Thursday, January 16, 2025

#தமிழக அரசின் கடன்கள்

#*சென்னைமாநில-தமிழக அரசின் கடன்கள்* 
————————————
தமிழகத்தில் 1967 இல் திமுக ஆட்சியைக் கைப்பற்றிய போது அதற்கு முன்னர் இருந்த காங்கிரஸ் ஆட்சி விட்டுச் சென்ற கடன் தொகை ரூபாய்  838 கோடியாக இருந்தது 1970 என்பதுகளில் அதுவே ஏழு மடங்காகி 1980 - 90களில் மள மளவென்று 14 மடங்கு உயர்ந்தது என்கிறது முன்னாள் தமிழக ஐஏஎஸ் அதிகாரி எஸ் குகன் தயாரித்த அறிக்கை ஒன்று! ஆனாலும் 1986 87 கூட தமிழகத்தில் கடன் சுமை அதன் அன்றைய GDP கணக்கில் அனைத்து மாநிலங்களையும் விட குறைந்தே இருந்தது என்பதுதான் இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம்! ஆனால் இன்று ஜிடிபி கணக்கில் ஹரியானா சத்தீஸ்கார் உத்தரகாண்ட் கர்நாடகம் அஸ்ஸாம் கோவா மகாராஷ்டிரா குஜராத் ஒடிசா டெல்லி மாநிலங்களை விடத் தமிழக அரசின் கடன் சுமை அதிகம் என்று அந்தப் புள்ளி விவரம் முன்வைக்கிறது!

இவ்வளவு கடன்களுக்கும் அவர்கள் சொல்லும் வளர்ச்சி திட்டங்கள் நகர அலங்காரங்கள் மேம்பாலங்கள் அரசு கட்டிடங்கள் என்பதாகத்தான் இருக்கிறது. பொதுப்பணித்துறை விவகாரங்களில் திமுக அரசியலின் சாதனைகள் ஊரறிந்ததுதான்! முக்காலுக்கு கால் மூணே முக்கால் தான்! Trible c நாட்டின் வளர்ச்சிக்கு சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ இவர்களின் குடும்ப வாரிசுகள் வளர்ச்சிக்கும் மேற்கண்ட அந்நிய கடன்களுக்கும்  நிறைய சம்பந்தம் இருக்கிறது! என்பதைப் புரிந்து கொண்டால் சரி!
••••••••
மெட்ராஸ் 
பட்டிண அசோக் நகர் பில்லர் 
கலைஞர் கருணாநிதி நகர் 
காமராஜ் தெருக்களில்
 எளிய மக்கள் படும் துயரங்களை 
1972 ஆம் ஆண்டில் வெளியான "முருகன் காட்டிய வழி' திரைப்பட பாடலில் 
நடிகர் ஏ.விஎம்.ராஜன் நடித்து பாடும் கவிஞரின் பாடல்.
54 ஆண்டுகளுக்கு முன்பு 
#மெட்ராஸ்நகரம்

m.youtube.com/watch?v=kQoYgh…

#தமிழகஅரசின்கடன்கள்

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
16-1-2025.

No comments:

Post a Comment

#முதலைக்கண்ணீர்

இன்றைய சூழலில் பலருக்கு  #முதலைக்கண்ணீர் வடிப்பதே வழக்கமாகிவிட்டது!  முதலை இரையை உண்ணும் போது கண்ணீர் வடிக்குமாம்! அது பாதிக்கப்பட்ட இரைக்கா...