Wednesday, February 10, 2021

#நீதிமன்றங்களில்_இருக்கும்_காலிப்பணியிடங்களும்_வழக்குகளும்...


———————————————————-
நாடு விடுதலை பெற்று 71 வருடங்கள் ஆகின்றன. மக்கள் தங்கள் உரிமைகளுக்கு பரிகாரம் தேடும் இடம் நீதிமன்றங்கள். அந்த நீதிமன்றங்களின் குறைகளை எங்கு போய் முறையிட முடியும். ‘மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம்’ கங்கையே சூதகமானால் எங்கே மூழ்குவது..? அப்படித்தான் இன்றைய நீதித்துறை உள்ளது.
இன்றைய நீதிமன்றங்களின் நிலவரம் என்று பார்த்தால் உச்சநீதிமன்றத்தில் 34 நீதிபதிகளில் இன்னும் 1 நீதிபதி இடம் காலியாக உள்ளது. பல்வேறு உயர்நீதிமன்றங்களில் 1,079 நீபதிகள் எண்ணிக்கையில் 396 பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளது. மாவட்டம் மற்றும் சார்பு நீதிமன்றங்களில் இந்தியா முழுவதும் 23,597 நடுவர்கள் உள்ளர். இங்கும் பதவிகள் நிரப்பப்படாமல் 5453 இடங்கள் காலியாக உள்ளன.

சரி நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களைப் பார்த்தால் உச்சநீதிமன்றத்தில் இந்த வருடம் ஜனவரி மாதம் வரை 65,086 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல்வேறு உயர்நீதிமன்றங்களில் 51,52,921 வழக்குகளும், கீழாண்மை நீதிமன்றங்களில் 3,44,73,068 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்த நிலையை குறித்து தொடர்ந்து கடந்த 45 ஆண்டுகளாக கோரிக்கையாக பேசப்பட்டும் முழுமையாக இப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை. இதுதான் இன்றைக்கு இந்தியாவின் நீதித்துறையின் நிலை.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
09.02.2021

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்