Wednesday, February 10, 2021

#தமிழகத்தில்_இருக்கும்_அங்கீகரிக்கப்படாத_கட்சிகள்....


———————————————————
இந்தியாவில் தமிழகத்தில் அதிகமான கட்சிகள் உள்ள மாநிலம் . கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் காளான்கள் மாதிரி அங்கீகரிக்கப்படாதக் கட்சிகளின் பதிவுகள் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 184 கட்சிகள் .இதனால் நாட்டிற்க்கு எந்த விதப்பயன்பாடும் இல்லாமல் மக்கள் நலமில்லாமல் பல கட்சிகள் துவங்கப்பட்டுகிறது. இந்தக் கட்சிகள் சிலரின் சுய லாபத்துக்காகவும் லெட்டர்பேடு கட்சிகளாகவும் உள்ளன.
கடந்த பத்தாண்டுகள் 2010-லிருந்து அங்கீகாரமற்ற கட்சிகள் 1112லிருந்து 2003 என்று இன்றைக்கு கூடுதலாக இந்தக் கட்சிகள் தேர்தல் கமிஷனில் பதிவாகியுள்ளன.

இந்தக் கட்சிகள் 2017-ல் 6138 பேரிடமிருந்து ஏறத்தாழ 25 கோடி ரூபாய் பணத்தை வெட்டியாக நன்கொடை பெற்றுள்ளது. 2018 முதல் 19 வரை 6860 பேரிடமிருந்து ஏறத்தாழ 66 கோடி ரூபாய் அங்கீகரிக்கப்படாதக் கட்சிகள் பணத்தை பெற்றுள்ளன. மொத்தம் 90 கோடி ரூபாய் பணம் ஏதாவது உருப்படியாக செயலுக்கு பயன்பட்டு இருந்திருக்குமா..? நிச்சயமாக இருந்திருக்காது. இந்தப் பணம் ஒரு சில சுயநலவாதிகள் தங்களை அடையாளப்படுத்துவதற்கும், ஊடக வெளிச்சத்திற்காகவும், தங்களுடைய சுய லாபத்துக்கும் பயன்பட்டிருக்கும். வேறெந்த வகையிலும் பயன்பட்டிருக்காது. என்பது தான் வேதனையான விடயம். இப்படி அரசியல் கட்சிகள் என்ன நோக்கத்திற்காக எண்ணிக்கையில் பெருகிக் கொண்டேப்போகிறது. கொள்கைக்காகவா, மக்கள் நலனுகாகவா, அரசியல் ஜனநாயகத்தில் கடமையாற்றவா இல்லே இல்ல. உலகில் எந்த நாடுகளிலும் இல்லாத வகையில் இங்கு அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு போவது நாட்டுக்கு நல்லதல்ல, அரசியலுக்கும் நல்லதல்ல.
ஜாதி இல்லை, மதம் இல்லை, என்கிறார்கள். ஆனால் அந்த சாதியையும் மதத்தையும் மேலும் வளர்க்கவே இந்தக் சில கட்சிகள் துவங்கப்பட்டிருப்பதை கண் முன்னேப் பார்க்கின்றோம். சாதி வாரி கணக்கெடுப்பு, ஒரு சாதிக்கு இவ்வளவு சதவீதம் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் என்று சாதி உரிமை என்று மார்த்தட்டிப் பேசுவது, இன்னொரு புறம் தகுதியற்ற தலைவர்களையும், குற்றவாளிகளையும், கிரிமினல்களையும் சிறைக்கு சென்றவர்களையும் உச்சத்திற்கு சென்று ஆதரித்து தலைமை ஏற்க வாருங்கள் என்று அடிமைத்தனமாக கோஷங்கள் எழுப்புவது. பணம், பதவி, அதிகாரம் மட்டுமே இன்றைய நிலையில் போற்றப்படுகிறது . நன பண்புகளுக்கு மதிப்பு இல்லை. அதனால்தான் நாடு விடுதலை பெறுவதற்காகச் சிறை சென்ற வ உசி, சிவா போன்றவர்கள் சிறையிலிருந்து வெளிவந்தபோது அவர்களை பெரும் கூட்டங்கள் வரவேற்கவில்லை. மாறாக கிரிமினல் வழக்குகளில் சிறை சென்றவர்கள் வெளிவரும்போது, பிரம்மாண்டமான கூட்டங்கள் வரவேற்கின்றன. ஊழல் செய்து சிறை சென்றவர்கள்தான் இன்றைய தியாகிகள், தலைவர்கள்,ராஜ மாதக்கள், அன்று நாட்டுக்காகச் சிறை சென்றவர்கள் அல்ல. இதுதான் இன்றைக்கு அரசியல் கட்சிகளில் நடக்கின்றது.
இப்படி காட்சிப்பிழைகள்....
வாக்காளர்களின் வாக்குகளை காசுக்கு விலைக்கு வாங்குவது, கிரிமினர்களை வேட்பாளர்களாக நிறுத்தி எம்.பி, எம்.எல்.ஏ என்ற உச்சத்திற்கு எல்லாம் வைப்பது இப்படிப்பட்டக் கட்சிகள் தானே. ஆளுயர போஸ்டர், ஆளுயர கட்அவுட் இப்படிப்பட்ட அரசியல் கட்சிகள் தானே காளான்கள் போன்று வளர்கிறது. இது ஜனநாயகத்திற்கு பிணி அல்லவா. இவர்கள் அப்படி என்ன சாதிக்கப்போகிறார்கள், தங்களுடைய சுயலாபத்துக்காக, கோடிக்கணக்கான பணம் இதனால் விரயமாகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டாமா..?
•••••
