Wednesday, July 15, 2015

இயற்கை வேளாண்மை - Organic Farming



இரசாயன உரங்களும் , பூச்சிக்கொல்லிகளும் அறிமுகமாவதற்கு முன்னால் நமது விவசாயம் இயற்கை விவசாயமாக இருந்தது.
அந்த விவசாயிகள் தங்கள் விவசாயத்தை தற்சார்போடும் சுயமரியாதையோடும் செய்துவந்தனர்.

இரசாயன இடுபொருட்கள் புகுத்தப் பட்டதும்,
பசுமைப் புரட்சி வந்த பின்னும் மகசூலான விளைச்சலை விவசாயிகள் சந்தைக்கோ, கமிசன் மண்டிகளுக்கோ அனுப்பவேண்டியிருந்தது. வணிகர்கள், இடைத்தரகர்களால் விவசாய உற்பத்திப் பொருட்கள் கொள்ளையடிக்கப்படுகிறது.

தங்களுடைய சாகுபடிச் செலவுகளுக்கு வாங்கின கடனைக் கூட அடைக்க முடியாமல் விவசாயிகள் தற்கொலைகள் ஐந்து லட்சத்தை தாண்டிய அவல நிலைகள். இதெல்லாம் பத்திரிகைகளில் செய்தியாக வராது. அப்படியே வந்தாலும் ஏதோ ஒரு மூலையில் இடம்பெறும். பத்திரிகைகளுக்கு குஷ்பு காங்கிரஷில் சேர்ந்ததும், ரஜினி அடுத்து என்ன செய்கிறார் என்பதும் தான் தலைப்புச் செய்திகள்..

இந்நிலையில் இந்த இழிநிலையைப் போக்கக்கூடிய  வகையில் அண்டைமாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திரம், மற்ற மாநிலங்களான சிக்கிம், மத்திய பிரதேசம், மிசோரம், இமாச்சல பிரதேசம், நாகலாந்து, குஜராத் போன்ற மாநிலங்கள் உயிர்மை வேளாண்மைக் கொள்கை என்று திட்டங்களை முனைந்துள்ளது.
கேரளம் இதற்காக 200கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

ஆனால் தமிழக அரசு உயிர்மை வேளாண்மை கொள்கையை வகுக்கவும் இல்லை, அதுபற்றி சிந்தனையும் இல்லை. இந்த கொள்கை ஏனென்றால் விவசாய நலத்திட்டங்களையும், இயற்கை விவசாயத்தை முறைப்படுத்தவும், விவசாய இடுபொருட்கள் விலையை குறைக்கவும், விவசாய உற்பத்திப் பொருட்களை லாபகரமாக விலை நிர்ணயிக்கவும் வகுக்கப்படும் திட்டமாகும்.

தமிழகத்தில் உள்ள ஆளவந்தார்களுக்கு இந்த கொள்கைகளை வகுத்து விவசாயியின் வாழ்வில் ஒளியேற்ற ஏனோ மனம் வரவில்லை.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
15-07-2015.


No comments:

Post a Comment