#தரம்பால் #அழகானமரம் #கல்வி
———————————————————-
இன்றைய சட்டபேரவை தலைவர் ஆக இருக்கும் அப்பாவு அவர்கள் எங்கள் ஊர் அருகே குருவிகுளம் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்தவர். ஆசிரியராகவும் பணியாற்றியவர்.சமீபத்தில் அவர் சாரா தக்கர் அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று பேசியுள்ளார். அது அவசியம்தான்.
ஒத்துக்கொள்கிறேன்.
முதன்முதலாகப் பெண் கல்விக்கென நாசரேத்தில் தனிக்கல்லூரியைத் துவங்கியவர் சாரா டக்கர்! பின்பு அக் கல்லூரி திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டது என்பது முக்கிய பணி, அது வரலாற்று நிகழ்வு!
தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் முதன்முதலாகக் இங்கு கல்வியைக் கொண்டுவந்தவர்கள்ஆங்கிலேயர்கள்
தான் என்கிற கருத்து பொதுவாக நிலவி வருகிறது. பலரால் நம்பப்படுகிறது.
பிரிட்டிஷ் நிர்வாகம் மெக்காலே அவர்கள் மூலமாக கொண்டு வந்த புதிய கல்வித் திட்டம் ஒரு வகையில் இந்தியக் கிளர்க்குகளுக்கான படிப்பை மட்டுமே தான் உருவாக்கியது. அதற்கும் அவர்கள் இந்தியாவில் உருவாக்கிய நவீன போக்குவரத்து முறைகள் தான் காரணமாக இருந்தது.
பழைய இந்தியாவில் இத்தகைய போக்குவரத்து தகவல் இல்லாத சூழலில் குருகுல முறைகள் பல்வேறு சிந்தனை பள்ளிகள் ஓரிடத்தில் இருக்க அங்கே சென்று படிக்கும் நிலை தான் இருந்தது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அதை ஒட்டியே இந்தியாவைச் சேர்ந்த தரம் பால் இந்தியா முழுக்க குருகுலக்கல்விகளும் பிறகு மன்னர்களுக்கான நிர்வாக கல்விகளும் இங்கே ஏற்கனவே இருந்தன என்று தனது நூலில் கூறியுள்ளார்.
ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் காணப்படுகிற குருகுல கல்விகள் பல துறைக் கல்விகள் போன்றவற்றிற்கு அப்பாலும் ஓரிடத்தில் தங்கி இருந்து அதாவது இருக்கைப் பள்ளிகளில் என்று சொல்லக்கூடியவை நடந்து வந்திருக்கின்றன. அங்கு பல வகையான கல்விகள் கற்க கற்றுத் தரப்பட்டுள்ளது. மற்றும் மூவேந்தர்கள, பல்லவர், நாயக்கர் மன்னர் காலத்தில் இம் மாதிரியே நடந்தது.
குறிப்பாக வான சாஸ்திரம் பற்றிய ஆரிய பட்டரின் கண்டுபிடிப்புகள் கணித முறைகள் மொழித்துறைகள் அறிவியல் கணிப்புகள் நாள்கோள் கிரகங்கள் கடல்நதி மண்வளங்கள் பற்றிய யாவும் பல்வேறு கல்வியியலாக இருந்துள்ளன சாஸ்திரங்கள் சம்பிரதாயங்கள் வேதக் கல்வியல் எல்லாமே அறிவுத்துறை சார்ந்ததாக தான் இருந்தது. அவற்றில் பொருந்தாதவற்றை கழித்து விட்டால் அதுதான் இந்தியாவில் தோன்றிய முதல் கல்வி இயக்கம் என்று கூறலாம்.
அதைவிடுத்து ஏதோ ஆங்கிலேயர்கள் தான் இங்கு வந்து முதன் முதலாகக் கல்வியை கற்றுக் கொடுத்தார்கள் என்பதாகவும் சாரா தக்கர் மூலமாகத்தான் இந்தியாவில் கல்வி தொடங்கப்பட்டது என்று சொல்வதெல்லாம் அதிகபட்சமான காலனிய மதிப்பீடுகள் தான். ஒருவகையில் இன்றைய கல்வி பரவலாகுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
பொதுவாகவே இந்தியாவின் பூர்வீக அறிவுச்சொத்தை மதிக்க வேண்டியதில்லை என்பது இங்கே முற்போக்காளர்களின் வழக்கமாக இருக்கிறது.
இந்தியாவிலிருந்து குறிப்பாக கீழைத் தத்துவங்களில் இருந்து அதன் சிந்தனைப் பள்ளிகளில் இருந்து பலவற்றையும்
மேற்கத்திய மற்றும் உலகச் சூழல்கள் எவ்வளவிற்கு எடுத்துக் கொண்டுள்ளது என்பதை அறிந்தவர்கள் இவ்வாறு பேச மாட்டார்கள்.
நான் மேலே சொன்ன தரம் பால் அவர்கள் இது குறித்து எழுதிய புத்தகம் ஆங்கிலத்தில் The Beautiful Tree: Indigenous Indian Education in the Eighteenth Century அழகான மரம்: (பதினெட்டாம் நூற்றாண்டில் பூர்வீக இந்தியக் கல்வி. புது தில்லி: பிப்லியா இம்பெக்ஸ், 1983. கீர்த்தி பப்ளிஷிங் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் மறுபதிப்பு செய்யப்பட்டது. லிமிடெட், கோயம்புத்தூர், 1995.) காங்கிரஸ் காலத்திலேயே மத்திய அரசு நிறுவனத்தின் நூல் வெளியீட்டு கழகத்தில் வெளியிடப்பட்டு பல்வேறு இந்திய நூலகங்களில் இருக்கிறது. வெளியே மத்திய நூல் அங்காடிகளிலும் கிடைக்கிறது. அதை வாங்கிப் படிப்பவர்கள் இந்தியாவின் அறிவுச்சொத்தை தெரிந்து கொள்ளலாம்.
#TheBeautifulTree #Dharampal
#indianeducation
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
21-7-2024.
No comments:
Post a Comment