Monday, November 12, 2018

எழுவரின்விடுதலை....

#எழுவரின்விடுதலை என்ற பிரச்சனையை பின்தள்ளிவிட்டோம். சர்க்கார் திரைப்படம், மீடூ என அவ்வப்போது பரபரப்பான பிரச்சனைகளை முன்னெடுத்துவிட்டு தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். அதையும் மற்ந்துவிட்டோம். நீர்நிலைகளில் குளங்கள் 60,000 இருந்ததை கபளீகரம் செய்யப்பட்டு இப்போது 30,000 ஆகிவிட்டது. வெள்ளத்தை தடுக்க தடுப்பணைகளை பற்றி சிந்திப்பது கிடையாது. மத்திய அரசிடம் அப்போது தமிழக முதல்வர்களாக இருந்த காமராஜர், அண்ணா, கலைஞர் ஆகியோர் போராடி வாங்கிய சேலம் இரும்பாலை திட்டத்தை இப்போது கமுக்கமாக தனியாருக்கு விற்க வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்படி தமிழகத்தின் பல உரிமைகள் பறிபோவதை யாரும் கவனிப்பதுமில்லை, சிந்திப்பதுமில்லை. மாட்டிறைச்சி, அந்த உணவு, இந்த உணவு, அந்த என் உரிமை, இந்த இவர் உரிமை என்று பேசியும் ஒவ்வொருவரும் தங்களுடைய சுய இருப்பை ஊடகவெளிச்சத்திற்காக விளம்பரம் தேடி எந்த தொலைக்காட்சி மைக் நம் முன்னால் நீட்டி தம் முகத்தை காட்டமாட்டார்களா என்று பாசாங்கு போர்க்குணத்தை காட்டிக் கொண்டு வருகின்றனர். 

திரைப்படத்தில் நோய், சுகாதாரக் கேடுகள் வந்தால் அதை மக்கள் நல்வாழ்வுத் துறை 
அமைச்சர் தான் கவனிக்கக வேண்டும். ஆனால், பொதுப்பணித்துறை என்று கதாநாயகர் வீரவசனம் பேசுகிறார். இந்தியாவிலேயே இந்தியத் தூதரகம் இருப்பதாக வசனங்களையும் பேசுகிறார். இனி வருங்காலங்களில் ஆக்கப்பூர்வமான அரசியல் மக்களுக்கான திட்டங்களைப் பற்றியெல்லாம் பேசுவது அவசியமற்றது என்ற நிலையில் உள்ளது. உண்மையான பிரச்சனைகளை பற்றி பேசியவர்கள் ஆடை கட்டாத கிராமத்தில் கோவணம் கட்டியவரைப் பார்த்து சிரிக்கின்ற காட்சி போல உள்ளது. இதற்கு மேல் என்ன சொல்ல?

வரலாறும், காலமும் தான் இதை முடிவு செய்யும்.

உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்
     வாக்கினிலே ஒளியுண்டாகும்
வெள்ளத்தின் பெருக்குபோல் கலைபெருக்கு
     கவிப்பெருக்கும் மேவுமாயின் 
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெலாம்
     விழிபெற்று பதவி கொள்வார்
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
       இங்கமரர் சிறப்பு கண்டார்!
-பாரதி

#தமிழக_பிரச்சனைகள்
#TamilNadu_problems
#KSRPostings
#KSRadhakrishnanPostings

*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
12/11/2018

No comments:

Post a Comment

#*OHCHR*-#*UNHumanRights - #Geneva* #*Eelam Tamils issue*

#*OHCHR*-#*UNHumanRights - #Geneva* #*Eelam Tamils issue*  ———————————— From: OHCHR-UN Human Rights <ohchr-media@un.org> Sent: Friday,...