Tuesday, June 18, 2024

#இன்றைய நெல்லை, தூத்துக்குடி தென்காசி மாவட்ட திமுகவினர் மட்டுமல்ல முதல்வர்ஸ்டாலின், இன்று தூத்துக்குடியில் இருக்கும் கனமொழி கவனத்துக்கு…….. 1949 முதல் 1967 வரை கழகத்தை முன்னெடுத்து. வளர்த்த #அண்ணாவின் முன்னணித் #திமுகதொண்டர்கள்

#இன்றைய நெல்லை, தூத்துக்குடி 
தென்காசி மாவட்ட திமுகவினர் மட்டுமல்ல முதல்வர்ஸ்டாலின், இன்று தூத்துக்குடியில் இருக்கும் கனமொழி கவனத்துக்கு…….. 1949 முதல் 1967 வரை கழகத்தை முன்னெடுத்து. வளர்த்த #அண்ணாவின் முன்னணித் #திமுகதொண்டர்கள்
———————————————————
திமுக அண்ணா தலைமையில் 1967 இல் ஆட்சிக்கு வந்த நேரம். 1967 மார்ச் ஆறாம் நாள் அண்ணா அமைச்சரவை பதவி ஏற்கிறது
அப்போதைய நெல்லை மாவட்டச் செயலாளராக எம்.எஸ.சிவசாமி  பொறுப்பிலிருந்தார்.
தென்காசி,அம்பாசமுத்திரம்,நாங்குநேரி, ராதாபுரம்  தவிர மற்ற எல்லாத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுகிறது

1968 தென்காசி இடைத்தேர்தலிலும் எம்.எஸ.சிவசாமி  மாவட்டச் செயலாளர்
அதன் பிறகு நடைபெற்ற கட்சித் தேர்தலில் 500வோட்டுகள் பெற்று வெற்றி வாய்ப்பு இழந்தார்
பின் நெல்லையில் திமுகவின் மாவட்டச் செயலாளராக இருந்தவர் அண்ணாச்சி ரத்தினவேல் பாண்டியன்  வெற்றி பெற்றார்மதிப்பிற்குரிய ரத்தினவேல் பாண்டியன் அவர்கள். பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதியாக விளங்கினார்..அவர் தன் முயற்சியில் திருநெல்வேலி மாவட்டத்திற்கான  தி மு கக்கழகக் கட்டிடத்தைக் கட்டுவதற்கென எட்டயபுரம் மகாராஜாவிடம்  இருந்து ஒரு நிலத்தை பாளையங்கோட்டையில் சலுகையில் வாங்கிப்போட்டார். இப்படி நாட்கள் வருடங்கள் இருக்க…..

திரு ரத்னவேல் பாண்டியன் அவர்களுக்கு பிறகு நெல்லை மாவட்டச் செயலாளராக அழகிய நம்பி வந்தார். அவர் ஒரு கட்டத்தில் எம்ஜிஆர் திமுகவை விட்டு பிரிந்து கட்சி ஆரம்பித்த பிறகு அவர் எம்ஜிஆரின் பின்னால் சென்று விட்டார்.

அவருக்குப் பிறகு வைகோவும், மற்றும் மஸ்தானும் தான் நெல்லை மாவட்ட திமுகச் செயலாளராக இருந்தார் . (பிற்காலத்தில் தான் நெல்லை மாவட்டத்தை விட்டு 1986ல் தூத்துக்குடி மாவட்டம் தனியாகப் பிரிந்து போய்விட்டது). அந்த சமயத்தில் வைகோ இந்த கழகக் கட்டிடத்தை கட்டுவதற்கான முயற்சியில் இறங்கினார்.

அந்த சமயத்தில் இந்திராகாந்தி அம்மையார் எமர்ஜென்சியை கொண்டு வர பலரும் கைதாகிப் போனதால் அந்தக் கட்டடம் கட்ட முடியாமல் நின்று போனது. அதற்குப் பின்னர் எம்ஜிஆர் ஆட்சியில்,வைகோ திமுகவுக்கு எதிர்கட்சி நிலையில் செயல்பட வேண்டி வந்ததால் அந்தத் திட்டம் முற்றிலும் தள்ளிப் போய்விட்டது.

அதற்குப் பின்னால் மதிமுகக் கட்சியை வைகோ ஆரம்பிக்க அதன் பின்னால் இருந்து நாங்கள் செயல்பட்டோம். இதெல்லாம் ஒருபுறம் இருக்க இப்போது அந்த இடத்தை  அரவிந்த் கண் ஆஸ்பத்திரிக்கு விற்று விட்டதாக நெல்லை நண்பர்கள் தெரிவிக்கிறார்கள். 

