Wednesday, July 24, 2024

தமிழகத்தில்சட்டஒழுங்கு வெற்றிகரமாகச் செயல்படுகிறது!?

 தமிழகத்தில்சட்டஒழுங்கு வெற்றிகரமாகச் செயல்படுகிறது!? என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்ட மன்றத்தில் சொல்லிக் கொள்கிறார்.

பூனை கண்ணை மூடி கொண்டால் உலகம் இருண்டு விட்டது என்பது மாதிரி இங்கு யாருக்கும் எதுவும் தெரியாது என்று நினைத்துப் பேசி கொண்டிருக்கிறாரா? இல்லை அவருக்குத்தான் இங்கு நடப்பது எதுவும் தெரியவில்லையா?.
எத்தனையோ காவல் நிலைய மரணங்கள் ஏறக்குறைய நூறுக்கு மேல் நடந்துள்ளதாக பதிவுகள் இருக்கின்றன. எத்தனை கொலைகள் பகல் கொள்ளைகள் நடந்தன! பிறகு எத்தனை சாதிக் கலவரங்கள் கள்ளச்சாராயச் சாவுகள் இதற்கெல்லாம் அவர் வெள்ளை அறிக்கை தர முடியுமா? சாத்தான்குளத்து பிரச்சனையில் இவரும் இவரின் பாச தங்கச்சி கனிமொழியும் அன்று அதிமுக ஆட்சியில் கீழேயும் மேலேயும் குதித்தது இன்று வசதியாக மறந்து விட்டனர்.
இதையெல்லாம் விட்டுவிட்டு அல்லது எதுவும் தெரியாதது போல நாட்டில் சட்ட ஒழுங்கு சரியாக இருக்கிறது என்று அவர் துறைக்கு அவரே சான்றிதழ் அளித்து கொள்கிறார் என்றால் என்ன அர்த்தம்.

No comments:

Post a Comment

2023-2024