Wednesday, February 10, 2021

#நீதிபதி_எம்_எம்_இஸ்மாயில்


நீதித்துறையின் மாண்பை சொன்ன நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் நினைவு வந்தது. இன்று அவருடைய பிறந்த தினம். இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் வேறு உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டப்போது அதை ஏற்றுக்கொள்ளாமல் போராடியவர். சட்டக்கல்லூரி படித்த காலத்திலிருந்து இவரோடு அறிமுகமும் பழக்கமும் ஏற்பட்டதுண்டு.

நாகப்பட்டிணம் மாவட்டம் நாகூரில், 1921 பிப்ரவரி, 8-ல் பிறந்தவர், மு.மு.இஸ்மாயில். இளம் வயதிலேயே தாய், தந்தையை இழந்தார். உறவினர்களின் அரவணைப்பில் வளர்ந்தார். சென்னை சட்டக்கல்லூரியில் பயின்று, பட்டம் பெற்றார். காந்தியத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். தமிழக அரசின் கூடுதல், தலைமை வழக்கறிஞராக பொறுப்பு வகித்தவர். பகுதி நேர சட்ட விரிவுரையாளராகவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பணி ஆற்றினார். 1979-ல், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1980 அக்டோபர் 27 முதல் நவம்பர் 4 வரை தமிழகத்தின் தற்காலிக கவர்னராகவும் செயல்பட்டார்.
கம்ப ராமாயணத்தில், புலமை பெற்றிருந்தார். அதன் விளைவாக, 1975-ல் நண்பர்கள் துணையோடு, சென்னையில் கம்பன் கழகத்தை நிறுவி, அதன் தலைவராக செயல்பட்டார். 2005 ஜனவரி 17-ல் தன் 84 வது வயதில் காலமானார்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
08.02.2021

No comments:

Post a Comment

#விருதுநகர்மாவட்டத்தில்களப்பணியிலமுதல்வர்முகஸ்டாலின்!

#விருதுநகர்மாவட்டத்தில்களப்பணியிலமுதல்வர்முகஸ்டாலின்! அந்த மாவட்டத்தின் அமைச்சர்களான சாத்தூர் ராமச்சந்திரனையும் தங்கம் தென்னரசுவையும் அதற்கா...