1877ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் பிறந்தார்.

இவர் வழக்கறிஞர் ரயில்வே குமாஸ்தா வங்கி ஊழியர் என வேலை செய்து வந்தார். தந்தையின் மறைவுக்குப் பிறகு தொழில்துறையில் இறங்கினார். முதலில் தேக்கு மரங்களை இறக்குமதி செய்து மர வியாபாரத்தை தொடங்கினார்.

இவர் 1911ல் தி.வே.சுந்தரம் ஐயங்கார் அண்ட் சன்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். அதைத்தொடர்ந்து 1912ல் தஞ்சாவூர் - புதுக்கோட்டை வழித்தடத்தில் பேருந்து சேவை தொடங்கி தென்னிந்தியாவில் சாலைப் போக்குவரத்து துறைக்கு அடித்தளமிட்டார்.

பேருந்து கட்டணம் இவ்வளவு தூரத்துக்கு இவ்வளவு கட்டணம் ரசீது வழங்குவது ஆகிய நடைமுறைகளை கொண்டுவந்தார். கால அட்டவணைப்படி பேருந்துகள் புறப்பட்டு சென்றடையும் நடைமுறையையும் நாட்டிலேயே முதல்முறையாக அறிமுகப்படுத்தினார்.
அதன் பின்னர் ரப்பர் புதுப்பிப்பு ஆலை தி மெட்ராஸ் ஆட்டோ சர்வீஸ் லிமிடெட் சுந்தரம் மோட்டார் லிமிடெட் வீல்ஸ் இந்தியா ப்ரேக்ஸ் இந்தியா டி.வி.எஸ் இன்ஃபோடெக் சுந்தரம் ஃபைனான்ஸ் என டி.வி.எஸ் குழுமத்தில் ஏராளமான நிறுவனங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
டி.வி.சுந்தரம் ஐயங்கார் தனது 78ஆவது வயதில் (1955) காலமானார்
@aratnam @tvsmotorcompany


Saturday, April 27, 2024

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கிறது என்று கேட்டார்.

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும்  சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும்
போட்டியாக  வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே  வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள் என்றேன்.

#ksrpost
27-4-2024.

#EVMs - #History #elections #ElectionCommissionOfIndia , its journey "A long way from 1984: When SC junked ECI's first EVM experiment"

#EVMs - #History #elections #ElectionCommissionOfIndia , its journey

"A long way from 1984: When SC junked ECI's first EVM experiment"


*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in the direction of the best. On the way you may find some rough roads but they lead you to a better life. The two most important days in your life are the day you are born and the day you find out why. So understand, when life is good, make sure you enjoy and receive in fully. And when life is not so good, remember that it will not last forever and better days are on the way....

#ksrpost
27-4-2024.


Friday, April 26, 2024

*Sometimes you might feel like giving up on everything*.

*Sometimes you might feel like giving up on everything*. You might have both good  and bad days, but more bad than good or so it seems. Everyday you might have more question than answers "what is this all for?"," am I making the right choices?" or "am I supposed to be here, now?" and most of the time you don't even know how to explain them. Life is hard, but you have to keep going,you have to rise above the waters of your soul, and bloom, no matter how hot the fire is. Believe, you're a warrior and a soldier filled with both pain and love. And life is just another beast you were meant to tame and you are the one better for the job... 

#ksrpost
26-4-2024.


Thursday, April 25, 2024

23rd April Happy #Shakespeare_Day! Let's pay a tribute to the true genius by remembering and sharing his quotes. I'm sharing a few here. Comment your favourite quotes too.

23rd April Happy #Shakespeare_Day!

Let's pay a tribute to the true genius by remembering and sharing his quotes. I'm sharing a few here. Comment your favourite quotes too.

° We know what we are, but know not what we may be.
° Love all, trust a few, do wrong to none.
° It is not in the stars to hold our destiny but in ourselves.
° Better three hours too soon than a minute too late.
° If music be the food of love, play on.
° A fool thinks himself to be wise, but a wise man knows himself to be    a fool.
° Some are born great, some achieve greatness, and some have greatness thrust upon them.
° Good night, good night! Parting is such sweet sorrow, that I shall say good night till it be morrow.
° Hell is empty and all the devils are here.
° Brevity is the soul of wit.
° This above all; to thine own self be true.
° Cowards die many times before their deaths; the valiant never taste of death but once.
° We are such stuff as dreams are made on; and our little life is rounded with a sleep.
° What's in a name? That which we call a rose by any other name would smell as sweet.

I know so many beautiful quotes are left. Do add them in comment.

#shakespeareandco


Nandini Satpathy

#NandiniSatpathy: 
The Iron Lady of Orissa by Pallavi Rebbapragada..




Nandini Satpathy was graduated from Madras Presidency college. Met her during my NSUI years as  union minister. Delhi and then Madras.

