#டிகேசியும் (#ஜஸ்டிஸ்_கட்சி )
#கல்கியும்
'#தமிழின்_தனித்தன்மை'
————————————————
1928 ஜூன்மாத இறுதியில் நவசக்தியை விட்டு வீடுவந்தபின் ஒருநாள்மாலை டிகேசிதம்பரநாதரின் சொற்பொழிவு அறிவிப்பைப் பார்த்தார். தலைப்பு 'தமிழின் தனித்தன்மை' .ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்றும் மேல்சட்டசபை உறுப்பினர் என்பதும் அவருக்குத் தெரியும். சட்டசபையில் நிருபராகச் சென்றபோது தள்ளியிருந்து பார்த்திருக்கிறார். விதேசித்துணியும் ஜரிகைத் தலைப்பாகையும் அணிந்தவர் என்பதால் அவர்மீது கொஞ்சம் வெறுப்பு உண்டு .அவர் பேச்சைக் கேட்ட கல்கி அசந்துபோனார், ஒருபாட்டை சங்கராபரண ராகத்தில் பாடியதைக் கேட்டவுடன் வியப்பும் ஆனந்தமும்தான் தன்இதயத்தின் எதிரொலி என்று எண்ணினார் கல்கி. அவருடன் நேரிடையாகப் பேசத்தயக்கம் .உடனே உதிர்ந்த மலர்கள் பத்தியில் அவர் பேச்சை நவசக்தியில் வெளியிட்டார். அதன்பின் நாலாண்டுகளுக்குப்பின் கல்கியும் டிகேசியும் நண்பர்களானார்கள். பெநாஅப்புசாமி வீட்டில் நடந்த வாரக்கூடத்தில் தான் துமிலனும் வாசனும் கல்கியும் டிகேசியைச் சந்தித்தனர், நெருக்கம் அன்றிலிருந்துதான். அப்புசாமி சித்திரக்குளம் தெருவில்தான் இருந்தார். கல்கிக்கும் டிகேசிக்கும் பலவிஷயங்களில் ஒருமித்த கருத்து இருந்ததால் நட்புபலம்பெற்ற்து. கம்பராமாயணத்தில் ஈடுபாடு ஏற்பட்டது.

No comments:
Post a Comment