Tuesday, December 1, 2020

 



ஈழ விடுதலை போராட்டத்தில்
தங்கதுரை, குட்டிமணி, ஜெகன்
இலங்கை வெளிக்கடை சிறையில்
படுகொலை செய்யப்பட்டார்கள்.
உலகத்தமிழர்கள்
கலங்கி கொந்தளித்தார்கள்.
1983 கருப்பு ஜூலையில் தமிழகம்
நிலைகுலைந்து போயிருந்தது.

ஈழ விடுதலைக்கான
வீரம் மிக்க குரலாய்
அன்றும் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கும்- அன்றைய
தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் தலைவர்
மாவீரன் நெடுமாறன் குரல்.
அப்போது அவர் சட்டமன்ற உறுப்பினர்

"கதறித்துடிக்கும் ஈழத்தமிழரின்
கண்ணீர் துடைக்க"
1983 ஆகஸ்ட் 7 ஆம் நாள்
மதுரையிலிருந்து
" தியாகம் பயணம்" (நடை பயணம்) புறப்பட்டோம்.
ஆக 15,சுதந்திர தினத்தன்று
இராமேஸ்வரம் அடைந்து
அங்கிருந்து கடல் கடந்து
இலங்கை சேர்வது எங்கள் பயணநோக்கம்

ஆகஸ்ட் 15 இராமேஸ்வரம் சேர்ந்து
கடலில் இறங்கினோம்.
தியாகப்பயணக்குழு
கைது செய்யப்பட்டது.

இதேநாள்,
1983 ஆகஸ்ட் 17 ல் தியாகப்பயணக்குழு
விடுதலை செய்யப்பட்ட நாள்.

நினைவுக்கு கொண்டு வந்த நன்பர் நாமக்கல் திரு 

Sithik Ba

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்