அதாவது அந்த இடத்திற்கு துரைமுருகன் பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்து  இன்றைய நெல்லை மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் வழியாக அதை அரவிந்த் கண் ஆஸ்பத்திரிக்கு விற்று விட்டதாகத் தெரிகிறது.

அந்த நிலத்திற்கான மொத்த ஆவணங்களும் அதற்கான திட்ட வரைவு நகல்களும் தன்னிடம் பத்திரமாக இருப்பதாக நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் என்னிடம் தெரிவித்துள்ளார். வைகோவும் அதை உறுதிப்படுத்தினார்.

பிறகு மெல்ல விசாரித்ததில் மேற்படி இடத்தை விற்று திருநெல்வேலி புறவழிச் சாலையில் சினேகா மனநல மருத்துவமனை அருகே கழக கட்டிடத்திற்கு என்று ஒரு இடத்தை வாங்கி போட்டு இருக்கிறார்கள் என்று தெரிகிறது. 

எப்படியோ மாவட்ட கழகத்தின் கட்டிட மனை வேறு இடத்தில் அமைந்தாலும் பரவாயில்லை .அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது  என்பதில்மகிழ்ச்சி.!

நெல்லையில் இது குறித்த பேச்சு  இன்று பரவலாக இருக்கிறது. நெல்லைவாழ் நண்பர்களும் அதை உறுதி செய்கிறார்கள்.

கடந்த காலம் எங்கும் நெல்லை மாவட்டம் திராவிட இயக்கத்திற்குப் பலவகையிலும் தொடர்பில் உள்ள மாவட்டமாக இருந்து வந்துள்ளது.  கலைஞர் அவர்கள் மொழிப்போரை பொறுத்தவரை தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட் என்று திருநெல்வேலி மாவட்டத்தை வர்ணித்து இருக்கிறார்.

1950 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 27 ஆகிய இரண்டு நாட்களாக கோவில்பட்டியில் அண்ணா அவர்களின் தலைமையில்  நடந்த திமுக மாநாட்டில் அம்மாநாடு வெற்றி பெற டபிள்யூ டி துரைசாமி (மாநாடு செயலாளர் )பாலகிருஷ்ணன் ஈ வே அ வள்ளி முத்து (வரவேற்பு குழு தலைவர் -அன்றைய நகர் மன்ற தலைவர்) எஸ் நடராஜன் கலிங்கன் (துணைச் செயலாளர்கள்) கலைமணி காசி அ திராவிட மணி (விளம்பரக் குழு உறுப்பினர்கள்) எச் பி துரைசாமி (பொருளாளர்) ஆகியோர் மட்டுமின்றி திருநெல்வேலி மாவட்ட திமுக கழக நிர்வாகிகள் சேர்ந்தும் பெரும் பணியாற்றியுள்ளார்கள். நெஞ்சில் நிலைத்து நிற்கும் நெல்லை மாவட்டக் கழக கண்மணிகள் (ஒருங்கிணைந்த 3 மாவட்டங்கள்)

அத்தகைய ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில்தான் பல காலமாகத் தொடர்ந்து மாவீரன் கே வி கே சாமி ,
தங்கப்பழம், நீதி மாணிக்கம், நெல்லை மஸ்தான், தூத்துக்குடி இரா கிருஷ்ணன், கடையநல்லூர் திராவிட மணி, கா மு கதிரவன், சங்கரன்கோவில் டி ஆர் சுப்பிரமணியம், தம்பிதுரை, தூத்துக்குடி அய்யாசாமி, வெள்ளைத்துரை பாண்டியன், சி பா ஆதித்தனார் ,எம் எஸ் சிவகாமி, தினகரன் நிறுவனர் கே பி கே , கேப்டன்  என் நடராஜன், நெல்லை மஜித், களந்தை ஜின்னா, பக்கீரப்பா, டாக்டர் பத்மநாபன், தென்காசி திரவியம், என் நடராஜன், ரத்தினம், ஏர்வாடி அப்துல் காதர்,

