Thursday, February 9, 2017

பதவி அரிப்பு, பதவி சுகம்....

பதவி அரிப்பு, பதவி சுகம்....
------------------------------
மத்திய அரசு நடத்தும் பொம்மலாட்டம்.. தள்ளாடுவது தமிழகம். 

கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இருநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டும், மன வேதனையாலும் உயிரிழந்துள்ளனர்.

கேரளா, அமராவதி அணைக்கு ஆதாரமான பாம்பாற்றில்  குறுக்கே தடுப்பணை கட்டப்படுகின்றது.  ஆந்திரா, பாலாற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்டும் பணி மும்மரமாக நடந்து வருகின்றது.

உச்சநீதி மன்ற தீர்ப்பை மதிக்காமல்  பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பனை கட்டுகின்றது கேரளா அரசு

 முதலைமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உடன் பேச்சுவார்த்தை நடத்தி பெறப்பட்ட கிருஷ்ணா நதிநீர் வரத்து குறைந்துவிட்டது.

பேரறிவாளன் மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்து மகா சமுத்திரம்,  
டீகோ கார்சியா தீவில் அமெரிக்க  முகாம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுக்கு எதிராக போர் தொடுப்பதற்கு டீகோ-கார்சீயா தீவினை மைதானமாக மாற்றப் போகின்றது அமெரிக்க. இதனால் தமிழகம் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரிடும் அபாயம் உள்ளது.  

இப்படி இன்றைய முக்கிய பிரச்சனைகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. பதவி அரிப்பு, பதவி சுகம்...

நாட்டின் நான்காம் தூண்கள் என சொல்லப்படும் ஊடகங்கள் கூட இவைகளைப் பற்றி கவலைப்படுவதாக இல்லை. அரசியலும், ஊடகமும் சமூக அக்கறையற்ற தொழிலாகவே மாறிவிட்டது..

ஆளும் தரப்பில் அதிகாரத்திற்கு வர துடிப்பவர்களுக்கு மாநிலத்தின் பிரச்சனைகள் என்னவென்று தெரிவதில்லை. ஆனால் பதவி மோகம் பிடித்து சட்டமன்ற உறுப்பினர்களை நாடறியும் வண்ணம் சிறைபிடித்து வைத்துள்ளனர். இவற்றையும்.குற்ற உணவின்றி ஊடகங்கள் நேரடிக் காட்சியாக ஒளிபரப்புகின்றன. 

தனக்கு 129 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது என்பது உண்மையானால் 
நெஞ்சம் உண்டு, அதில் நேர்மை உண்டு என நிரூபிக்கும் வகையில் தன்மீது உச்சநீதி மன்றத்தின்  தீர்ப்பு நிலுவையில் இருக்க பதவி ஏற்க துடிப்பது ஏன்?

சசிகலா vs ஓ.பன்னீர்செல்வம்.  

தமிழக அரசியல் இத்தகைய அவல நிலைக்கு  தள்ளப்பட்டு இருக்கின்றது என்பதை யோசிக்கும் போது மிகவும்  வேதனையாக உள்ளது.

விதியே! விதியே! தமிழச்சாதியை 
என்செயக் கருதி யிருக்கின்றாயடா?

No comments:

Post a Comment

கதைசொல்லி.

*கதைசொல்லி 34 ஆம் இதழ் விரைவில் வெளி வருகிறது*. *பொதிகை- பொருநை-கரிசல்* #* * #கேஎஸ்ஆர்போஸ்ட்  #ksrpost 15-5-2024.