Friday, July 16, 2021

#பாலாறு_பெண்ணையாறு_இணைப்புத்திட்டம்



———————————————————
பாலாறு-பெண்ணையாறு இணைப்புத்திட்டம் சில ஆண்டுகளாக பேசப்பட்டு, தமிழக அரசின் இது குறித்தான அறிக்கை மத்திய அரசின், மத்திய நீர்வள ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. கர்நாடகத்தில் உற்பத்தியாகும் பெண்ணையாறு 320 கி.மீ ஓடி வங்கக்கடலில் சேர்கின்றது.
இந்த நதி தீரத்தால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் உள்ள 4 லட்சம் ஏக்கருக்கு மேல் விவசாயத்திற்குப் பயன்படுகின்றது. கர்நாடகத்திலிருந்து உற்பத்தியாகி ஆந்திர மாநிலம் வழியாக தமிழகம் வரும் பாலாறும் 222 கி.மீ ஓடி வங்கக்கடலில் சேர்கின்றது.



வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம்,   திருவள்ளுர் மாவட்டத்திற்கு பாலாறு விவசாயத்திற்கு பயன்படுகின்றது. 

ஆந்திரத்தில் பாலாற்றில் 28 சிறிய பெரிய தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்திற்கு வரவேண்டிய நீர்வரத்து குறைந்துவிட்டது. இந்தநிலையில் தென் பெண்ணையாறை-பாலாறோடு இணைக்க வேண்டும் என்ற திட்டமும் அறிவிக்கப்பட்டது. இத்தோடு பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணை மழைக்கால வெள்ள நீரை பாலாற்றுக்குத் திருப்பலாம்.

பாலாற்றின் தடுப்பணையின் சுவற்றைத் தாண்டி தண்ணீர் வருவதால் சுவர்களை உயரமாக கட்டப் போகிறதாம் ஆந்திர வொய்எஸ் ஆர் காங்கிரசின் அரசின் முடிவு செய்துள்ளது.
****
கர்நாடக மாநிலம் நந்தி மலையை பிறப்பிடமாக கொண்ட பாலாறு 348 கிலோமீட்டர்  தூரத்தை கர்நாடக, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு எல்லை பகுதிகளை கடந்து காஞ்சிபுரம் அருகே வயலூர் என்ற கிராமத்தில் கடலில் கலக்கின்றது.

இதில் கர்நாடகாவில் 93  கிலோமீட்டர்  தூரத்தையும் , ஆந்திரா மாநிலத்தில் 33 கிலோமீட்டர்  தூரத்தையும் கடந்து தமிழ்நாட்டில் 222 கிலோமீட்டர் தூரம் பறந்து விரிந்து ஓடிக்கொண்டிருந்த பாலாறுதான் வட தமிழ்நாடு விவசாயிகளின்  உயிர் நாடியாகும். கர்நாடகா மற்றும் ஆந்திர அரசுகள் பாலாற்றின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணைகளை கட்டி நீர்வரத்தை முற்றிலும் தடுத்துவிட்டது. வட தமிழ்நாட்டில் விவசாயம் அழிந்து வருவதற்கு இந்த கர்நாடக , ஆந்திரா அரசுகளின் தடுப்பணைகள்தான் முக்கிய காரணம் என்று தெரிவித்தார் .

 வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில்  5.5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் , பாலாற்று பாசனத்தை நம்பியுள்ளன. இருப்பினும் ஆந்திரா - தமிழ்நாடு அரசுகளின் தடுப்பணை பிரச்சனைகளால் விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு கூலி வேளைக்குச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில்தான் மத்திய நீர்வளத்துறை கடந்த  2008-ஆம்  ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓடும் தென் பெண்ணை ஆற்றை, பாலாற்றோடு இணைக்கும் திட்டத்திற்கான அறிக்கையை  வெளியிட்டது . அதன்படி 59.5 கி.மீ., நீள நெடுங்கல் அணையை நாட்றாம்பள்ளி கல்லாறு வரை இணைக்க ரூ.258.50 கோடி ஒதுக்கப்படும் என்று தெரிவித்தது . ஆனால் இதுவரை எந்த பணியும் தொடங்கவில்லை. அதனைத் தொடர்ந்து எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக வேலூர் மாவட்டத்துக்கு வந்த முன்னாள் முதல்வர் பழனிசாமி ரூ.648 கோடி மதிப்பில் தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். இருப்பினும், இப்பணிகளை  இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.

இதுபோலதான் தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு, காவேரி-குண்டாறு இணைப்பும் தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டங்களாகும்.

#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
16-07-2021.

No comments:

Post a Comment

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*.

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*. Believe in yourself. You know personal de...