Friday, May 10, 2024

ராஜாராயணனின் 29-4-1950 இல், 74 ஆண்டுகளுக்கு முன் தனது நண்பர் கம்யூனிஸ்ட் கட்சி தோழர் நாலாட்டின் புதூர் என். ஆர். சீனிவாசன் எழுதிய post card.

எழுத்தாளர் 
*கிராஜாராயணனின் 29-4-1950 இல், 74 ஆண்டுகளுக்கு முன் தனது நண்பர்  கம்யூனிஸ்ட் கட்சி  தோழர் நாலாட்டின் புதூர் என். ஆர். சீனிவாசன்  எழுதிய இந்த post card*. இந்த இருவர்  மீதும் அன்றைய காங்கிரஸ் ஆட்சியில் கோவில்பட்டி சதி வழக்கு தொடரப்பட்டது. அது பின்னர் திருநெல்வேலி சதி வழக்காக அது மாற்றப்பட்டது. அன்றைக்கு குமாரசாமி ராஜா தமிழகத்தின் முதல்வராக இருந்தார். அவரிடம் ரசிகமணி டி கே சி அவர்கள் மேற்படிக் கைது குறித்துப் பேசினார்.

என்னையா இது இடைச்செவல் நாயக்கர் பேனாவைத் தூக்குவாரே ஒழிய ஒருபோதும் கத்தி கடப்பாறை எல்லாம் தூக்க மாட்டார். அவர் மீது போய் சதி வழக்குப் போட்டு இருக்கிறீர்களே! என்று கேட்டு அதன் பிறகே வழக்கிலிருந்து கி ரா நீக்கப்பட்டார். 



இருந்தாலும் வழக்கில் நாலாட்டின் புதூர் சீனிவாசன் சம்பந்தப்பட்டிருந்தார். 1951 தபால்கார்டில் எழுதப்பட்ட ஒரு கடிதம். நண்பர் சீனிவாசனுக்காக கிரா சென்னை உயர் நீதிமன்றத்தில் பெயில் வாங்க போவதாகவும் அதற்குச் செல்ல இருப்பதாகவும் எழுதிய பதில்க் கடிதம். சுமார் 70 வருடங்களுக்கு முன்பாக எழுதப்பட்ட போஸ்ட் கார்டு.

சீனிவாசனின் பேரன் சங்கரநாரயணன் பதிவு செய்து அந்தத் தபால் கார்டையும்  வெளியிட்டுள்ளார். கிராவும் நானும் எவ்வளவு நெருக்கமாக இருந்தோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை .
அவரது எழுத்திற்கும் வளர்ச்சிக்கும் புகழுக்கும் அடிப்படையாக அமைந்தவர்கள் அன்னம் கவிஞர் மீரா அவர்களும் என்னை போன்ற சிலரும் தான்.

70 ஆண்டுகளுக்கு முன்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தாரே கிரா என்பதற்கு சாட்சியாக இந்த கடிதம். அதற்கு பிறகு கீ ரா கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியே வந்து விட்டார். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மீது கிரா வழக்கும் தொடுத்தார். பிறகு விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி அவர்களுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டார். அதற்காகக் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை ஜெயிலிலும் இருந்தார்.

சிறைக்கு வந்த பெருந்தலைவர் காமராஜர்யிடம்  கிராவை நான் அறிமுகம் செய்ததெல்லாம் உண்டு. 

கிரா எழுத்து கடைசி வரை மிக நேர்தியாக இருக்கும். இந்த கடிதம் 73 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது.

#கிரா

#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
10-5-2024.


No comments:

Post a Comment

ஷோ கம்யூன் வாழ்வு…. என்றார். #polyamoryயும் #molecule எனும் சொல்லை சேர்த்து #polycule அழைக்கப்படுகிறது,இதற்கும் open relationship

ஓஷோ  கம்யூன்  வாழ்வு….  என்றார். #polyamoryயும் #molecule எனும்  சொல்லை சேர்த்து #polycule அழைக்கப்படுகிறது,இதற்கும் open relationship-என மே...