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த 2,360 கட்சிகளில் 98% அங்கீகாரமில்லாத கட்சிகள்:10 ஆண்டுகளில் ஆயிரம் கட்சிகள் பதிவு:
ஏடிஆர் அமைப்பு தகவல்.
தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்த 2,360 அரசியல் கட்சிகளில் 97.50 சதவீத அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளாகும். கடந்த 10ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு (ஏடிஆர்) தெரிவித்துள்ளது.
ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு (ஏடிஆர்) வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் என மொத்தம் 1,112 கட்சிகள் கடந்த 2010ம் ஆண்டு நிலவரப்படி பதிவு செய்யப்பட்டு இருந்தன. இது கடந்த 10 ஆண்டுகளில் அதாவது 2019-ம் ஆண்டில் இரு மடங்கு அதிகரித்துள்ளது. 2019-ம் ஆண்டு நிலவரப்படி 2,301 கட்சிகளாக அதிகரித்துள்ளன.
குறிப்பாக கடந்த 2013 முதல் 2014ம் ஆண்டுக்கு இடையே கட்சிகள் புதிதாகப் பதிவு செய்த எண்ணிக்கை 18 சதவீதம் அதிகரித்துள்ளது. 2018-19ம் ஆண்டுக்கு இடையே 9.8 சதவீதம் புதிய கட்சிகள் பதிவு அதிகரித்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் இதுவரை 2ஆயிரத்து 360 அரசியல் கட்சிகள் பதிவு செய்துள்ளன. இதில் 97.50 சதவீதம் அதாவது, 2ஆயிரத்து 301 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாதவையாகும். அதுமட்டுமல்லாமல் 2018-19-ம் ஆண்டில் 2,301 பதிவு செய்த அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளில் 78 கட்சிகள் பெற்ற நன்கொடை குறித்த விவரங்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன. 2017-18ம் ஆண்டில், 82 அரசியல் கட்சிகள் குறித்த நன்கொடை விவரங்கள் மட்டுமே அந்தந்த மாநில தேர்தல் ஆணைய இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018-19ம் ஆண்டில் 6,860 நன்கொடையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட ரூ.65.45 கோடியும், 2017-18ம் ஆண்டில் 6,138 பேரிடம் இருந்து பெறப்பட்ட ரூ.24.6 கோடியும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அப்னா தேஷ் கட்சி மட்டும் 2017 முதல் 2019ம் ஆண்டுகளில் ரூ.63.65 கோடி நன்கொடை பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
2017-18-ம் ஆண்டில் 39 அரசியல்க ட்சிகள் மட்டுமே, தாங்கள் பெற்ற நன்கொடை குறித்த பங்களிப்பைத் தெரிவித்துள்ளஅன. 2018-19-ம் ஆண்டில் 38 கட்சிகள் மட்டுமே தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளன. ஒருநாள் தாமதம் முதல் 514 நாட்கள் தாமதாக அரசியல் கட்சிகள் தங்கள் நன்கொடை விவரங்களைத் தாக்கல் செய்துள்ளன.
மாநிலவாரியாகப் பார்த்தால், அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 653 அரசியல் கட்சிகள்(28.38%) உள்ளன, அடுத்ததாக டெல்லியில் 291 கட்சிகள்(12.65%), தமிழகத்தில் 184 கட்சிகள்(8%) உள்ளன.2018-19ம் ஆண்டில் பிஹாரில் மொத்தம் 132 கட்சிகளில் 21 கட்சிகள் மட்டுமே நன்கொடை விவரங்களைத் தாக்கல் செய்துள்ளன. உ.பியில் 653 கட்சிகளில் 20 கட்சிகள் மட்டுமே நன்கொடை விவரங்களை அளித்துள்ளன. டெல்லியில் 18 கட்சிகளும் அளித்துள்ளன.
மத்தியப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா,இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட 25 மாநிலங்களில் இருக்கும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளிடம் இருந்து 2018-19ம் ஆண்டுக்கான நன்கொடை விவரங்கள் இல்லை. 2017-18ம் ஆண்டுக்கான நன்கொடை விவரங்கள் 21 மாநிலங்களில் உள்ள அங்கீகரிக்கப்படதாக கட்சிகளிடம் இருந்து வரவில்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
KSR_Post
06.02.2021

No comments:

Post a Comment

2023-2024