Tuesday, April 11, 2017

பொதுவாழ்வில்....

கடந்த இருநாட்களாக தொலைக்காட்சிகளில் உச்சரிக்கப்படும் சொல் வருமான வரித்துறை ரெய்டு என்பது தான். பதவியேற்பின் போது 
நாட்டின் இறையாண்மையை காப்பேன் என சத்தியபிரமானம் எடுத்துதவர்கள் செய்யும் இத்தகைய செயலால் இவர்ளின் மானம் போகின்றதோ இல்லையோ , பொதுவாழ்வில் உள்ளவர்கள் மீதான சந்தேகம் அதிகரிக்கின்றது. தான் வகிக்கும் அப்பொறுப்புக்கு களங்கம் வரும்போது, பதவியை உதறிவிட்டு தன் மீதான களங்கத்தை நீதிமன்றத்தில் துடைப்பது தானே சிறந்தது. ஓட்டுக்கு பணம் அளித்தது உண்மை தான் என ஒப்புக் கொண்ட பின்னரும் அப்பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பது ஏனோ தெரியவில்லை. 

சில சமயங்களில் மக்கள் பிரதிநிதியாக பணியாற்ற வாய்ப்புக் கிடைக்கவில்லையே என வருத்தப் பட்டிருப்பேன். ஆனால் இத்தகையவர்களுடன் அனுசரித்து போனால் தான் அப்பதவியில் காலம் தள்ள முடியும் என உணரும் போது அப்பதவிக்கு வராதது மகிழ்ச்சி அளிக்கின்றது..அரசியல் அதிகாரம் , பதவி னு எல்லாம் மக்களுக்கானது என்பது போய் , தனக்கானது என்ற எண்ணம் படைத்த கொண்டவர்கள் அரசியல் துரதிர்ஷ்டமானது ...

கோடிகோடியாக கொள்ளையடித்து மனசான்றுக்கு பதில் அளிக்க முடியாமல் உள்ளே வேதனையுடனும், வெளியே சிரித்துக் கொண்டும்  ஆடம்பர வாழ்க்கை வாழ்வதை விட, பொதுவாழ்வில் மக்களுக்கு  தம்மால் இயன்ற உதவியை  செய்துக் கொண்டு, சுதந்திரமாக செயல்படுவதே சால சிறந்தது.
 
#அரசியல்
#பொதுவாழ்வில்

#ksrpost
#ksradhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
11/4/2017

No comments:

Post a Comment