Sunday, November 17, 2024

நீங்கள் நீங்களாகவே இருக்கணும் …குறை ஒன்றும் இல்லை

ஏறக்குறைய மானவர் பருவத்தில் 17 வயதில் அரசியல
 தொடர்பு ஏற்பட்டது. என்னுடைய நண்பர்கள் கிரிக்கெட், ஃபுட்பால்,வாலிபால் என விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது நான் அரசியல் பணிகள் மற்றும் பியூசி படித்துக் கொண்டிருந்தேன்.
ஒரு இளைஞனாக எல்லாவற்றையும் தொலைத்தேன்.
நண்பர்கள், உறவுகள்,வேலை செய்யும் இடம் என எல்லா இடத்திலும்  அரசியல் மட்டுமே தூக்கிப்பிடித்தேன்.
ஓய்வு நேரங்களை எல்லாம் படிப்பதற்கும், சிந்திப்பதற்கும், எழுதுவதற்கு மட்டுமே செலவிட்டேன்.
பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு பொழுதும் மனதில் எழுந்ததில்லை. 
இன்று ஏறக்குறைய  52 ஆண்டுகள் இந்த பொது வாழ்வில் கடந்து விட்டது.

எதையுமே நான் சேர்த்து வைத்துக் கொள்ளவில்லை. 
என்னை பயன்படுத்திக் கொண்ட நண்பர்கள், உறவினர்கள், தோழர்கள் என எல்லோருமே மிக கடினமான சூழ்நிலைகளில் எட்ட நின்று வேடிக்கை பார்ப்பவர்களாக மட்டுமே இருந்தார்கள்.
ஆனாலும் நான் எழுதிக் கொண்டே இருக்கின்றேன். அது என்னுடைய கடமை.
இந்த வாழ்க்கை இப்படித்தான் என்றால் அதை நாம் நிச்சயம் வாழ்ந்து தான் பார்க்க வேண்டும்.

பொருள் சார்ந்த கொள்கைகள் தவறாகக்
கையாளப் படும்போது
ஊழல்கள் எழுகின்றன.
ஊழல் ஊக்குவிக்கப்
படும்போது பேராசை
மனித மனங்களில்
மையமிடுகின்றன.
பேராசை மிகும் போது
அடுத்தவர் நலன் புறக்கணிக்ப்படுகிறது.
அதனால் சுரண்டல்
மேலோங்குகிறது.
சுரண்டியதை பாதுகாக்க பதுக்கல்
தேவைப்படுகிறது.
பதுக்கலினால் பணப்
புழக்கம் பாதிப்படை
கிறது.அதனால் தொழில் முடக்கங்கள்
துவங்குகின்றன.
வேலை இழப்புகள்
தவிர்க்க முடியாதவை
ஆகின்றன.சமூகச் சீர்
கேடுகள் மற்றும் வன்
முறைகள் கொள்ளை
கொலை போன்றன
சமூகத்தின் நடைமுறை
களாகின்றன.எனவே
அளவுக்கு அதிகமான
பொருள் தேடலே சமூகக்
கட்டமைப்பைச் சீர்குலைக்க செய்கிறது.
மாற்றம் செய்ய யுகப்புரட்சி தேவை.அந்த யுகப்புரட்சியையு ஒரு தனி மனிதனால் செய்ய
இயலும்.ஒரு தனி மனித
மாற்றம் உலகை மாற்றிய அண்ணல் காந்தியடிகள், நேத்தாஜி, பகத்சிங், சர்தார் படேல், ஜெபி போன்றவர்களின் வாழ்க்கை உளவியலில்
உணரலாம்.நல்ல இதயங்களின் ஆன்ம
எழுச்சியால் உலகைப்
புரட்டிப் போட்ட வரலாறு
நிறைய உண்டு.
உலகம் சமநிலை பெற
ஆன்ம நெருப்பு ஒவ்வொரு இதயத்திலும் மூட்டப்
பட வேண்டும்.அதுவே 
உலகை மாற்றும் வேள்வி யாக மாறும் என நம்பிக்கை கொள்வோம். குறை ஒன்றும் இல்லை. நலமும் நிறைவான வாழ்வு.இதுவே எனது பார்வை.
••

"இந்த உலகத்தில் முழுமைன்னு ஒன்றும் கிடையாது 
அழகானதுன்னு எதுவும் கிடையாது 
அதீத உண்மைன்னு எதுவும் கிடையாது 
சரின்னு எதுவும் கிடையாது 
தப்புன்னு எதுவும் கிடையாது 
குற்றம்முன்னு எதுவும் கிடையாது 
பாவம்முன்னு எதுவும் கிடையாது 
இந்த உலகம் முழுமையற்றது 
கேவலமுன்னு நாம் சொல்லக்கூடிய அதால் நிறைந்ததுதான் இந்த உலகம் 
எதுவுமே திட்டவட்டமானது கிடையாது 
அப்படித்தான் மனிதர்களும் 
குற்றம் பார்க்கின் சூற்றம் இல்லை 
ஒரு மனிதரை நீங்க பார்க்கும்போது ரொம்ப டிமாண்ட் பண்ண கூடாது 
ரொம்ப கண்டிஷன் பண்ண கூடாது 
ஒரு மனிதரை அவராகவே நீங்கள் ஏத்துக்கணும் 
நீங்கள் நீங்களாகவே இருக்கணும் 
ஒரு ரிலேஷன்ஷிப்பை புஸ் பண்ண கூடாது 
'குறைகளோடு தான் ஒரு மனிதன் இருக்க முடியும் ஒரு பெண் இருக்க முடியும்' 
பரிபூரண அழகு எதுவும் கிடையாது 
பரிபூரண நிம்மதி என்று எதுவும் கிடையாது 
சண்டை இல்லாமல் வாழ்க்கை கிடையாது, 
அழுகை இல்லாமல் வாழ்க்கை கிடையாது 

நலந்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா எனும் நாமம்! என்ற பாசுரம் நினைவில் வருகிறத்த…


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...