Wednesday, July 24, 2024

#நள்ளிரவில்_தலைவர்கலைஞர்_கைது செய்யப்பட்ட நாள் இன்று!

 #நள்ளிரவில்_தலைவர்கலைஞர்_கைது செய்யப்பட்ட நாள் இன்று!



உலகமே திடுக்கிட்டு கண்ணீர் விட்ட அந்தச்சம்பவத்தின் வீடியோக் குறுந்தகடை போலீஸ்க் காவலர்களை மீறி சன் டிவிக்கும் அதே நள்ளிரவில் கொண்டு போய் கொடுத்தது நான்தான். அப்பணியை நான் செய்யாமல் இருந்திருந்தால் அந்தச் சம்பவத்திற்கு ஆதாரமே இருந்திருக்காது. மத்திய மாநில மனித உரிமை ஆணையங்களுக்கும் அனுப்பினேன்.இதனால் ஸ்டாலின் உட்பட கைது செய்யப்பட்ட 50,000 திமுகவினர் 48 மணி நேரத்தில் விடுதலை செய்யப்பட்டனர். இப்படி திமுக எதிர் கட்சியாக இருக்கும் போதை அங்கு என் பணிகள் இருக்கும்.


அப்படி நான் செய்ததற்கு ஆன எல்லா ஆவணங்களும் இன்று இருக்கிறது .ஆனால் நான் இன்று திமுகவில் இல்லை. திமுகவிற்கு நன்றி என்பது எப்போதுமே இல்லை! இதை பற்றியான எனது பல விரிவான கடந்த கால பதிவுகள் உள்ளன.

ஆனால் இன்று சேகர்பாபு கே கே எஸ் எஸ் ஆர் போன்ற அதிமுகவினர் ஸ்டாலின் தயவில் அங்கு பிரகாசமாக இருக்கிறார்கள்!வாழ்க!!

#நள்ளிரவில்_கலைஞர்_கைது

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#KSRPost
30-6-2024.
(Photo-2001) 
See less

No comments:

Post a Comment

2023-2024