Monday, April 27, 2020

மதுரை

#மதுரை
—————
மதுரை ரோம் நகரை போன்று 2500 ஆண்டுகளை கடந்தது. இதற்கு இணையான கல்வெட்டு சான்றுகள்,  புராணங்கள், இலக்கியங்கள் வேறு எந்த நகருக்கும் இல்லை. மதுரையின் கழுத்தை ஆரமெனச் சுற்றிய கிருதுமால் நதியும், பொய்யாக்குலக்குடி வை(கை)யையும் மதுரையின் புகழுக்கு மகோன்னதச் சான்றுகள். அசோக மன்னர், கிரேக்க மெகஸ்தனீசு எழுதிய 'இண்டிகா' புத்தகமும், தாலமி, பிளினியும் வரலாற்று ஆய்வுரைகளில் விளக்கிய பெருநகர்.மதுரைபோல் நீர்நிலைகள் நிறைந்த நகரை வேறெங்கும் காண முடியாது. மதுரையைப் பற்றி பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அவை திருவிளையாடல் உட்பட மதுரையின் பெருமைகளைச் சொல்கின்றன.




பென்சில், பேனா கண்டுபிடிப்பதற்கு முன் எழுத்தாணிகளால்தான் மக்கள் எழுதினர்.இதை செய்தவர்களும், இதனால் எழுதியவர்களும் வாழ்ந்த இத்தெருவில் எழுத்தாணி பெயரளவிலேயே உள்ளது.மதுரையில் ஒரு காலத்தில் 'ஹார்வி' மில் மட்டுமே இருந்தது. பின் தமிழ் பேசும் தொழிலதிபர்கள் ஆலைகளை துவங்கினர். தெற்கு பகுதியில் மீனாட்சி ஆலையை தியாகராஜ செட்டியார் துவக்கினர். தேனூர் சிவகாமி மில், விளாங்குடி விசாலாட்சி மில், பைகாராவில் மகாலட்சுமி மில், ஆண்டாள்புரத்தில் மீனாட்சி மில், புது ராமநாதபுரம் ரோட்டில் மங்கையர்க்கரசி மில் என பெண்கள் பெயரில் துவக்கப்பட்டன.

மதுரைக்கும் சினிமா தொழிலுக்கும் நீண்டதொடர்புஉண்டு.தென்னிந்தி
யாவில் சேலம் மாடர்ன் தியேட்டரைவிட, பழமையானது மதுரை திருநகர் சித்ரகலா ஸ்டுடியோ. இதில் அல்லி அர்ச்சனா, குமரகுரு, தாய்நாடு போன்ற தமிழ் படங்கள், சில சிங்களப் படங்கள் தயாரிக்கப்பட்டு நெடுநாள் ஓடின.உலகில் முதன் முதலில் பொதுத் தேர்தலில் ஒரு நடிகரை அதாவது நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனை எம்.எல்.ஏ., (அப்போதைய சேடபட்டி தொகுதி) ஆக்கியது மதுரை தான்.. ஒரு தெருவுக்கு ஒரு கோயிலும், இரண்டு தெருவுக்கு ஒரு சினிமா தியேட்டரும் உடையது மதுரை.
மதுரையின் ஆதி தியேட்டர் இம்பீரியல். ஜெனரேட்டர் வைத்து 1890களிலே படம் காட்டிய அரங்கம். மீனாட்சி அம்மன் கோயில் அருகிலிருந்த அது, வணிக வளமாக மாறிவிட்டது.

No comments:

Post a Comment

#*OHCHR*-#*UNHumanRights - #Geneva* #*Eelam Tamils issue*

#*OHCHR*-#*UNHumanRights - #Geneva* #*Eelam Tamils issue*  ———————————— From: OHCHR-UN Human Rights <ohchr-media@un.org> Sent: Friday,...