Tuesday, December 6, 2016

ஜெயலலிதா

முதல்வர் ஜெயலலிதாவிற்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல், இன்று 5.12.2016 அன்று இரவு 11:30 மணியளவில் காலமானார்.
- அப்பல்லோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு
.......................
டிசம்பர் 1987, 24 ஆம் தேதி எம்.ஜி.ஆர் மறைந்தார். அதே டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி ஜெயலலிதா மறைந்து விட்டார். அரசியலில் மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. ஆனால் மனித உணர்வுகள் என்பது வேறு.ஆழ்ந்த இரங்கல்.

எம்.ஜி.ஆருக்கும் அறிமுகமாகியுள்ளேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நன்கு அறிமுகம். 1984 ஆம் ஆண்டு அவர் ராஜ்ய சபா எம் பி ஆக இருந்த பொழுது எம்.ஜி. ஆர் மற்றும் நெடுமாறன் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஏப்ரல் மாத வாக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், பேபி மற்றும் அவர் சகாக்களோடு சந்தித்த போது லண்டனில் இருந்து வந்த சாக்லேட் பார்களை கொடுத்த போது மகிழ்ச்சியோடு அதை பெற்றுக் கொண்டார். சாக்லேட் அவருக்கு விருப்பமான பண்டமாகும். என்னுடைய தினமணி நடுப்பக்க கட்டுரைகளைப் படித்துப் பாராட்டியதுண்டு. 1998ல் வட சென்னையில் கூட்டணியில் போட்டியிட எனக்கு ஒதுக்கியவரும் ஜெயலலிதா தான். இதெல்லாம் தனிப்பட்ட செய்திகளாக இருந்தாலும் அரசியலில் எதிர்மறை கருத்துக்களும், வினைகளும் கொண்டிருந்தாலும் அவர்களுடைய இழப்பு கவலையைத் தருகின்றது.

அவருக்கு அடுத்ததாக சரியான ஆளுமையை வளர்த்தெடுக்காமலேயே விட்டுவிட்டார்.... இந்த குழப்பங்களுக்கெல்லாம் காரணம் ஆளுமை நிறைந்த தலைமை இல்லாததே.... 

அவர்அவர் ராஜாவாக முயற்சித்தால் குழப்பமே மிஞ்சும்.......!!!

என் நினைவுக்கு உட்பட்ட வரை அண்ணா,எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தான் முதல்வர் பொறுப்பில் இருந்து மறைந்தவர்கள். பி.எஸ்.குமாரசாமி ராஜா பொறுப்பில் இருந்து இறங்கிய பின் தான் மறைந்தார் என்பது என்னுடைய நினைவு.


No comments:

Post a Comment

#*OHCHR*-#*UNHumanRights - #Geneva* #*Eelam Tamils issue*

#*OHCHR*-#*UNHumanRights - #Geneva* #*Eelam Tamils issue*  ———————————— From: OHCHR-UN Human Rights <ohchr-media@un.org> Sent: Friday,...