Thursday, November 2, 2017

#பொதுவாழ்வில்தூய்மை #அரசியலில்குற்றவாளிகள்

#பொதுவாழ்வில்தூய்மை
#அரசியலில்குற்றவாளிகள்

எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம்: உச்ச நீதிமன்றம் ஆலோசனை

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி குற்றவாளி என நிருபீக்கப்பட்ட ஒருவர் சிறை தண்டனைக்காலம் முடிவடைந்த பின்னர் ஆறு ஆண்டுகாலம் தேர்தலில் போடியிடக் கூடாது என்று சட்டம் உள்ளது. இதனை ஆயுட்கால தடையாக மாற்ற வேண்டும் என வழக்குரைஞர் அஸ்வினி குமார் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதி மன்றம், மக்கள் பிரதிநிதிகளாக உள்ள அரசியல்வாதிகள் மீதான வழக்குகளின் விவரத்தை கேட்டு பெற்றது. அதில் 1581 அரசியல்வாதிகள் மீது வழக்கு உள்ளதாக  நீதிபதிகள் தெரிவித்தனர். 

குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்களை அரசியலில் இருந்து ஆயுட்காலம் முழுவதும் தகுதி நீக்கம் செய்வது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும்  அரசியல்வாதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கும் யோசனையை நீதிபதிகள் தெரிவித்தனர். 

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையினை டிசம்பர் 13ஆம் தேதிக்கு விசாரனையை  ஒத்திவைத்தனர். மக்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெறும் (right to Re call)சட்டம் சில நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இந்தியாவிலும் அத்தகைய சட்டம் கொண்டு வரவேண்டும் என அடியேன்  இங்கு பதிவு செய்துள்ளேன். இருப்பினும் நீதித்துறை ஆட்சியாளர்களை கண்டு பயமில்லாமலும், பிரதிபலன் கருதி தீர்ப்பு எழுதாமல் இருக்க வேண்டும். பொதுவாக நீதி விற்பனைக்கு அல்ல என்பதை நீதிமன்றங்கள் பறைசாற்றினால் மட்டுமே அரசியல்வாதிகள் சட்டத்திற்கு பயப்படுவார்கள். இல்லையே கண்துடைப்பு தான்.

#பொதுவாழ்வில்தூய்மை
#அரசியலில்குற்றவாளிகள் 
#அரசியல்வாதிகள்வழக்கு 
#மக்கள்பிரதிநிதித்துவசட்டம்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
02-11-2017

No comments:

Post a Comment

*Remember all the trials you've overcome in life*

*Remember all the trials you've overcome in life*. May it remind you to never doubt or give up on yourself. For you have the ability and...