Tuesday, August 2, 2016

முந்திரி கொத்து

முந்திரி கொத்து
=================

திருவட்டாறு சிந்துகுமார்  இது  குறித்து எழுதியிருந்தார். 

கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாமல் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்திலும் முந்திரி கொத்து, முட்டை கோஸ் என்ற உருண்டையான பலகாரங்கள் வாடிக்கையாக விரும்பி உண்பது உண்டு. ஒருமுறை கிராமத்திலிருந்து சென்னைக்கு சாலை வழியாக காரில் பயணிக்கும்பொழுது மாலை பொழுதில் தேனீர் அருந்த தொழுதூரில் இறங்கியபொழுது அந்த தேனீர் கடையில் முட்டை கோஸும், முந்திரி கொத்தும் இருந்தது. நான் அந்தக் கடைக்காரரிடம் விழுப்புரம் அருகில் தென்னாற்காடு மாவட்டத்தில் இந்த பலகாரங்களை பார்ப்பது அறிது என்று கேட்டேன். அவர் சொன்னார், நான் பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம் என்றார். பிறகு எப்படி இங்கே இந்த பலகாரங்களை எல்லாம் விரும்புவார்களா என்று கேட்டதற்கு, இதற்கென்றே வேண்டி விரும்பி சாப்பிட ஒரு கூட்டம் மாலை வரும் என்று குறிப்பிட்டது இன்றைக்கும் நினைவில் இருக்கின்றது. அப்படிப்பட்ட முந்திரி கொத்து என்ற பலகாரத்தைப் பற்றி சிந்துகுமார் எழுதியபோது பழைய நினைவுகள் வந்தன.  
வீடுகளிலும் செய்வார்கள். கடைகளிலும் பரவலாக கிடைக்கும்.

முந்திரி கொத்து செய்முறை: தேவையான பொருட்கள்: சிறுபயறு (பச்சைப் பயறு) - ஒரு கிலோ, கருப்பட்டி - முக்கால் கிலோ, தேங்காய் - ஒன்று, ஏலக்காய் - 10, சுக்கு - ஒரு துண்டு, எள் - 100 கிராம், பச்சரிசி - அரை கிலோ, மஞ்சள்தூள் - சிறிதளவு, இத்துடன் எண்ணெய் தேவையான அளவு.

பச்சரிசி மாவு, சிறிதளவு மஞ்சள்தூள் இரண்டையும் கெட்டியாக தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பிடித்து வைத்திருக்கும் பயறு உருண்டையை, பச்சரிசி மாவுக் கலவையில் நனைத்து எடுத்து, போடவும். கரண்டியால் உருண்டைகளை திருப்பிவிட்டு, எல்லா பகுதிகளும் வேகும்படி செய்யவும். சுருசுரு சத்தம் நின்ற ஓரிரு நிமிடங்களில் எடுத்துப் பரிமாறலாம்.

குறிப்பு: எண்ணெயில் மாவை போட்டதும், உருண்டைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு, முந்திரிக் கொத்து போல இருப்பதால் தான் இதற்கு முந்திரிக் கொத்து என்று பெயர்.

#முந்திரிகொத்து

No comments:

Post a Comment

பிரதமர் மோடி அவர்கள் கணேச சதுர்த்தியை ஒட்டி வாழ்த்து தெரிவிக்கும்

 பிரதமர் மோடி அவர்கள் கணேச சதுர்த்தியை ஒட்டி வாழ்த்து தெரிவிக்கும் பொருட்டு உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் அவர்களைச் சந்தித்ததை  அரசியலாக...