Wednesday, April 1, 2015

மோடி-ஒபாமா அணு ஒப்பந்தம்



மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது அமெரிக்க அதிபராக இருந்த புஷ் உடன் இந்திய அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தம் அதிகார பூர்வமாக புனையப்பட்டது. நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பும் நடைபெற்றது. இடது சாரி கட்சிகளான சி .பி.ம், சி .பி.ஐ போன்ற பல கட்சிகள் நாடாளுமன்றத்தில் 2008ல் மன்மோகன் சிங் அமெரிக்காவுடன் போட்ட ஒப்பந்தத்தை எதிர்த்தனர்.

அதில் பல குளறுபடிகளும், நாட்டின் பாதுகாப்பு குறித்து சில சந்தேகங்களும் இருப்பதால் இந்தியாவிற்கு பெரும் கேடு ஏற்படும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்ப்பை தெரிவித்தனர். மன்மோகன் சிங்-புஷ் ஒப்பந்தங்களை ஆதரித்து தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினர். அந்த தொடர் கதையை மோடியும் ஒபாமாவும் தற்போது முடித்து வைத்து சுற்று சுழலை பாதிக்கும் வகையில் பல அணு திட்டங்களுக்கு பச்சைகொடி காட்டிவிட்டனர்.

No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...