Thursday, January 18, 2018

அப்படியும் இப்படியும் மனிதர்கள்

அப்படியும் இப்படியும் மனிதர்கள்
லல்லு பிரசாத் யாதவ் கால்நடை தீவன வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டதும் அவருக்கு சேவை செய்து அதன் பலனை அறுவடை செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் அவரது கட்சியினர் குற்ற செயல்களில் ஈடுபட்டு ராஞ்சி சிறைக்கு சென்றுள்ளனர். இதுதான் அரசியல் களப்பாடு.
லல்லு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவியை மாநிலங்களவை உறுப்பினராக்க உள்ளதாக செய்திகள். இதற்கு காரணம் என்னவெனில் லல்லுவை குடும்பத்தினர் அடிக்கடி டெல்லி செல்வதால் தங்குவதற்கு டெல்லியில் வீடு இல்லையாம். அதனால் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படலாம்.
நுண்மாண் நுழைபுலம் மிகுந்த ஒருவரை அமர்த்த வேண்டிய இடத்தில் சுயதேவைகளுக்காக் ஒருவர் அமர்த்தப்படுவதான் இன்றைய அரசியல்;அழகன்று.
கட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக கேரள முதல்வர் பினராய் விஜயன் திருச்சூரில் இருந்து திருவனந்தபுரம் வரை ஹெலிகாப்டர் மூலம் சென்று இருக்கின்றார். இதற்கான செலவை அரசு ஏற்க முடியாது என பினராய் விஜயன் சொல்கின்றார். ஆனால் இந்த செலவை மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் தலைமை தான் ஏற்க மறுக்கின்றது.

*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
17-01-2018

No comments:

Post a Comment

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*.

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*. Believe in yourself. You know personal de...