Sunday, July 21, 2024

பாண்டிய நாட்டின் பழைய நகரங்களின் அழகிய தமிழ்ப்பெயர்கள் பாண்டியர் காலத்தில் இன்றைய திருநெல்வேலி என்பது

பாண்டிய நாட்டின் பழைய நகரங்களின் அழகிய தமிழ்ப்பெயர்கள்
பாண்டியர் காலத்தில் இன்றைய திருநெல்வேலி என்பது 


"மேல்வேம்ப நாடு" "கீழ்வேம்ப நாடு" என இரு பாகங்களாக இருந்துள்ளது.
பொருநை ஆற்றின் கீழ்பகுதி "கீழ்வேம்ப நாடு" மேலும் திருநெல்வேலிக்கு "சாலிப்பதியூர்" என்கிற பெயரும் இருந்துள்ளது.
அரிகேசவனல்லூரின் பழைய பெயர் "முள்ளிநாடு" அரிகேசரி எனும் பாண்டியன் பெயரில் இது உருவானது. மாறந்தை ஊரின் பழைய பெயர் "மாறன்தாயநல்லூர்" (மாறன் - பாண்டியன்)
பாளையங்கோட்டையின் பழைய பெயர் "ஸ்ரீ வல்லப சதுர்வேதி மங்கலம்" 
ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லப பாண்டிய தேவர் காலத்தில் இவ்வூர் உருவாக்க பட்டதாக அறியமுடிகிறது (815-865 AD).
இன்றைய களக்காடு வனப்பகுதியின் பழைய பெயர் "கிளாங்காடு"
(கிளா - ஒரு வகை மரம்)
கடையநல்லூரின் பழைய பெயர்கள் "கடையால்நல்லூர்" 
"வடவாரி நாடு கடயலூர்" "மருதூர்க்கோட்டை" என்பதாகும்.
இலத்தூர் ஊரின் பழைய பெயர் "இலவஞ்சோலை"
இன்றைய கங்கைகொண்டானின் பழைய பெயர் "சீவல்லப மங்கலம்" பின் சோழர் காலத்தில் பாண்டி நாட்டு முடிகொண்ட சோழவள நாட்டு கீழ்கள கூற்றத்து கங்கைகொண்ட சோழ சதுர்வேதி மங்கலம்.
மானூரின் பழைய பெயர் "மானவன்நல்லூர்" 
சுத்தமல்லி ஊரின் பழைய பெயர்
"வீர விநோத சதுர்வேதி மங்கலம்".
பண்புளி / பண்பொழி ஊரின் பழைய பெயர் "வடவாரி நாடு" என்றும் "காங்கேய குலகாலபுரம்"
விஜயநாராயணம் ஊரின் பழைய பெயர்கள் "ஜெயம்கொண்ட சோழ சதுர்வேதி மங்கலம்" "இராசராச சோழ வளநாடு" "உத்தம சோழ வளநாடு".
சீவலப்பேரி ஊரின் பழைய பெயர் 
ஸ்ரீ வல்லப பாண்டிய தேவர் பெயரில் உருவானது."ஸ்ரீ வல்லபபேரி" (பேரேரி - பெரிய ஏரி) 
வல்லநாடு / வல்லன்நாடு "ஸ்ரீ வல்லப பாண்டிய தேவர்" பெயரில் உருவான 
ஊர். இதன் பழைய பெயர் "செயங்கொண்ட பாண்டியபுரம்" "செயங்கொண்ட பாண்டியநல்லூர்".
அகரம் ஊரின் பழைய பெயர் "குருமரைநாடு" எனவும் "பராக்கிரம பாண்டியர் தந்த அகரம்" எனவும் குறிப்புகள் உள்ளது.
மணப்படை வீடு ஊரின் பழைய பெயர் "அம்பலத்தடியான மணப்படை வீடு"
திருவேங்கடநாதபுரம் ஊரின் பழைய பெயர் "அவனி நாராயண சதுர்வேதி மங்கலம்"என வரலாற்று குறிப்புகள் உள்ளன.
சாத்தூரின் பழைய பெயர் "இருஞ்சோ நாடு" பாலாமடை ஊரின் பழைய பெயர் "உதயனேரி" மேலும் இதே வட்டத்தில் 12-13 நூற்றாண்டளவில் "சடையவர்மன் குலசேகர பாண்டிய தேவர்" காலத்தில்‌ பல ஊர்கள்‌ ஒன்றிணைக்கப்பட்டு "முக்கோக்கிழானடிகள்‌ சதுர்வேதி மங்கலம்" எனும் ஊர் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலசெவல் ஊரின் பழைய பெயர் "செவ்வலான வீரகேரள நல்லூர்"
வீரவநல்லூர் ஊரின் பழைய பெயர் - "முள்ளிநாடு" என்றும் "முடிவழங்கு பாண்டிய சதுர்வேதி மங்கலம்" என்றும் விக்ரம பாண்டீஸ்வரமுடைய நாயனார் கோவில் இருப்பதால் "விக்ரம பாண்டிய சதுர்வேதி மங்கலம்" எனவும் பெயர் இருந்தது.
இராதாபுரம் ஊரின் பழைய பெயர் "வரகுண பாண்டிய நல்லூர்"
பத்தமடை ஊரின் பழைய பெயர் "பத்தல்மடை" (பத்தல் - நீர் இறைக்கும் கருவி)
ஆழ்வார்குறிச்சி ஊரின் பழைய பெயர் "கொல்லங்கொண்ட பாண்டிய சதுர்வேதி மங்கலம்". நாங்குநேரி ஊரின் பழைய பெயர் "வானநாடு" "சீவரமங்கை" மற்றும் "நாகனேரி பச்சாற்று போக்கு வானநாடு சீவரமங்கை சதுர்வேதி மங்கலம்" (வானநாடு என்பது வானமாமலை பெருமாளை குறிக்கும் பெயர்)
திருகுறுங்குடி ஊரின் பழைய பெயர் "வைகுண்ட வளநாடு"

#திருநெல்வேலி #நெல்லை
#Tirunelveli #nellai

No comments:

Post a Comment

2023-2024