Wednesday, February 10, 2021

#சீனாவின்_பேச்சைக்_கேட்டு_அத்துமீறும்_இலங்கை

இலங்கை, சீனாவின் ஆலோசனை மற்றும் உதவியின் பேரில் இந்தியாவிடம் கடனாக பெற்ற ரூபாய் 3000 கோடியை நவம்பர் 2022 கால அவகாசம் இருக்கும்பொழுது இந்தியாவிடம் திருப்பிக்கொடுத்துள்ளது. இந்தியாவிடம் கடனாக 400மில்லியன் டாலர் இலங்கை இந்தியாவிடம் பெற்றது. இப்படி அவசர அவசரமாக கொடுக்கவேண்டியக் காரணம் கிழக்கு முனையம் பிரச்சினை தான். கடந்த 2009-ல் இந்தியாவும் ஜப்பானும் இந்தக் கிழக்கு முனையப் பணியை ஆரம்பிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியும் சீனாவின் தூண்டுதலால் இலங்கை தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு சர்வதேச ஒப்பந்தத்தை குப்பைத் தொட்டியில் போட்டது. இதை இந்தியா கடுமையாக எடுத்துக்கொள்ள வேண்டாமா…?

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
07.02.2021

No comments:

Post a Comment

2023-2024