முகேஷ் அம்பானி மகனுடைய திருமணம் 5000 கோடி செலவில் நடந்து முடிந்துள்ளது குறித்து பல்வேறு விமர்சனங்கள் விளம்பரங்கள் என்று ஊடகங்கள் அது குறித்துப் பேசிக் கொண்டிருந்தாலும் அந்த திருமணத்தின் மூலம் 25,000 கோடி ரூபாய் முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு வருமானமாக வந்திருக்கிறது என்பதுதான் நடந்திருக்கும் உண்மை!
முகேஷ் அம்பானி வீட்டுத் திருமண விருந்திற்குப் போன நடிகர் ரஜினிகாந்த் அத்தனை கூட்டத்திற்கும் மத்தியில் கூச்சமின்றி நடனம் ஆடி இருக்கிறார். ஒரு திருமண விருந்தில் இளைஞர்கள் நடனம் ஆடலாம் அது ஒரு ஆடம்பரத் திருமணம் என்பதால் இளம் வயது ஆண்களும் பெண்களும் கூட தன்னை மறந்து கொண்டாடிக் கொள்ளலாம். 70 வயதிற்கு மேல் ஆகிவிட்ட ரஜினிகாந்த்திற்கு தன் நிலை பற்றி புரியாதா? ஒரு முதிர்ந்த மரியாதைக்குரிய விருந்தினராக அங்கு அவர் நடந்து கொள்ள முடியாதா?அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என்று சொன்னார் வரவில்லை. இப்போது எங்கோ போய் நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார் இதெல்லாம் பார்க்க வேடிக்கையாகத்தான் இருக்கிறது. இதுபோக நடிகை ஜோதிகா சூர்யா உள்ளிட்ட சிவகுமார் குடும்பமும் இந்த விருந்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். நடிகை ஜோதிகா தஞ்சை கோயில் எதற்கு என்று கேட்டவர் அது ஒரு தமிழ்நாட்டின் பண்பாட்டு மரபு சார்ந்த வரலாற்றுப் பாரம்பரியம் என்று கூட தெரியாமல் தான் ஒரு பிரபல நடிகை என்கிற கோதாவில் அப்படியான கேள்விகளைக் கேட்டவர் தான் இந்த ஜோதிகா!
இவர்களையெல்லாம் தான் நாம் தலையில் தாங்க வேண்டியிருக்கிறது!
நமக்கு இதில் சொல்ல வேண்டியது என்ன இருக்கிறது என்றால் அவரவர் சக்திக்கேற்ப தங்களின் இல்லத்திருமணத்தை நடத்துங்கள் விருந்தினர்களைக் கூப்பிடுங்கள் ஏதோ ஒரு வகையில் செலவு செய்யுங்கள் மகிழ்ச்சி தான்!
இதோ பார் என் வீட்டுக் கல்யாணத்தை! இதோ பார் எங்களுடைய செல்வாக்கை! இதோ பார் எங்களுடைய ஆடம்பரத்தை! இதோ பாருங்கள் எங்களது ஈடு இணையற்ற சொத்துக்களை நகைகளை அதன் மதிப்பை என்றெல்லாம் செய்யும் கேலிக்கூத்துகள் கொண்டாட்டங்கள் யாவும் மிக மோசமானது தவறானது.
மக்களால் நன்கு அறியப்பட்ட பிரமுகர்கள் இந்த கல்யாணத்தில் கலந்து கொள்ளும் பொழுது தங்களது தகுதியை இழந்து தன் மதிப்பையும் இழந்து விடாமல் இருக்க வேண்டும். மற்றபடி யார் வீட்டு திருமணமானாலும் கலந்து கொள்ளுங்கள். பணம் செல்வாக்கு மட்டும் ஒருவருக்கான தகுதி இல்லை நடத்தையும்தான். மக்களின் உளவியல் ஒரே மாதிரி இருக்காது.
“எல்லோருக்கும் நன்றாம் பணிதல் அவற்றுள் செல்வர்க்கே செல்வம் தகைத்து” என்றும் ஒரு குறள் இருக்கிறது.
No comments:
Post a Comment