Tuesday, December 1, 2020

 


பிரச்சினைகளை பிரச்சினைகளாக பார்க்காமல் அர்த்தமற்ற, இல்லாத பிரச்சினைகளை பிரச்சினைகளாக பொதுவெளியில் பார்ப்பதுதன் ......
இன்றைய பொது அரசியல் சிக்கல்கள்.
————————————————-



இன்று இந்தியாவின் சுதந்திர தினம். சுப்பிரமணிய சிவா போன்று செக்கிழுத்த சிதம்பரனார் போன்ற பல தியாக சீலர்கள் இந்த தமிழ் மண்ணில் பல களப்பாடுகளை கண்டு மறைந்தனர்.


‘’இளமையை இழந்தார். தேகத்தை இழந்தார். மனைவியை இழந்தார். செல்லவம் இழந்தார். சுகம் இழந்தார். இறுதி வரை இடியாய் இடித்தார். நாட்டிற்காக துடியாய்த் துடித்தார். வீரன் இவன். சிவம் பேசினால் செத்த சவம்கூட பேசும் என்பான் பாரதி!’’ (

கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

)அன்று தமிழ் மாநிலத்தில்.....

இன்று இதே தமிழகத்தில் முதலமைச்சர் வேட்பாளர் ஆவதற்கு சண்டைகள். முதலமைச்சர் என்ற புள்ளி என்பது அவ்வளவு சாதாரணமாகிவிட்டது இவர்களுக்கு. இவர்களை விட எத்தனையோ தியாகிகள் அரசியல் களத்தில் உழைத்து எந்த பதவிகளிலுமே அமராமலேயே பலர் அமரராகி விட்டார்கள். இன்னும் இங்கு இருக்கும் சில தியாக சீலரகள் தற்போது நடக்கும் வியாபார அரசியலால், மக்கள் மூடத்தனமாக பார்க்கத் தவறிவிட்டனர். இங்கே தேர்தலில் வெற்றி பெறுவது என்பது வாக்குகள் விற்பனை முறைதானே. என்ன சொல்ல முடியும். எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீர் செல்வத்திற்கும் முதலமைச்சர் என்ற நிலையை அடைந்தது நியாயம் தானா? அவர்கள் என்ன தியாகங்கள் செய்தார்கள் என்பதை தமிழ் மக்கள் அவர்கள் மனதைத் தொட்டுச் சொல்ல வேண்டும். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று யார் வேண்டுமானாலும் எங்கேயும் வரலாம்;வேண்டுமானாலும் முதலமைச்சராகலாம், எந்த பதவிக்கும் வரலாம். எல்லாம் அதிர்ஷ்டம் தான் என்றால் பொதுவெளியில் மக்களுக்காக பொதுவாழ்வில் உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவையில்லை என்ற தொனியில் சொல்வது அபத்தமானது.

கடந்த 2019 நாடளுமன்ற தேர்தலில் முடிவுகள் வந்த நேரத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.பி.யிடம் பேசிக் கொண்டிருந்த போது, “உழைக்கறவன் உழைச்சிட்டு இருக்கான். அவன் அப்படியே தான் இருக்கான். நேத்து வரைக்கு அரசியல் களத்துல இல்லாதவன் திடீர்னு தேர்தல்ல நிக்கறான், காசு கொடுத்து ஜெயிச்சி எம்.பி ஆகி போறாங்க, இது என்ன அர்த்தம்” என்று தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பியிடம் நான் விவாதித்துக் கொண்டிருந்த போது, அவர் அதற்கு,
“உழைக்கறவன் உழைச்சிட்டு இருக்கணும், அதற்க்கு என்ன?இதெல்லாம் பாக்க முடியுமா?இப்படித்தான் ” என்று இறுமாப்பாக பேசிய பேச்சு இன்றைக்கும் மறக்க முடியவில்லை.

இப்படி தான் இன்றைய அரசியல் என்ன செய்ய? இன்று நேர்மையான தியாகரீதியான அரசியல் இல்லையென்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் ஒரு கட்சியில் இன்று நடந்த காட்சிகளாக இருக்கலாம்.இது தமிழ் மண்ணுக்கு ஏற்பட்ட அவமானம்தான். எந்த தகுதியும் தியாகமும் இல்லாமல் பொறுப்புக்கு வந்தவர்கள் தான் இவர்கள். திடீரென முதலமைச்சர் என்ற இந்த உச்சப் பொறுப்புக்கு வந்தவர்கள் தான். இவர்கள் அமைச்சரவையில் இடம்பெற்று அமைச்சர்களாகலாம், அதை மறுக்கவில்லை. தமிழக முதலமைச்சராக அமர்ந்தார்கள் கடந்த காலத்தில். அந்தப் பதவியில் திரும்ப அமர இவர்களுக்குள் இன்று சண்டைகள் போட்டிகள். இது அரசியல் அல்லவே. இது தனிப்பட்ட நபர்களுடைய இருத்தலும், சுயநல பிரச்சினைகள் தானே. இப்படி இவர்களுக்குள்ளான சண்டைகளை ஊடகங்கள் அம்பலப்படுத்தி எழுதாமல் இதை தமிழ்நாட்டின் தலைபோகிற பொதுப்பிரச்சினையைப் போல நினைப்பது தான் வேதனையாக இருக்கின்றது. என்ன செய்ய?

பிரச்சினைகளை பிரச்சினைகளாக பார்க்காமல் அர்த்தமற்ற, இல்லாத பிரச்சினைகளை பிரச்சினைகளாக பொதுவெளியில் பார்ப்பது (issues are non issues here but nonissues are non issues here)இங்கு எல்லோருக்கும் வாடிக்கையாகிவிட்டது.இங்குதான் தகுதியே தடை. வேடிக்கை மனிதர்கள் மத்தியில் நல்லவற்றை புரிதலும் சிந்திப்பதும் இல்லையென்றால் என்ன சொல்லி என்ன பயன்.இதுவும் கடந்து செல்லும்.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
15.08.2020
#ksrposts

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்