Wednesday, February 10, 2021

#அருந்தமிழ்_தொண்டர்_அரங்கசாமி_பிறந்த_தினம்


———————————————————
புதுவை மாநில பிரதேசமான காரைக்கால் பகுதி தமிழகத்தோடு இணையவேண்டுமென்று போராடியவர் அரங்கசாமி.
புதுச்சேரி மாநிலம், திருநள்ளாறு வட்டத்தில் உள்ள இளையான்குடி என்னும் சிற்றூரில், 1884 பிப்ரவரி., 6-ம் தேதி பிறந்தவர் அரங்கசாமி நாயக்கர்.
பிரான்ஸ் நாட்டிடம் அடிமைப்பட்டிருந்த புதுசேரியின் விடுதலைக்காகப் போராடினார். சிறைவாசம் அனுபவித்தார். திருநள்ளாறு நகர்மன்றத் தலைவராகப் பணியாற்றினார். சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

அரங்கசாமி நாயக்கர், தன் நண்பர்களுடன் இணைந்து, ‘பிரெஞ்சிந்திய குடியரசு பத்திரிக்கை’ எனும் இதழை வெளியிட்டார். தமிழிலக்கணம், மொழிக் கலப்பு பற்றி பல கட்டுரைகள் எழுதியுள்ளார். சுதந்திர போராட்டம், சுயமரியாதை இயக்கம், தமிழ் மொழி வளர்ச்சி என, பல்வேறு தளங்களில் இயங்கினார். 1943 ஜனவரி., 6-ம் தேதி, தன் 59-வது வயதில் காலமானார்.
அருந்தமிழ் தொண்டர் அரங்கசாமி நாயக்கர் பிறந்த தினம் இன்று.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
KSR_Post
06.02.2021

No comments:

Post a Comment

2023-2024