Tuesday, November 14, 2023

#*தினம் ஒரு கேள்வி-3* : *To முதல்வர் ஸ்டாலின்* #*நீட் தேர்வுக்கு விதை_போட்டது காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி மறந்துவிட்டதா முதல்வரே*? Neet

#*தினம் ஒரு கேள்வி-3* 
: *To முதல்வர் ஸ்டாலின்*
#*நீட் தேர்வுக்கு விதை போட்டது காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி மறந்துவிட்டதா முதல்வரே*? 

நீட்டை ஒழிப்போம் என்று கையெழுத்து இயக்கம் நடத்தும் திமுகவினருக்கு ஒரு நினைவூட்டல்..திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் தான் இந்த நீட் தேர்வுக்கான விதை போட்டது.

ஆனால், யாரோ நீட் தேர்வு கொண்டுவந்ததாகவும் அதை கடுமையாகத் தாங்கள் எதிர்ப்பதாகவும் முதல்வரும் அவரது மகனும் - அமைச்சரும் எதிர்ப்பிரச்சாரம் செய்வது எந்த வகையில் நியாயம்.



கடந்த 2021 தேர்தலில் வென்றால் நீட் தேர்வை நீக்குவதற்கு தான் முதல் கையெழுத்து என்று எந்த வாயால் சொன்னீர்கள். நீட் எவ்வாறு சட்ட வடிவமானது என்று உங்களுக்குத் தெரியாதா?




நீட்டை மாற்ற முடியாது என்பது இந்திய மருத்துவ கவுன்சில் துறை, பிற சட்டங்கள் மூலம் தகுதி தேர்வுகள் அடிப்படை என்பது உறுதியான சட்டமாக்கப்பட்டு விட்டது. பல மேல் முறையீடுகளை வழக்குகளை தாக்கல் செய்தபின்பும் அதைப் பலவறாக அலசி ஆராய்ந்த உச்ச நீதிமன்றமே நீட் தேர்வு அவசியமானது அதை நீக்க முடியாது என்று தீர்ப்பளித்து விட்டது. பின் நாடாளுமன்றத்தில  விவாதித்து நிறைவேற்றி குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று சட்டமானது.கையெழத்துகள் வாங்கி நீக்க முடிந்தால், நல்லது ஆனால் முடியுமா? 
 இது இல்லாத ஊருக்கு வழி சொல்லும் கதை.

அதன் பின்னரும்  நீட் தேர்வை ஒழிப்போம் என்று கூறுவது அரசியல் ஞானமற்ற சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. அல்லது மக்களிடையே,மாணவச்செல்வங்களிடை
யே ஒரு குழப்பமான மனநிலையை உருவாக்குவதாக தான் இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட்டை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்துவோம்னு தான சொல்லிருக்கனும்…
மொத கையெழுத்துலயே நீட்டை ஒழிச்சிருவோம்னு பொய் சொன்னீங்க..

நீட் வேண்டும் என்று நீதிமன்றம் சென்று போராடியது நளினி சிதம்பரம் , 
ப சிதம்பரத்தின் மனைவி. அன்று அமைச்சராக இருந்தவர்,ப. சிதம்பரம் காங்கிரஸ் ஆட்சியின் நீட் இன்று எதிர்க்கிறார். வேடிக்கை மனிதர்கள்.

உண்மையில் முதல்வர் நீட் தேர்வை ரத்து செய்வாரா? அதற்கான என்ன வழியை வைத்துள்ளார்கள்? அந்த நீட் ரத்து ரகசியம் என்ன?  இன்னும் இரண்டரை ஆண்டு காலங்கள் மிச்சம் இருக்கிறது. முடியுமா? இயலுமா? நீட்டை ரத்து செய்ய முயலலாம், முயற்சி செய்வாரா முதல்வர்?  என்பது விலை மதிப்பற்ற வினாக்கள்.50 லட்சம் கையெழுத்து இயக்கம் கண் துடைப்பா? காலம் தான் பதில் சொல்லும். பதில் இல்லாவிட்டாலும் கேள்விகள் தொடரும் முதல்வரே...

app:///var/mobile/Library/SMS/Attachments/0c/12/2D94CF17-C16B-4B43-BB2E-F35D9DB395FD/f342ef22-6710-47d9-a237-acf8a6acc39a.MP4
#neet_dmk
#நீட்_திமுக

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
13-11-2021.


No comments:

Post a Comment

*Run your own race. No one cares what you are doing*

*Run your own race. No one cares what you are doing*. Think yourself as a powerful creator. You will see opportunities to get your goal, and...