Tuesday, June 12, 2018

தமிழகத்தின் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 11 தொகுதிகளை இழக்குமா?


தமிழகத்தின் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 11 தொகுதிகளை இழக்குமா?
---------------------------------
இந்தியாவின் 15வது நிதிக்குழுவின் பரிந்துரையின்படி, தென்மாநிலங்களின் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டதாகவும், அதனால் தென் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதிஆதாரங்களை மத்திய அரசு குறைக்கலாம் என்றும் கூறியுள்ளது. இந்தியாவின் வரி வருவாயில் தென்மாநிலங்களுடைய பங்களிப்பு தான் அதிகம். இவ்வளவும் அளித்தும், நிதி ஆதாரங்களை மக்கள் தொகையை கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கு அதிகமாக ஒதுக்கியுள்ளது தவறான, வேதனையான நடவடிக்கையாகும். உத்தர பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தவில்லை என்றாலும், மத்திய அரசு 15வது நிதிக் குழுவின் பரிந்துரையால் அதிகமாக ஒதுக்கப்பட இருக்கின்றது.
இன்னொரு வேதனையான செய்தி என்னவென்றால், மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதால் தமிழகத்தில் கூட 11 தொகுதிகளை மக்கள் தொகையின் கணக்கெடுப்பின் அடிப்படையில் இழக்கக் கூடிய வாய்ப்புகளும் எழலாம் என்று பலர் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

இதன் அடிப்படையில் கேரளம் 20 மக்களவைத் தொகுதிகளில் 6 தொகுதிகளை இழக்கவேண்டியது வரும். அதே போல, தமிழகம் 39 தொகுதிகளில் 11 தொகுதிகளை இழக்கலாம் என்ற விவாதங்களும் ஒரு பக்கம் நடந்து வருகின்றன. இது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல. இப்படியொரு நிலைமை ஏற்பட்டால் என்ன செய்யப் போகின்றோம் என்பதை விழிப்புணர்வோடு நாம் ஆராய வேண்டும்.
#மக்களவைத்_தொகுதிகள்_இழப்பு
#தமிழ்நாடு
#15வது_நிதிக்குழு
#Tamil_Nadu
#15th_finance_commission
#Loksabha_constituencies
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
11-06-2018

No comments:

Post a Comment