Thursday, June 29, 2023

#*தலைமைசெயலாளர் சிவதாஸ் மீனா கோவில்பட்டியில் உதவி ஆட்சியர் பணியில் இருந்த போது….*



—————————————
ராஜஸ்தானை சேர்ந்த சிவதாஸ் மீனா
 ஐ ஏ எஸ். இவர் கோவில்பட்டியில் உதவி ஆட்சியர் பணியில் இருந்த போது கோவில்பட்டி தொகுதியில் திமுக சார்பில்
1989 போட்டியிட்ட நேரத்தில் இவர் தேர்தல் அதிகாரி. நான் வெற்றி வாய்ப்பு இழந்த போது நீங்கள வெற்று பெற்றால் உயர்ந்த இடம் உங்களை நாடி வந்து இருக்கும். இந்த வானம் பார்த்த கரிசல் பகுதிக்கும் உதவியாக இருந்து இருக்கும் என கூறியது நினைவில்.  ஒரு முறை  கிராவின் சொந்த பிரச்சனையை தீர்க்க உதவியாக இருந்தார்.

அப்போது நடந்த தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பாக டாக்டர் சிவசாமி அவர்கள் தலைமையில் மிகப் பெரிய விவசாயிகள் பேரணி  நடைபெற்றது. மேற்படி நிழ்வில் போலீசார் தடியடி நடத்தியும், துப்பாக்கியால் சுட்டத்தில் வெங்கடாச்சலபுரம் எத்திராஜ் நாயக்கர், மற்றும் அகிலாண்டபுரத்தை சேர்ந்த இருதய ஜோசப் ரெட்டியார் ஆகிய இருவரும் ஜெயல்லிதா ஆட்சியில் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்டனர். 

இருதய ஜோசப் ரெட்டியார் உடலை திரும்ப post-mortem செய்ய வேண்டும் என உயர்நீதி மன்றத்த்தில் ரிட் மனு தாக்கல் செய்தேன்.நீதிபதி பி. வி. பக்தவச்சலம் விசாரித்து எனது கோரிக்கையை ஏற்று உத்தரவும் இட்டார். அப்போது சிவதாஸ் மீனா உடன் இருந்து இருதய ஜோசப் ரெட்டியார் உடலை தோண்டி எடுத்து post-mortem செய்த போது தன் கடமையை செய்தார்.

ராஜிவ் பாடுகொலை திமுக இளைஞர் அணி நிர்வாகி விளாத்திகுளம் போஸ் காவல் நிலையத்தில் கைதியாக படுகொலை நடந்த போது சிவதாஸ் மீனாவுக்கும் எனக்கும் கடுமையான மோதலும் நடந்து.  போஸ் காவல் மரணம் குறித்தும் சென்னை உயர்நீதி மன்றத்தில்  வழக்கும் என்னால் தொடர பட்டது.   அதில் இவரை  பற்றியும் எதி்ர் வினையாக கூறியிருந்தேன்.

சிவதாஸ் மீனா தற்போது தமிழக தலைமை செயலாளர்….

#கோவில்பட்டி_விவசாயிகள்பேரணி_போலீசார்தடியடி_துப்பாக்கிசூடு_சிவதாஸ்மீனா

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#கோவில்பட்டி
#ksrpost
29-6-2023

No comments:

Post a Comment

*If you're not making mistakes. Then you're not making decisions*

*If you're not making mistakes. Then you're not making decisions*. You know success seems to be connected with action. Successful pe...