Sunday, February 21, 2016

தமிழ் ஈழத்தில் வறட்சியும், வறுமையும்

உலக வங்கியின் அறிக்கையின்படி இலங்கையில் மன்னார், முல்லைத் தீவு, கிளிநொச்சி  போன்ற பகுதிகள் வறட்சியிலும் வறுமையிலும் வாடிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக முல்லைத் தீவு மிகவும் வறுமையில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு பல்வேறு நிதி ஆதாரங்களை தமிழர்களுக்கு வழங்கியும், இப்பகுதிக்கு செல்லவில்லை என்றுதான் செய்திகள் தெரிவிக்கின்றன.  வாங்குகின்ற சக்தியையும் இங்குள்ள மக்கள் இழந்து வருகின்றனர். அதேபோலத்தான் மட்டக்களப்பு பகுதிகளும் வறட்சியில் உள்ளன. சிங்களர் பகுதிகளில் வறட்சியும், வறுமையும் அண்டாமல் சிங்கள ஆட்சி கவனித்துக் கொள்கிறது.  இந்த பகுதிகளில் உள்ள 30 சதவீத 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், ஊட்டச்சத்து இல்லாமல் எடை குறைவாக காணப்படுகின்றன.  வளரும் குழந்தைகளுக்கும் சரியான உணவுகளும் வழங்கப்படாமல் வேதனையான நிலைமையில் தமிழர்கள் வாழ்கின்றனர்.

தமிழர்கள் ஆதரவில் ஆட்சிக்கு வந்தாலும், இந்த வறுமைப் பிடியிலிருந்து மைத்ரியும், ரனிலும் இந்த கொடுமையை பாரா முகமாக இருப்பது கண்டனத்துக்கு உரியதாகும்.  வறுமையின் அளவு 12.7 சதவீதத்தை எட்டிவிட்டது. இதை மனித நேயத்தோடு உலக சமுதாயம் நோக்க வேண்டும்.  ஏற்கனவே சிங்கள ராணுத்தினர் பிடியில் சிக்கி வாடும் மக்களை வறுமையும் வாட்டுகிறது என்றால் ஈழத்திலுள்ள மனித சமுதாயத்தை நினைக்கும்போது வேதனையடைய செய்கிறது.

No comments:

Post a Comment