#*மதிமுக*
#*சார்பட்டா இராயபுரம் ஏழுமலை
நள்ளிரவுகொலை நினைவுகள் (2)*
————————————
1………அப்படியான மிகச்சிறந்த ஒரு பேரணியை1994 ஏப்ரல் 16 எழுச்சி பேரணியின் போதுதான் நடத்தி ம தி மு க வின் மாநாட்டைச் சிறப்பாக நடத்த வேண்டும் என்று என்னுடன் கடுமையான பணிகள் செய்து அரும்பாடுபட்ட ராயபுரம் ஏழுமலை யாரும் எதிர்பாராத விதத்தில் 17 ஏப்ரல் 1994 இரவில் கொலை செய்யப்பட்டார். இதற்கிடையில் பேரணியை முடித்து விட்டு ராஜ்ய சபா உறுப்பினராக இருந்ததால் வைகோ 17-4-1994 அன்று டெல்லி நாடாளுமன்றக் கூட்டத்திற்கு அவசரமாகக் கிளம்பி போயிருந்தார்.
மிக மோசமான முறையில் ஏழுமலை கொலை செய்யப்பட்டு கிடந்த சூழலில் அ. செல்வராஜூன் பதற்றுத்துடன் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு எப்போதும் அழைக்கும் தொனியில் “வழக்கறிஞரே! நம்ம தம்பி ஏழுமலையை கொன்னுட்டாங்கய்யா! “என்று தொலைபேசியில் கதறி அழுதவாறே நீங்கள் உடனே புறப்பட்டு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மிகுந்த துக்கமாகி
உடனே நான் அன்றைக்கு இருந்த பல கட்சி நிர்வாகிகளுக்கும் கால் செய்து விபரத்தைச் சொல்லிவிட்டு
புறப்படத் தயாரானேன். என்னிடம் கார் இருந்தும் டிரைவர் இல்லை! கைபேசிகள் இல்லாத காலமாதலால்
அவரைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.
வேறு வழி இல்லை என்கிற நிலையில் எனக்குத் தெரிந்த ஒரு ஆட்டோக்காரரை வரவழைத்து அவருடன் ஆர் செல்வராஜ் அவர்களின் வீட்டிற்கு அந்நேரத்தில் கிளம்பி சென்றேன்.
அவரது வீடு பிராட்வே பாரதியார் பெண்கள் கல்லூரி அருகில் இருக்கிறது. அங்கு சென்று அவரையும் கையோடு அழைத்துக் கொண்டு ஆட்டோவில் இருவரும் கிளம்பி ராயபுரம் பாலத்தின் அருகில் வட கிழக்கு புறத்தில் போய்ப் பார்த்த போது அங்கே ஏழுமலையின் உடல் வெட்டிக் கூறாக்கப்பட்டிருந்தது.
காவல்துறையினர் யாரும் அப்போது அங்கு வரவில்லை . சரியாகச் சொன்னால் அவர்கள் இரண்டு மணி நேரம் தாமதமாக தான் அங்கு வந்து சேர்ந்தார்கள். அந்நேரத்தில் நானும் அ.செல்வராஜின் சார்ந்த ஒரு நான்கு ஐந்து பேர் மட்டும் தான் அந்த சம்பவ இடத்தில் விடிய விடிய இருந்தோம். காவல்துறை வந்தவுடன் அவர்களிடத்தில் உடலை ஒப்படைத்து விட்டுத் திரும்பி ராயபுரம் பாலத்திற்கு மேற்கு புறத்தில் ஒரு மாடியில் இருந்த ஏழுமலையின் அலுவலகத்தில் சென்று மிகுந்த மனச் சோர்வுடன் அமர்ந்தோம்.
இதற்கு முன்பு நான் வீட்டை விட்டு கிளம்பும்போதே வைகோவிற்கு போன் செய்தேன். அவர் எடுக்கவில்லை! உறக்கத்தில் இருந்திருக்க வேண்டும்!. எப்படியோ ஒரு கட்டத்தில் ஃபோனை எடுத்து விட்டார். அவரிடம் விஷயத்தைச் சொன்ன போது அவரால் அதைத் தாள முடியவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரின் அழுகை தொலைபேசியிலேயே துக்கித்தது. அன்றைய வைகோ அப்படித்தான் இருந்தார்! உடனே தொலைபேசியில் நீங்கள் எல்லாம்அங்கு செல்கிறீர்களா என்று கேட்டார்?
ஆமாம் போய்க்கொண்டிருக்கிறேன் என்ற போது துறைமுகம் அ.செல்வராஜுடன் கூட இருந்து எல்லாவற்றையும்பார்த்துக்கொள்ளுங்
கள் இதையெல்லாம் அவர் தாங்க இயலாது வயதானவர் என்றும் சொன்னார். அந்த நள்ளிரவில் நாங்கள் வட சென்னையில் போய் இரவு முழுக்க ஏழுமலையின் உடல் தனி தனியாக இருந்ததை பார்க்க கண்ணீரும் பீதியோடு எதையும் புரியாமால் அதன் முன்பு காத்திருந்தோம்.