Obliterated from the pages of history, as women often are, Odisha’s first woman Chief Minister, Nandini Satpathy, known also as the Iron Lady of Orissa, was born to a family of revolutionaries and intellectuals. During her teenage years in the ‘40s, this petite girl in a starchy cotton saree was jailed for pulling down the Union Jack from atop the edifice of Ravenshaw College.

Thus began the makings of a force to be reckoned with.

Coming up through the ranks to ultimately reach the hallowed halls of the Rajya Sabha at the mere age of 31, this grassroots student politician went on to become the I&B minister in Indira Gandhi’s first government, where she facilitated the working of the Free Bangla Radio that played a key role in the information war that was ’71. She hobnobbed with the likes of Raj Kapoor, Nargis, and Meena Kumari as India produced films around socialist films and warmed up to Russia. And still, in Delhi circles, she is best remembered as ‘Indira Gandhi’s friend’.

@simonandschusterin


Remember, if you don't like a situation, you can either take action to change it or change the way you think about it.

Remember, if you don't like a situation, you can either take action to change it or change the way you think about it. Either way, choosing unhappiness is no way to live. Control what you can control.  Don’t lose sleep worrying about things that you don’t have control over because, at the end of the day, you still won’t have any control over them. Whatever may be your age, if you are planning for tommorow, you are still young to achieve it..... 

#ksrpost
22-4-2024.

அனைத்தும் விலை போன காலத்தில் எம்பி பதவி யாரிடம் இருந்து என்ன பயன். ஒட்டுமொத்த பங்குதாரர்கள் தேர்தலை நடத்தி தங்கள் வணிகத்தை செய்யப் போகிறார்கள். இதில் நாம் கருத்து கூற என்ன இருக்கிறது.

எலக்சன்ல யார் ஜெயிச்சு வருவாங்க எத்தனை சீட்டு வருவாங்கன்னு டெலிபோன்ல நண்பர்கள்  கேட்கிறார்கள்.

யார் ஜெயிச்சு வந்தா மட்டும் என்ன ஆகப்போகுது! 50 வருஷமா கெடக்கிற பிரச்சனை கெடப்பிலதான் இருக்கும்.

அது காவேரி பிரச்சனையாகட்டும் கச்சத்தீவுப் பிரச்சனையாகட்டும் இல்ல சேது சமுத்திரக் கால்வாய் திட்டமாகட்டும் இல்ல தமிழ்நாட்டின் நலன்கள் சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் ஆகட்டும் இங்கிருந்து ஜெயிச்சு போற யாரராலும் எதுவும் ஆகப் போறது இல்ல .

எல்லா கூட்டத்தொடர்க்கும் விமானத்தில் போவாங்க வருவாங்க அலவன்ஸ் வாங்கிகிட்டு நாடாளுமன்றத்தில் கொட்டாவி விட்டு தூங்கி எழுந்து வர வேண்டியது தான்.

ஜெயிக்கிறதுல என்ன பெருமை இருக்கு. செயல்பாட்டில் ஊக்கமும்  ஒருமித்த கருத்தும் இல்லாமல் இங்கு ஒன்றும்  நிகழாது. இது வெறும் ஒரு அலங்காரப் பதவிதான். 
எந்த விதத்திலும் ஒரு எம்பி தனது தொகுதிக்கான காரியங்களைச் சாதித்துக் கொள்ள முடியாது. மசோதாக்களை எதிர்த்தோ ஆதரித்தோ இரட்டை வேடமிட்டு
வேண்டுமானால் சிலவற்றைப் பங்கு போட்டுக் கொள்ளலாம்.

ஆகவே இந்த எம்பி பதவி என்பது பல்லு இல்லாதவனுக்கு பட்டாணி கடலையைக் கொடுத்த மாதிரிதான்.

ஒரு பதவி என்றால் அதற்குரிய கம்பீரமும் நடத்தையும் செயல் திறனும் சமூகப் பொறுப்பும் இருக்க வேண்டும் அது இல்லாமல் பணத்தைக் கொடுத்து ஓட்டை வாங்கிப் பதவியில் அமர்ந்தால் அதற்கு  மக்களிடத்தில் என்ன மரியாதை இருக்கும்.

ஆகவே யார் ஜெயித்தால் என்ன எத்தனை எம்பி வந்தால் என்ன என்று ஒன்னும் ஆகப்போறது இல்லை ஐயா என்று சொல்லி  விட்டேன்.

அதுபோக ஊடகங்களில் கருத்துக்கணிப்பு என்று சொல்லுகிற  அனைவருமே திமுகவைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். ஏதோ இவர்கள்தான் ஊடக நடுநிலைச் செய்தியாளர்கள் போல நிறைந்து வழிகிறார்கள்.

