Thursday, October 8, 2015

இந்தியா - ஈழம் பிரச்சனை


ஐநாவின் ஈழத்தில் நடந்த கொடூரங்களை குறித்தான புலனாய்வு அறிக்கை வெளிவந்துள்ளது.
இந்நிலையில், கவனிக்கப்பட வேண்டிய  சில முக்கிய விடயங்கள்:

1. இலங்கையில் பயங்கரவாத சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
2.தமிழர்கள் பகுதியுலுள்ள ராணுவத்தை திரும்ப பெற வேண்டும்.
3.தமிழர்களின் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை உடனே அதன் உரிமையாளரிடம் வழங்கவேண்டும்.
4.விடுதலை புலிகளோடு தொடர்புள்ளவர்கள் என தமிழ் மக்களை கைது செய்வதை நிறுத்தவேண்டும்.
5.இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் எங்குள்ளார்கள் எத்தனை பேர் என்று அறிவித்து அவர்களை விடுதலை செய்யவேண்டும்.
6. காணாமல் போனாவர்கள் எத்தனை பேர் , அவர்களை தேடி பிடிக்கவேண்டும்.
7.ஐநா அமைப்பின் மூலமாக , பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையில் முகாமிட்டு தமிழர்களின் பிரச்சனையும், அவர்களின் பாதுகாப்பு குறித்தும் கண்காணிக்க வேண்டும்.
8.அமெரிக்கா , பிரிட்டன் , சீனா , ரஷ்யா போன்ற நாடுகள் உள்ளக கலப்பின விசாரணைக்கு துணை போகாமல் , சர்வதேச சுதந்திரமான விசாரணை வேண்டுமென்று இந்தியா வற்புறுத்த வேண்டும்.ஏனெனில் 1963ஆம் ஆண்டு முதல் கடந்த 2013 வரை சிங்கள அரசு தமிழர்கள் மீதான தாக்குதல் குறித்து ,  18 விசாரணை குழுக்கள் அமைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லையென்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் .  இறுதியாக அமைக்கப்பட்ட காணமல் போனவர்கள் குறித்த விசாரணை குழுவின் அறிக்கையாலும் எந்த பலனும் இல்லை.


2009 முள்ளிவாய்க்கால் போரிலும்  தலைமை தாங்கிய பொன்சேகா ,  மேஜர் ஜெனரல்.ஜெகத் டயஸ் மற்றும் அன்றைய பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த இன்றைய அதிபர்  சிரிசேனாவும் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தவேண்டும். அனால் இதில் ஒருவர் இலங்கை அதிபராகிவிட்டார்.மற்றொருவர் பீல்ட் மார்ஷல் என்கிற கௌரவத்தை பொன்சேகாவிற்கும் ஜெகத் டயஸ்க்கு ராணுவத்தின் தலைமை தளபதியாகவும் உயர்த்தப்பட்டார்.

அமெரிக்கா  2012,2013,14ல்  சர்வதேச சுதந்திரமான விசாரணை என்று ஐநாவில் சொல்லிவிட்டு , இப்போது பின்வாங்கும் நோக்கமென்ன.?? ஏனெனில் ரணில் அமெரிக்காவின் ஆதரவாளன் . அமெரிக்காவோ இந்து மகா சமுத்தரத்தை மனதில் வைத்துகொண்டு இலங்கை அரசிடம் காயை நகர்த்துகிறது. இந்த பிரச்னையில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் போட்டாபோட்டி நடக்கிறது.

இவ்வுளவு தெற்காசிய புவி அரசியலில் பிரச்சனை இருந்தும், பேச வேண்டிய , கவனிக்க வேண்டிய இந்தியா மெளனமாக இருப்பதைதான் நம்மால் ஏற்றுகொள்ள முடியவில்லை.

கடந்த காலத்தில் வியட்நாம் , பாலஸ்தீனம், போர்சுகல், வங்கதேசம் ,சூடான் ,கொரியா, சூயஸ் கால்வாய், கிழக்கு தைமூர் ,கம்போடியா ,லைபிரியா போன்ற சர்வேதச பிரச்சனையில் குரல் கொடுத்த இந்தியா ஈழ பிரச்சனையை  அணுகாமல் தனது பாதுகாப்பையும், இந்து மகா சமுத்திரத்தில் தனது ஆளுமையையும் தக்கவைத்துக்கொள்ள வாய் மூடி மெளனமாக இருக்கிறது.

ஆனால் உலக நாடுகளைவிட இந்தியாதான் அக்கறையும் ஆர்வமும் செலுத்தவேண்டும்மொழிய அதைவிட்டுவிட்டு சிங்கள அரசிற்கு இந்தியா துணைபோவது பெருங்குற்றமாகும்.


என்ன செய்ய கையறு நிலை... !!!

‪#‎KSR_Post‬ ‪#‎KSRadhakrishnan‬ #Eazham #srilanka #tamils

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...