.குறிப்பாக இரவு 12 மணிக்கு மேல் நடந்த சம்பவம் ஆகிவிட்டதால் ஏழுமலை கொலையுண்ட செய்தி மறுநாள் செய்தித்தாளில் வரவில்லை . இப்போது போல தொலைகாட்சிகள், ஊடகங்கள, இணையம், கைபேசிகள் அறியா நேரம். தூர்தர்ஷன் அரசு தொலைக்காட்சி மட்டும் இருந்த காலம். அந்த நள்ளிரவு நேரத்தில் ஏழுமலையின் அலுவலகத்தில் இருந்தபடியே பொன்முத்துராமலிங்கம் உட்பட பல மாவட்டச் செயலாளர்கள் அனைவருக்கும் கால் செய்து நடந்ததை சொன்னேன். மறுநாள் மிகுந்த சிரமப்பட்டு வெளியூரில் இருந்து அனைவரும் வந்து சேர பகல் 11 மணி ஆகிவிட்டது. வைகோவும் விமானத்தைப் பிடித்து டில்லிருந்து.சரியாகப் பத்து மணியளவில் அங்கு வந்து சேர்ந்து விட்டார். அப்போது பத்திரப்பதிவு ஊழல் வழக்கில் மாட்டப்பட்ட முகமது அலி காவல் துறை டி சி யாக இருந்தார் என நினைவு .போக இன்றைக்குக் கமலஹாசனுடன் இருக்கின்ற எம்எல்ஏ தமிழரசன் அவர்களின் மைத்துனர் மௌரியா காவல்துறை உயர் அதிகாரியாக அன்றைக்குப் பொறுப்பேற்று இருந்தார்.
எல்லோரும் இப்படியாக இருக்கும் பட்சத்தில் ஏழுமலையின் உடலை அரசு மருத்துவமனையில் வைத்து போஸ்ட்மார்ட்டம் செய்து முடிக்க மறு நாள் பிற்பகல் ஆகிவிட்டது.
அந்த நாளும் அந்த சூழ்நிலையும் இன்று நினைத்தால் கூட என் மனதில் வலி மிகுந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. செயல்வீரர் மக்களை அரவணைத்துச் செல்லக் கூடியவர் களப்பணியாளர் என்றெல்லாம் தன்னை மறந்து மதிமுகவில் செயல்பட்டவர் ஏழுமலை!!. அவர் கொலையுண்டு போனதற்கு அவர் மீதான தனிப்பட்ட விரோதம்தான் என்று காரணம் சொன்னார்கள்.!! இந்த இடத்தில் எனக்குப்பல அன்று சொல்லப் பட்ட பலரின் பெயர்கள் மனதில் நிழலாடுகின்றன. எதையும் காரணங்களாகவோ யாரையும் குறிப்பிட்டோ சொல்ல என்னால் முடியவில்லை ! உண்மையில் ஏழுமலையின் மரணத்திற்கு இதுவரை யார் காரணம் அதற்கான நோக்கம் என்னவென்று கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது தான் வேதனை.
முன்பெல்லாம் அரசியல்வாதிகள் அதில் ஈடுபடும் போது பல நெறிமுறைகளை பண்பட்ட மரபுகளைப் பின்பற்றினார்கள். கொள்கைக்காக உயிரைக் கொடுத்தும் செயலாற்றினார்கள். மக்கள் மத்தியில் களப்பணி ஆற்றினார்கள். அதில் பெருமை கண்டார்கள்.
ஆனால் இன்றைக்கு மக்களிடம் மெஜாரிட்டி பெற்றுவிட்ட அதிகாரத்தில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்கிற ஒப்பனை அரசியல்வாதிகள் மேலோங்கி இருக்கிறார்கள்! பதவியைப் பிடிக்க பல சால வித்தைகளில் இறங்குகிறார்கள். அரசியல் என்பது வருவாய் உள்ள ஒரு வணிக தொழில் ஆகிவிட்டது. அதன் அடிப்படையில் தான் தோன்றித்தனமான செயல்களில் ஈடுபட்டு வருவதோடு “பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை” என்பது போல இன்றைய அரசியல்வாதிகள் நடந்து கொள்கிறார்கள். இவர்களுடைய ஒப்பனை முகமும் அதன் கீழ் பணத்திற்கு அடித்துக் கொள்ளும் நிலையை எந்த ஒரு அறிவு ஜீவிகளும் மாண்புடைய அறவாதிகளும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். அரசியலில் துலங்க வேண்டிய மக்கள் பண்புகளை அதற்கான கடமைகளை அதன் புனிதத்தை வேரோடு சிதைத்துதான் இன்று பலரும் தங்கள் சுயநலத்திற்கெனப் பதவி காண்கிறார்கள். இக்கால வணிக அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கு இம்மாதிரிச் சம்பவங்களே காரணமாக இருக்கின்றன. உண்மைகளைப் புதைத்து விட்டு பொய்களைத் தாலாட்டுவதுதான் இன்றைய அரசியலின் அவலமாக அபத்தமாக இருக்கிறது.
