Monday, May 4, 2015

புதுவை கிளெமன்ட் - Pudhuchery Clement‬




நேற்றைய தினமணியில் (03-05-2015) ஆசிரியர், அன்புக்குரிய நண்பர்,
 திரு. கே.வைத்தியநாதன் அவர்கள் புதுச்சேரியில் திரு. கிளமென்ட் ஈஸ்வர் அவர்களைச் சந்தித்தது குறித்து “இந்த வாரம்” பகுதியில் கலாரசிகன் தொடரில் எழுதியிருந்தார்.

கிளமென்ட் ஓய்வு பெற்ற அதிகாரியாவார். வயதான உடல்நலம் குன்றிய போதிலும் தமிழின் மீதும், கலாச்சாரத்தின் மீதும் தனக்குள்ள அக்கறையை  வெளிப்படுத்துகின்றவர்.  

கிறித்துவராக இருந்தாலும், “ அடுத்த ஞாயிற்றுக்கிழமை சித்திரா பௌர்ணமி கண்ணகி கோவிலுக்கு தமிழர்கள் செல்லவேண்டும்” என்று அவர் குறிப்பிட்டது அவரது பற்றையும் பண்பையும் காட்டியது. 
என்னை கைகாட்டி , “கண்ணகி கோவில் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட , கே.எஸ்.ஆர்  30 ஆண்டுகளுக்கு முன்பே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அவர் கடமையைச் செய்ததை மறக்க முடியுமா ”  என்று அவர் தன்  தள்ளாடுகின்ற வயதிலும் தினமணி ஆசிரியரிடம் குறிப்பிட்டார். இதை விட வேறு என்ன பெருமை வேண்டும். 

எத்தனையோ பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து பொம்மைகளாக டெல்லி சென்றுவிட்டுத் திரும்பியுள்ளார்கள். எத்தனையோ அமைச்சர்கள் இருந்தார்கள் சென்றார்கள். நேற்று மந்திரி இன்றைக்கு எந்திரி என்ற நிலை. இந்தநிலையில் இதய சுத்திபோடு, தமிழ் பற்றாளரும் பண்பாளரும் வாழ்த்தியதை விட வேறு என்ன சான்றிதழ் வேண்டும் அடியேனுக்கு... 


  

No comments:

Post a Comment

#*OHCHR*-#*UNHumanRights - #Geneva* #*Eelam Tamils issue*

#*OHCHR*-#*UNHumanRights - #Geneva* #*Eelam Tamils issue*  ———————————— From: OHCHR-UN Human Rights <ohchr-media@un.org> Sent: Friday,...