Wednesday, January 16, 2019

பொங்கல் திருநாள்

'உழுங்குலத்தில் பிறந்தோரே
உலகுய்யப் பிறந்தோர்' - கம்பர்.

செங்கதிர்த்தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்.அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக.    -பாரதி

பொங்கல் வாழ்த்துகள்  -

சிறந்த விளைச்சலைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த சூரியனை, அதற்கு  உடன் இருக்கும் மாடுகளை  வணங்கி முழு இயற்கைக்குமே நன்றி செலுத்தி விளைச்சலைத் திருவிழாவாகக் கொண்டாடுவது விவசாய சமூகங்களில் நெடுங்காலந் தொட்டு காணப்பட்டு வரும் முக்கியமானதொரு வழிபாட்டு நிகழ்வாகும். மகர சங்கராந்தி ,லோகரி என பிற பகுதிகளில் கொண்டப்படுகிறது வழிபாடாக தென்னிந்தியாவில் ஆரம்பமாகிய தைத்திருநாள், தற்போது உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடும் முக்கிய கலாசாரப் பண்டிகையாக மாற்றம் பெற்றுள்ளது.

தைப்பொங்கல் அனைத்துச் சம்பிரதாயங்களும் மனிதனுக்கும்இயற்கைக்குமிடையிலான சகவாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றியமைப்பதுடன், மனித சமுதாயத்தின் ஒற்றுமை, மகிழ்ச்சி, ஆகியவற்றைக் குறிக்கோளாவும் கொண்டுள்ளது. இது தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி முழு உலகத்தாருக்குமே சமத்துவம் நன்றி கூர்தல் போன்றவற்றின் முக்கியத்துவத்தை எடுத்தியம்பும் சந்தர்ப்பமாகும்.

#உழவர்திருநாள்
வாழ்த்துகள் . #பொங்கல் வாழ்த்துகள்

#KSRadhakrishnanpostings 
#KSRpostings 
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
15-01-2019


No comments:

Post a Comment

வேலுப்பிள்ளை பிரபாகரன்- Velupillai Prabhakaran

https://youtu.be/WrNmTFAoFw8?si=xJMjMucIKPf6JUWQ