Saturday, November 11, 2023

திமுக #*தினம் ஒருகேள்வி* *முதல்வர்அவர்களே*... #*மதுவிலக்கு உறுதிமொழி?* (2)

#*தினம் ஒருகேள்வி* *முதல்வர்அவர்களே*...
#*மதுவிலக்கு உறுதிமொழி?*
(2) 
—————————————
*மதுவிலக்கை அமல்படுத்தி ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாமே முதல்வர் ஸ்டாலின் அவர்களே ..எது தடுக்கிறது?*

காங்கிரஸ் காலத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தது. அண்ணாவின் ஆட்சியில் அவரும் மதுவிலக்கை அமுல்படுத்துவதில் உறுதியாக இருந்தார். பொருளாதாரச் சிரமம் காட்டி கலைஞர் 1971 ஆம் ஆண்டு மது விலக்கை ரத்து செய்தார். ராஜாஜி கூட ஒரு முறை இந்த மதுவிலக்கு விஷயத்தில் தீவிரத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கூட கோபாலபுரம் கலைஞர் வீட்டிற்கு கொட்டும் மழையில் வந்து சொல்லிப் பார்த்தார். கலைஞர்  மறுத்துவிட்டார். காமராஜர் சொல்லி பார்த்தார். மதுவிலக்கு தொடர ஸ்தாபன காங்கிரஸ் கடுமையாக போராடியது. நாராயணசாமி நாயுடு விவசாய சங்கம் வலிமையாக அன்று  இருந்தது. இந்த









இரண்டு அமைப்பு போராடத்தில் மாணவ அரசியல் காலத்தில் பங்கேற்றேன்.

கடந்த  அதிமுக ஆட்சி காலத்தில்  இன்றைய முதல்வர் ஸ்டாலின் அன்று கிராமங்கள் தோறும் பயணம் சென்று கிராம சபையில் பெண்களைச் சந்தித்தபோது அவர் கொடுத்த முதல் வாக்குறுதி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக மதுவிலக்கை அமல்படுத்தும் திட்டத்தில் தான் முதல் கையெழுத்து என்று பிரச்சாரம் செய்தார்.

கனிமொழி தனது வாக்குறுதியில் மதுவினால் பெண்கள் படும் துயரத்தை கணக்கில் கொண்டு கட்டாயம் மதுக் கடைகளை ஒழித்தே தீருவோம் என்று போகும் இடங்களில் எல்லாம் பிரச்சாரம் செய்தார்.

மதுவிலக்கு நாயகன் மறைந்த சசி பெருமாள் இது குறித்து திமுக தலைவர் கலைஞர், ஸ்டாலினை எட்டு ஆண்டுகளுக்கு முன் சந்தித்த போது திமுக ஆட்சிக்கு வந்தால் மது விலக்கு உறுதியும் வழங்கப்பட்டது. அப்போது  நானும் உடன் இருந்தேன்.

அதிமுக ஆட்சியில் கலைஞர் காலத்தில் 
மதுவிலக்கு போராளி சசி பெருமாள் மதுக்கடைகளை ஒழித்து மதுவிலக்கை அமலுக்கு கொண்டு வரவில்லை எனில் தற்கொலை செய்துகொள்வேன் என்று செல்போன் கோபுரங்களில்  ஏறி எச்சரிக்கையுடன் கூடிய வேண்டுகோள் வைத்தார். ஜிலை1, 2015 அன்று கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே தமிழ்நாடு – கேரள எல்லை அருகே உண்ணாமலைக் கடை என்ற ஊரில் கல்வி நிறுவனங்களுக்கும், வழிபாட்டுத்தலங்களுக்கும் அருகிலுள்ள மதுக்கடையை மூடக்கோரி, இருநூறு அடி உயர அலைபேசி கோபுரத்தின் உச்சிமீது ஏறிப் போராடிய போது இவர் உயிரிழந்தார். காவல் துறை சசிபெருமாளின் மரணத்தை தற்கொலை வழக்காக பதிவு செய்தது.

கலைஞரும் சசிபெருமாளின் மரணத்தை ஒட்டி  இரங்கல் தெரிவித்தும் மதுக்கடைகளை  ஒழிப்பதற்கான முதல் கையெழுத்தாக திமுக ஆட்சி  வந்தவுடன் நான் போடுவேன் என்று வாக்குறுதி தந்தார். கலைஞர் தனது அறிக்கையில் (ஆகஸ்ட்6, 2015 வியாழக்கிழமை)"திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று 21-7-2015 அன்று நான் அறிவித்திருந்த போதிலும், தமிழகமெங்கும் உடனடியாக மதுவிலக்கை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்று அ.தி.மு.க. அரசை வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களின் தொடர்ச்சியாக, தமிழக மக்களின் ஒருமித்த உணர்வுகளை எதிரொலித்திடும் வகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 10-8-2015 திங்கள்கிழமையன்று மாவட்டத் தலைநகரங்களில், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர் தலைமையில் மதுவிலக்கை நடை முறைப்படுத்தக் கோரி அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்று 3-8-2015 அன்று நான் விடுத்த அறிக்கையில் தெரிவித்திருந்தேன்’’. என கலைஞர் கூறியிருந்தார். 

இப்படி உறுதி கொடுத்த ஸ்டாலின்,ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து இதுவரை மதுவிலக்கு அதற்குறிய எந்தவித சகுனங்களும் தெரியவில்லை. தற்போது முதல்வர் ஸ்டாலின் மதுவிலக்கை நாங்கள் தேர்தல் வாக்குறுதியாகச் சொல்லவில்லை என்று சொல்லுகிறார்.

சொன்னதைச் செய்வோம் சொல்லாததையும் செய்வோம், விடியல், மாடல் என்று  நாடு முழுக்க சொன்னவரிடம் கேட்கிறேன். சொல்லாததையும் செய்வோம் என்ற வாக்குறுதியின் அடிப்படையிலாவது இந்த மதுவிலக்கை நீங்கள் அமலுக்கு கொண்டு வரலாமே? தாய்குலங்களின் மனம் குளிரும் இல்லையா? ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் அல்லவா? 

மதுவிலக்கு வேண்டும் என போராடிய வைகோ கூட்டாணி கட்சி என்ற வகையில்  இப்போம் என் சொல்கிறார். போராளிகள், சீறிதிருத்திகள், நடுநிலை பத்திரிகையாளர்கள் என சொல்வர்கள் இதில் திரு வாயை திறக்கலாமே.
மக்கள் கேட்கிறர்கள்….. சொல்லுங்கள் முதல்வரே? கேள்விகள் தொடரும்...

app:///var/mobile/Library/SMS/Attachments/e9/09/A45D17C8-CB3B-4299-A9F7-0CFCEFC74D77/trim_F4F83E0A-B310-4B2B-B077-218928641BBC.MP4

#தினம்_ஒருகேள்வி_முதல்வர்அவர்களே...
#திமுக_மதுவிலக்கு_உறுதிமொழி?
#திமுக_மதுவிலக்கு #கலைஞர்
#DMKFails #dmk_prohibition #drystate
@mkstalin

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
11-11-2023.


No comments:

Post a Comment

*Run your own race. No one cares what you are doing*

*Run your own race. No one cares what you are doing*. Think yourself as a powerful creator. You will see opportunities to get your goal, and...