ஈ.வெ.அ.வள்ளிமுத்து,வீரபாகு ,ஏர்வாடி அலிசேக்மன்சூர்,பாளைஉசேன்,ஆலடி அருணா,ஜிஆர்எட்மண்ட்,வழக்கறிஞர்
ஏ.எல்.சுப்பிரமணியம்,ஆ.கருப்பையா,
கிளமெண்ட்,சேர்மன்சூரியநாராயணன்,சவுண்ட்சர்வீஸ்பி.எஸ்.பெருமாள்,முத்தமிழ் அந்தோணி ராயப்பன், தூத்துக்குடி கே.ஆர் ராமலிங்கம், என்.பெரியசாமி
மேலப்பாளையம் சே.க.மு.யூசுப்
களந்தை ஜின்னா,ஏர்வாடி அப்துல்
திருச்செந்தூர் கண்ணபிரான்
திருவை அண்ணாமலை,கே ஆர் பி மணிமொழியன்,நெல்லை நெடுமாறன்
நெல்லை புகாரி,சேர்மன்மஜீத்
பேட்டை புகாரி,கடையநல்லூர் திராவிடமணி,புளியங்குடி பழனிச்சாமி
ஏரல் எஸ்.பி.முத்து,கோவில்பட்டி கலைமணி காசி,காயல் செய்யது அகமது,நாசரேத் பி.எஸ்கே ஜெயபால்
நாசரேத்து  எஸ்.டி.பி.பாலசிங், விளாத்திகுளம் ரத்தினசபாபதி,
நாசரேத்து வணங்காமுடி, முனைவர் மு.பி.பா. என்ற மணி வேந்தன்
நாசரேத்து மோசஸ் டாக்டர் 
கலைக்குழுவினர்
எஸ்.எஸ்.சிவசூரியன் நாடகக் குழு
தேவராஜன் நிர்மலா இசைக்குழு
துரையரசன் கலைக்குழு
பால்க்குளம் தனசேகரன்
அ பு  இளங்கோவன், தூத்துக்குடி ஜோசப், கோவில்பட்டி  பெரியசாமி புதுப்பட்டி செல்வம், இ நம்பி, சிவகிரி சுபகணேசன், சிங்கை கந்தசாமி, கீழ்ப் பாவூர் ராமநாதன், கோவில்பட்டி தமிழரசன், நாசரேத் ஜெயபால், டிஏகே லக்குமணன்,சாமித்துரை, திருச்செந்தூர் நல்ல கண்ணு, தென்திருப்பேரை பன்னீர்செல்வம், களந்தை லாரன்ஸ் கடையநல்லூர் எஸ் எஸ் சாகுல் ஹமீது, புளியங்குடி சேதுராஜ், டாக்டர் உசேன், தாழையூத்து புல்லையா, திசையன்விளை திருவிடை முத்து, சிலாத்திக்குளம் நம்பி, திருக்கருங்குடி துரை நாசரேத்தின் அன்றைய வட்டப்பிரநிதி பி.துரை
கோவில்பட்டி வட்டச் செயலாளர் முன்னாள் மத்திய அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனம் சங்கரன்கோவில் சேர்மன் பழனிச்சாமி கங்கைகொண்டான் கருப்பையா, ஆலங்குளம் முருகய்யா. கீழ ஈரால் அ, கோ. சி. தங்கப்பாண்டியன், எட்டையபுரம் ஈட்டி ராமசாமி, கோவில்பட்டி பா.முத்து, விளாத்திகுளம் மருது பாண்டியன், சங்கரன்கோவில் சுப்பையா சாத்தான்குளம் மகாராஜன், 
உடன்குடிசித்திரவேல்,மணவைபெந்தலின்,வெள்ளாளன்விளை இம்மானுவேல்,ஆலங்குளம் எஸ் ஆர் எஸ் ,ஆழ்வை சண்முகம் 
மணல் குண்டு மகாராஜன் 
மணல் குண்டு பாலசுப்பிரமணியன் 
தென்திருப்பேரை பன்னீர்செல்வம் 
சி கே சிபாண்டியன்,குருகாட்டூர்தர்மராஜ் 
குருகாட்டூர்பால்ராஜ்,கோட்டூர்அசோகன் 
ஏரல் அறவேந்தன். ஆறுமுகநேரி ச கே ஆதித்தன்,வெள்ளரிக்காய் ஊரணி ஜெயராஜ், ஏர்வாடி யூசப், செவல்குளம் அ.சா. குருசமி போன்ற நெல்லைச் சீமை காரர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை காத்த எண்ணற்ற மறைந்த பல தியாகசீலர்கள் என்றும் நினைவில் இருக்கிறார்கள்.

#அன்றையதிமுக
#dmkhistory

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
18-6-2024.


No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...