இன்றைக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாட்டுச் செயலாளர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதற்கும் தனிப்பட்ட விரோதம் தான் காரணம் என்று சொல்கிறார்கள். உண்மை ஒரு எட்டு வைப்பதற்குள் பொய் உலகத்தையே சுற்றி வந்து விடும்!!!. வேறு என்ன சொல்ல இருக்கிறது? இந்த
ராயபுரம் ஏழுமலை நினைவில் வந்தார்.
வண்ணாரப்பேட்டை சுழல்மெத்தை மீட்டிங்கும், மெரினாபேரணியும் நிகழ்ந்தது !
இவ்விரண்டையும் அவ்வளவு கலர்ஃபுல்லாக மாநாடு போல் நடத்திக்காட்டியவர் ஏழுமலை. ஏழுமலை பிரம்மாண்டமாக பொதுக்கூட்டம் & பேரணியை நடத்திவிட்டார்.. நாயக்கர் பின்னிட்டார்ல்ல ? த்தா திமுககாரன்களுக்கு அல்லு வுட்ருச்சி போ என்றான் !
நீ யார்ரா அப்ப ?
இல்ல மச்சான், என்ன இருந்தாலும் கலைஞர் தன் புள்ளைக்காக வைகோவ இப்டி தூக்கி அடிச்சிருந்திருக்கக் கூடாது !
வைகோ அதன்பின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தன் பலத்தைக் காட்ட கிளம்பிவிட, சென்னை பேரணி முடிந்த ஓரிரு நாட்களிலேயே அவ்வளவு சர்வ பலம் வாய்ந்த ஏழுமலை நாயக்கரை அவர் ஏரியாவுக்குள்ளேயே புகுந்து கண்டம் துண்டமாகப் வெட்டி போட்டார்கள் !
வேனில் வந்திறங்கிய அவருக்குப் பரிச்சயமான ஒரு கூட்டம், வெற்றிகரமாக பேரணி & கூட்டத்தை நடத்தியதற்காக மாலையும், பொன்னாடையும் போர்த்துவதாக
சென்னை துறைமுக கண்டெய்னர் லாரி (ஹார்பர் கன்டெய்னர் யார்டில்) மாமூல் மேட்டரில் நாயக்கர் மாமூல் தொகையை உயர்த்திக் கேட்கவே, அவருடைய போட்டியாளரை வைத்துப் போடுவது போல் பழி தீர்த்துக் கொண்டார்கள் எனவும் சிலர் பேசி கொண்டனர்.
சில நாள் வரை ‘’எப்படியா ? அவரு யாருன்னு நினச்ச ? பாக்ஸர் மச்சி. ஏழைகளுக்கு வள்ளல் .பெட் ஃபைட் நிறைய பண்ணிருக்காரு. துண்ட வச்சி பொருளால போட்டா எப்படி தடுக்கறதுன்னு வித்த தெரிஞ்சவர்டா. நம்ப வச்சி கழுத்தறுத்தானுக.!
ஆனா ஒண்ணு மச்சி, நாயக்கர போட்டவங்கள போடாம வுட மாட்டேன்னு சிவா அண்ணன் சமாதில வச்சு சத்தியம் செஞ்சிருக்காரு, மவனே சிதைக்காம விட மாட்டாரு.
அதுக்கு ஏன்டா என்னமோ நான் போட்ட மாதிரி இவ்ளோவ் காண்டாவுற ?
இல்ல மச்சான், நல்ல மனுஷன் ப்ச்.
அப்புறம் பார்த்தா நாயக்கர் இடத்தை சிவாதான் கைப்பற்றினார். மாமூல் பிரச்சினை.’’ இப்படியான பேச்சுக்கள காதில் கேட்டன.
வட சென்னையில் பெரும் மக்கள் திரல் ஏழுமலைக்கு இறுதி வலம்.அங்கு கூடி ஓர் இறுதிஉரை நிகழ்த்தி மவுன அஞ்சலிக்குப் பின், சிதை எரியூட்டப்பட்டது !
தூத்துக்குடி கேவிகே சாமியின் முடிவும் 60ஆண்டுகளுக்கு முன் நடந்தது.
கடந்த 1996க்கு பின் மதிமுக நிர்வாகி
வட சென்னை சிவாவும் ஏழு மலை போலவே நள்இரவில் கொலை செய்யப்பட்டார்.
இப்படியான பல ரண நினைவுகள் மனதில் உள்ளது.
#சார்பட்டா_இராயபுரம்ஏழுமலை_நள்ளிரவுகொலை
#மதிமுக
#mdmk
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
8-7-2024
படங்கள்-
1. சார்பட்டா ஏழுமலை
2. வைகோ மாநிலங்கவை திமுக எம்பியாக, தேர்தலில் தலைமை செயலகத்தில் முதன்முறை வேட்பு மனு தாக்கல்
No comments:
Post a Comment