Monday, October 26, 2015

அறுபதாம் ஆண்டில் ரீடர்ஸ் டைஜஸ்ட் - ReadersDigest 60 | Homai Vyarawalla


அறுபதாம் ஆண்டில்  ரீடர்ஸ் டைஜஸ்ட் - Readers Digest .
____________________________________________________

கல்லூரி காலகட்டங்களிலிருந்து, அதாவது 1973-74லிருந்து தொடர்ந்து  “ரீடர்ஸ் டைஜஸ்ட்டின்” வாசகன்.  ரீடர்ஸ் டைஜஸ்ட் துவங்கி 60ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி அறுபதாம் ஆண்டு சிறப்பிதழ் வெளிவந்துள்ளது.

பழைய ரீடர்ஸ் டைஜஸ்ட்டில் வெளியான படங்கள், விளம்பரங்கள், கட்டுரைகள் எல்லாம் இந்த சிறப்பிதழில் வந்துள்ளன. அவற்றில் இந்தியாவின் தலைசிறந்த பெண் புகைப்பட நிபுணரான  ஓமாயி வியாரவாலா பற்றிய பத்தியும், அவரது பழைய புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

ஓமாயி வியாரவாலா  பொதுவாக  “டால்டா-13”  என புனைப்பெயரில் ழைக்கப்பட்டவர். இவர் குஜராத் மாநிலம் நவசாரியில் பிறந்த இவர் தனது 13 வயதிலேயே புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வமுள்ளவராக வளர்ந்தார். 40ஆண்டுகள் இந்தியப் பத்திரிகை உலகின் சிறந்த புகைப்பட நிருபராக பணியாற்றி 1970-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். இவருக்கு கடந்த  2011 ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.

1942-ம் ஆண்டு டில்லியில், பிரித்தானிய தகவல் தொடர்பு (பி.ஐ.எஸ்) சேவையில் புகைப்பட நிருபராக பணியாற்றினார்.
இந்தியா சுதந்திரம் அடையும் முன்பே, அப்போதைய ஆங்கிலேயர்கள், மற்றும் இந்திய தலைவர்களின் பேச்சுக்கள், பொதுக்கூட்டங்களில், புகைப்பட நிருபராக பணியாற்றினார்
 அடைந்து 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தேசிய ‌கொடி ஏற்றப்பட்டதை புகைப்படமெடுத்த பெருமை  இவரையே சாரும்.

ரீடர்ஸ் டைஜஸ்ட்  சஞ்சிகையில் இடம்பெற்ற வியாரவாலா எடுத்த படங்கள் மற்றும் அவரது கைவண்ணத்தில் மலர்ந்த கருப்புவெள்ளைப் புகைப்படங்கள்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
 26-10-2015

#KsRadhakrishnan #KSR_Posts #ReadersDigest60 #HomaiVyarawalla

















No comments:

Post a Comment

அதிகாரம் நிரந்தரமில்லை. ‘’ Quality is not an act, it is a habit.”

‘’ Quality is not an act, it is a habit.”   ஞானபீடம் எழுத்தாளர் ஜெயகாந்தன் சொல்லுவார். “வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம் தான்” மிகச் ...