Wednesday, August 14, 2024

வாழ்க்கையில் அடிபட்ட பின்பு பிறக்கும் ஞானத்தைதான் நாமெல்லோரும் எப்பொழுதும் பேசிக்கொண்டிருக்


 வாழ்க்கையில் அடிபட்ட பின்பு பிறக்கும் ஞானத்தைதான் நாமெல்லோரும் எப்பொழுதும் பேசிக்கொண்டிருக்

கிறோம். 

நெருப்பு எரிக்காமல் தேன் அடை கிடைக்காது.உதைகாமல் பந்து அது எழும்பாது.வலியது தான் உயிர் பிழைக்கும்.இது வரை இயற்கையின் விதி இதுதான். வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்கள்  வரும்.

நடந்ததை யோசிப்பதைவிட 

இனி எப்படி நடக்க வேண்டும்? என யோசிப்பவர்களே வாழத் தெரிந்தவர்கள்....

வெற்றிகளை மட்டுமே வரலாறுகளை பேசுவதில்லை தோல்விக்கும் அங்கே இடம் உண்டு முயற்சி செய்வோம் இரண்டில் ஒன்று நிச்சயம் கிடைக்கும்.

லக்கனத்தில் சுக்ரன் ஜாதகர் உடல் அவரின் அசைவுகள் மிக நளினமாக இருக்கும் என சொல்வார்கள்

கிராமங்களில்….நாட்டு புற பாடலும் உண்டு.

நமக்கு சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் சில ஆசைகள் மறக்கவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல் சில நினைவுகள் நெருங்கவும் முடியாமல்விலகவும் முடியாமல் சில உறவுகள்…. இதை எல்லம் மீறு ஆற்றுப்படுத்துவது அவசியம். அதுவே நம் வினை…. நம் திடம்…

'ஆற்றுப்படுத்துவது'  என்னும் சொல்லை பலரும் பல இடங்களில் ஆறுதல்படுத்தும் பொருளில் உபயோகித்து வருகின்றனர். உண்மையில் 'ஆற்றுப்படுத்துவது' என்பதன் பொருள் 'வழிநடத்துவது'

#கேஎஸ்ஆர்போஸ்ட்

#ksrpost

9-8-2024


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்