Monday, April 22, 2019

#இலங்கை இதே #மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் #பரராஜசிங்கம் சூடப்பட்ட துன்பியல் நிகழ்வு நடந்தது. அது இன்றும் தொடர்கின்றது.......

#இலங்கை இதே #மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் #பரராஜசிங்கம் சூடப்பட்ட துன்பியல் நிகழ்வு நடந்தது. அது இன்றும் தொடர்கின்றது.......
————————————————
Update-150 death more than 400 people are injured

கிறிஸ்தவ மக்களின் இயேசு கிறிஸ்த்து மரித்து உயிர்த்த புனித நாளான “உயிர்த்த ஞாயிறு” ஈஸ்டர் இன்று கொண்டாடுகின்றார்கள். இன்று 21-4-2019 இலங்கையின் கொழும்பு இரண்டு தேவாலயங்களிலும் மட்டக்களப்பு தேவாலயத்திலும் சங்கர லா போன்ற மூன்று விடுதிகளிலும் குண்டுத்தாக்குதல் திட்டமிட்டு நடாத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு யாரும் எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை. கிறிஸ்தவர்களின் புனித நாளில் இத்தாக்குதல் நடாத்தப்பட்டது உலக சமுதாயம் கண்டிக்க வேண்டும் .
இலங்கையில் நடந்த இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது. மொத்தத்தில் 129 பேர் இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தனர். மேலும் இந்த குண்டு வெடிப்பில் 350 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு தங்கியிருந்த 9 வெளிநாட்டவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது வேதனையான விடயமாகும்.
அதிபர் மைத்திரி சிறிசேனாவும் திருவேங்கடத்தானே தரிசிக்க திருப்பதி வந்து விட்டார். இதுகுறித்து ஒரு அறிக்கையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் தமிழர் மட்டுமல்லாமல் அங்குள்ள மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையில் ஒரு நாடு இருக்கின்றது என்பதை உலக சமுதாயம் உணர்ந்து அங்குள்ள மக்கள் குறிப்பாக தமிழர்கள் அமைதியாக வாழ உரிய முனைப்போடு நாம் செயல்பட வேண்டிய கட்டம் இது ஆகும்.
Image may contain: car and outdoor
இதேபோலவே,ஒரு கிறிஸ்தவ புனிதநன்னாளில் இலங்கை இதே மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் சூடப்பட்ட துன்பியல் நிகழ்வு நடந்தது இன்றும் தொடர்கின்றது. கிறித்துமஸ் நாளன்று டிசம்பர் 24, 2005 அன்று 12:15 மணியளவில் மட்டக்களப்பு புனித மேரி தேவாலயத்தில் வைத்து அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்

சிலர் தவறான தகவல்களையும் வழங்குவது வேதனையான விஷயம் இலங்கையில் யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகள முடிந்த நேரத்தில் இந்த துயர சம்பவம் வேதனையை தருகிறது. இத்தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளை இலங்கை அரசு அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
பிரான்சு தலைநகர் பாரிஸிலும் மிகவும் புகழ்பெற்ற கிறிஸ்தவ தேவாலயம் தீக்கிரையானது. தாக்குதலின் பின்னணி யார் ? எதற்கு? என தெரியவில்லை.
பதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்கள்யும்......

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-04-2019
Image may contain: one or more people

No comments:

Post a Comment

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*.

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*. Believe in yourself. You know personal de...