எத்தனை சப்பை கட்டுதல் எத்தனை விதமான மூடு மந்திரங்கள் எல்லாவற்றிற்கும் பின்னாலான காரிய பின்னணி . இவர்களையெல்லாம் தேர்தல் கணிப்பாளர்கள் என்றோ சிந்தனையாளர்கள் என்றோ ஏற்றுக் கொள்ள முடியுமா? ஊதுற சங்க ஊதி வைக்கக்கூடிய ஆண்டிகள் தான் இந்த திமுக செய்தியாளர்கள். 

எனக்குத் தெரிந்து தேர்தலை நடுநிலையாக பொதுவாக சமூக பார்வையுடனும் இன்று நடந்து இருக்க கூடிய மாற்றங்களுடன் கூடிய சில முன்னெடுப்புகளை இணைத்து பேசக்கூடிய ஒரு அறிவார்ந்த ஒரு ஊடகவியலாளரை நான் பார்க்க முடியவில்லை.

அனைத்தும் விலை போன காலத்தில் எம்பி பதவி யாரிடம் இருந்து என்ன பயன். ஒட்டுமொத்த பங்குதாரர்கள் தேர்தலை நடத்தி தங்கள் வணிகத்தை செய்யப் போகிறார்கள்.

இதில் நாம் கருத்து கூற என்ன இருக்கிறது.

நேற்று தென்காசி நாடாளுமன்றத்துக்கு உட்பட்ட குருஞ்சாக்குளம் கிராமத்தில் நேற்றைய நாளில் கருப்பு துணி கட்டியும், கருப்பு கொடி கட்டியும், பொதுமக்கள் கருப்பு பட்டை அணிந்தும் கிராபைட் திட்டத்தை எதிர்த்தார்கள்.

நேற்று தென்காசி நாடாளுமன்றத்துக்கு உட்பட்ட குருஞ்சாக்குளம் கிராமத்தில் நேற்றைய நாளில் கருப்பு துணி கட்டியும், கருப்பு கொடி கட்டியும், பொதுமக்கள் கருப்பு பட்டை அணிந்தும் கிராபைட் திட்டத்தை எதிர்த்தார்கள்.

கிராபைட் எதிர்ப்பு

நேற்று குருஞ்சாக்குளம் மற்றும் பாதிப்பு அடையும் மற்ற ஊர்களில் கருப்பு பட்டை அணிந்து வாக்கு செலுத்தினர்.

நான்கு மணி வரை கிராமத்தில் உள்ள 710 வாக்குகள் உள்ள பூத்தில் வாக்கு செலுத்த செல்லவில்லை. இதனால் பதறிப்போன அதிகாரிகள் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் தலைமையில் நேற்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு, தென்காசி மாவட்ட அதிகாரிகள் என்னிடம் பேசிய பின்னர் நான் தலையிட்டு பொது மக்களை சமரசம் செய்து வாக்கு செலுத்த வைத்தார்கள்.
பிறகு  மாலை வாக்கு சாவடிக்கு சென்று அமைதியான முறையில் வாக்கு செலுத்தினார்கள். இதனை நேரில் சென்று நான் கண்காணித்தேன்.எந்த அரசியல் சார்பும் இல்லாமல் ஊர் நலன் கருதி செய்ய வேண்டிய கடமை.


Change is slow and gradual

Change is slow and gradual. You may fear change , you do your very best, you try so hard to protect yourselves and be safe. Bad things come, with no warning but you forget,  sometimes that's how good things come. It requires hard work, a bit of luck, a fair amount of self-sacrifice, and a lot of patience. Realize, you can’t have a harvest without a few weeds. So the best thing you can do is not to think, not to wonder, not to imagine, not to obsess, just breathe and have faith that everything will work for the best......

இன்று (19-4-2024) கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலை பள்ளியில் எனது வாக்கை நாடாளுமன்ற தேர்தலில் பதிவு செய்தேன். I exercised my right to vote today at Everest Mariappa Nadar School, Kovilpatti.

இன்று (19-4-2024) கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலை 
பள்ளியில் எனது வாக்கை நாடாளுமன்ற
தேர்தலில் பதிவு செய்தேன்.

I exercised my right to vote today at Everest Mariappa Nadar School, Kovilpatti.



 #LokSabhaElection2024



கோவில்பட்டி நியூஸ்டைம்
Kovilpatti news
நம்ம கோவில்பட்டி



#parlimentelection2024
#நாடாளுமன்றதேர்தல்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
19-4-2024


True wisdom comes to you when you realize how little you understand about life, yourselves, and the world around you

True wisdom comes to you when you realize how little you understand about life, yourselves, and the world around you.The unexamined life is not worth living.Strong minds discuss ideas, average minds discuss events, weak minds discuss people.The only thing that will make you happy is being happy with who you are, and not who people think you are. If being happy is important to you, try this instead of regretting all you lack, celebrate all you’ve got....

