Monday, June 11, 2018

#Shakespeare #ஷேக்ஸ்பியர்....

ஷேக்ஸ்பியரும், ஆங்கிலச் சொற்களும்
--------------------------------
ஆங்கில அகராதிக்கு அடிப்படையில் ஷேக்ஸ்பியரின் சொல்லாக்கம் முக்கியமான தரவாகும். தன்னிடம் எந்த அகராதியும் ஷேக்ஸ்பியர் இல்லாமலேயே தன்னுடைய படைப்புகளைப் படைத்தார். ஆங்கில மொழிக்கு அவர் 1700 சொற்களை புதிதாக உருவாக்கி அர்ப்பணித்தார். குறிப்பாக படுகொலை (Assassination), படுக்கையறை (Bedroom), ஆபாசம் (obscence), பயனற்றது (useless) போன்ற 28 சொற்களை முதன்முதலாக ஆங்கிலத்தில் புழக்கத்தில் விட்டார். 

அவர் உருவாக்கிய சொர்க்கத்தில் முத்தமிடும் நரகம், முடிவற்ற நீண்ட நாட்கள் கொண்ட உலகம், பெருமைமிகு ஏப்ரல் வண்ணக்கோலம், பொறாமை உணர்வு (green-eyed), எள்ளி நகையாடத்தக்கது (laugning stock), கல்மனம் (stony heart) போன்ற எண்ணிலடங்கா சொற்களை படைத்தார். இவையாவும் அவருடைய நாடகங்கள், கவிதைகளில் விரவியுள்ளன. இதை தலைப்புச் சொற்களாகவும் பலர் பயன்படுத்துகின்றனர். 

இவருடைய படைப்புகள் அனைத்தும் உலகளவில் 50க்கும் மேலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 10 லட்சம் சொற்களை தன்னுடைய படைப்புகளில் புகுத்தியுள்ளார். மனித குணங்களான பேராசை, பொறாமை, வீரம், காதல், மகிழ்ச்சி, துயரம், இயலாமை, ஆளுமை போன்றவற்றை அற்புதமாக, பொருத்தமாக இடத்திற்கேற்றவாறு செப்பியுள்ளார். 

36 plays were published in the first Folio in 1623. Shakespeare's plays are typically divided into three categories.
Comedies: Much Ado About Nothing, A Midsummer Night's Dream, and the Taming of the Shrew
Histories: Richard III, Henry V and Henry IV, Parts 1 & 2
Tragedies: Macbeth and Hamlet
--------

ஷேக்ஸ்பியரின் 36 நாடகங்கள் 1623 இல் துன்பவியல், இன்பவியல், வரலாறு என்ற மையக் கருத்துக்களோடு வெளியாகியது. இன்பவியல் என்றால் மணக்கோலத்தோடு காட்சிகள் நகரும். துன்பவியல் என்றால் அனைவரும் மரணிப்பதாக காட்சிகள் இருக்கும்.
மாவீரன் அண்டனி தன் வீரப் பராக்கிரமத்தை விடுத்து, தான் விரும்பும் ரோமாபுரியை பற்றி கூட சிந்திக்காமல் எந்த குழப்பத்தை பற்றியும், அக்கறைப்படாமல் கிளியோபாட்ராவின் அழகில் மயங்கிக் கிடக்கும் காட்சியை அற்புதமாக கீழ்க்கண்டவாறு வருணிக்கிறார்.

“Let Rome in Tiber melt, and the wide arch 
Of the ranged empire fall. Here is my space.
Kingdoms are clay. Our dungy earth alike
Feeds beast as man.”

""Kingdoms are clay when the rulers have "Feet of Clay." What a statement!

- William Shakespeare (Antony and Cleopatra)



#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
11-06-2018

No comments:

Post a Comment

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*.

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*. Believe in yourself. You know personal de...