Thursday, August 15, 2024

என் மண்….

 என் மண்….

என் பூமி…..

#கரிசல்காடு 

வானம் பார்த்த கந்தக மண் 

#சாத்தூர்வெள்ளரிகாய் (பிஞ்சி)  சுண்டக்காய் குடும்பத்தை சேர்ந்தது வெள்ளரிக்காய் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே, மாங்கனீசு, காப்பர், காப்பர் மற்றும் பொட்டாசியம் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.தொப்பை குறைய தினமும் வெள்ளரிக்காய் சேர்ந்த நீர் குடிப்பதன் மூலம் பலன் பெறலாம். வெள்ளரிக்காயில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.வெள்ளரிக்காயில் மெக்னீசியம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன. இது இரத்த அழுத்த அளவை பராமரிக்கிறது. இது தம்னிகளில் உள்ள அழுத்தத்தையும் குறைத்து நீரேற்றமாக வைத்திருக்கிறது. உயர் இரத்த அழுத்தம் கொண்டிருப்பவர்களுக்கு வெள்ளரிக்காய் பரிந்துரைக்க காரணம் இதுதான்.வெள்ளரிக்காய் அழகு தயாரிப்பில் முக்கியமானது. வெள்ளரிக்காயை மசித்து கூழாக்கி ஃபேஸ் பேக் தயாரிக்கப்படுகிறது. இதனால் சருமம் புத்துணர்ச்சியாக இருக்கிறது.

முகம், கண்கள் மற்றும் கழுத்துப்பகுதியில் வெள்ளரிக்காய் மசித்த விழுதை தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை விட்டு குளிர்ந்த நீரில் கழுவி எடுத்தால் சருமத்துக்கு சிறந்த டானிக் கிடைக்கும்.வெள்ளரிக்காயை வழக்கமாக சருமத்துக்கு பயன்படுத்தும் போது பருக்கள் ப்ளாக்ஹெட்ஸ், மற்றும் சருமத்தில் சுருக்கங்களை தடுக்கிறது.

 யகீரை, கேரட் மற்றும் கீரை சாறுடன் கலக்கும் போது இந்த வெள்ளரி முடி வளர்ச்சியின் சேதத்தை சரி செய்கிறது. கீரை உடன் சம அளவு வெள்ளரி சாறு எடுக்கும் போது இது பிற கோளாறுகளை குணப்படுத்தும்.

 வெள்ளரிக்காயில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் மற்றும் காஃபிக் அமிலம் உடலின் தசை நார்கள், குருத்தெலும்பு, தசை நாண்கள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்த உதவுகின்றன. வெள்ளரிக்காயில் சிலிக்காவும் உள்ளது.

இது இணைப்பு திசுக்களை உருவாக்க உதவுகிறது. இது பலவீனமான எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. வெள்ளரி இலைகளின் புதிய சாறுடன் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மூன்றூ அவுன்ஸ் வீதம் குடித்து வந்தால் இது காலராவை போக்க உதவும் மருந்தாக இருக்கும்.

ஹோலிடோசிஸ் பிரச்சனைகளை குணப்படுத்த வெள்ளரிக்காய் சிறந்த உணவு. வெள்ளரிக்காயை மென்று சாப்பிடுவதன் மூலம் வாய் துர்நாற்றம் சரியாகும். இது பாக்டீரியாவிலிருந்து விடுபட உதவும்.

வெள்ளரிக்காய், பீட்ரூட் மற்றும் செலரி சாறு யூரிக் அமிலத்தின் சேர்க்கையை குறைக்கிறது. இதனால் கீல்வாதம் மற்றும் பிற கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது 


The beauty of village. 

The beauty Of nature 

Love of everything  village


#கேஎஸ்ஆர்போஸ்ட் 

#ksrpost 

11-8-2024.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்