*Never regret anything that has happened in your life*,

*Never regret anything that has happened in your life*, it cannot be changed, undone or forgotten so take it as a lesson learned. Move on and always look for the good in the bad, the happy in the sad, the gain in your pain, and what makes you grateful not hateful. Trust that there is peace up ahead even if you can't see it yet. And do what you can to bring some peace. Believe everything comes to you at the right time. Be patient. Breathe. Go easy on yourself and Keep moving...

Photo 
#Thanjavur big temple
Sasi

#ksrpost
17-4-2024.


Wednesday, April 24, 2024

*Confident Walking is more Successful than Confused Running*.

*Confident Walking is more Successful than Confused Running*. Confidence doesn't come when you have all the answers. Be brave to live from your heart. Mastering yourself is true power But it comes when you are ready to face all the Questions. Understand some steps need to be taken alone(with confidence). It's the only way to figure out where you need to go and who you need to be. Yes sometimes the smallest step (with confidence) in the right direction ends up being the biggest step of your life... 

#ksrpost
24-4-2024.


Tuesday, April 23, 2024

*23rd April Happy Shakespeare Day*! Let's pay a tribute to the true genius by remembering and sharing his quotes. I'm sharing a few here. Comment your favourite quotes too.

*23rd April Happy Shakespeare Day*!

Let's pay a tribute to the true genius by remembering and sharing his quotes. I'm sharing a few here. Comment your favourite quotes too.

° We know what we are, but know not what we may be.
° Love all, trust a few, do wrong to none.
° It is not in the stars to hold our destiny but in ourselves.
° Better three hours too soon than a minute too late.
° If music be the food of love, play on.
° A fool thinks himself to be wise, but a wise man knows himself to be    a fool.
° Some are born great, some achieve greatness, and some have greatness thrust upon them.
° Good night, good night! Parting is such sweet sorrow, that I shall say good night till it be morrow.
° Hell is empty and all the devils are here.
° Brevity is the soul of wit.
° This above all; to thine own self be true.
° Cowards die many times before their deaths; the valiant never taste of death but once.
° We are such stuff as dreams are made on; and our little life is rounded with a sleep.
° What's in a name? That which we call a rose by any other name would smell as sweet.

I know so many beautiful quotes are left. Do add them in comment.
#ksrpost
23-4-2024.


#*எனது சுவடு - பகுதி 58*

#*எனது சுவடு - பகுதி 58* 
————————————
#*காங்கிரஸ் இணைப்பிற்குப் பின் நடந்த நிகழ்வுகள்*

#dmk, #nedumaran, #valapadiramamoorthy, #rajaji, #indiraghandi, #cpi,  #nehru#moopanar, #narasimarao, #dmk, #congress 
https://youtu.be/CwPN6nOqL7E?si=wWFZ6JmWU_huiAJP

———————-

*எனது சம்பாத்தியம்*….. *நான் பெற்றது*….. *ஆயிர கணக்கில் புத்தகங்கள்தான்*…. *மனிதனை மனிதனாக வாழவைப்பது புத்தகங்கள்தான்*… *இதுவே எனது சொத்து*!




//அலமாரியின் வரிசையில் நின்று நமக்கு முதுகைக் காட்டின புத்தகங்கள் ஜன்னல் விளிம்பில் சிந்தியிருந்த புத்தகங்கள். கட்டின பெண்டாட்டி மாதிரி நம்முடன் படுக்கையில் கூடப் படுத்துறங்கிய புத்தகங்கள். பெற்ற பிள்ளை மாதிரி மார் மீது கவிழ்ந்து  தவழ்ந்த  புத்தகங்கள் .படித்தவை !  படித்து  மறந்தவை,  பிடித்தவை ! பிடித்து மறக்க முடியாதவை.




பிடித்த  புத்தகம் பிடித்த பெண்ணைப்போல மறுபடி மறுபடி அழைக்கும். விடுமுறைப்  பிற்பகலில்,  நள்ளிரவில்  புரட்டக்  கூப்பிடும்.

அதைத் தேடிப் புறப்பட்டவன் கையில் கவிதை சிக்கும். தத்துவம் பிடிபடும். வாழ்க்கைப்  பந்தைப்  பிரித்து  வீசிய  கேள்விகள்  இடறும் ! பதிலும், திகிலும் எதிர்ப்படும்//

- என் யோசனை என்ற கதையிலிருந்து,
மாலன் 

#ksrpost
23-4-2024.

Meenanbakkam old airport bomb blast1984,now cargo #TEAGroup #Panakotai Maheswaran #Kathersan

Meenambakkam old airport bomb blast1984,now cargo #TEAGroup  #Panakotai Maheswaran #Kathersan 1) https://www.thehindu.com/news/cities/chenna...