Monday, November 12, 2018

கார்ப்பரேட் பாலிடிக்ஸ்

கார்ப்பரேட் பாலிடிக்ஸ்
------------------------------------
கடந்த காலங்களில் இயற்கையோடு இணைந்து கூட்டுறவு சமுதாயமாக கிடைத்ததை வைத்து நிம்மதியாக வாழ்ந்தோம். மூலதனம், பொருள்வாதம் என்று வந்தபின், கார்ப்பரேட் என்ற இயக்கவியல் நம்முடைய மண் வாசனைக்கு ஏற்ற அமைப்புரீதியான பண்டைய இருத்தலியலை பாழ்படுத்தியது. நமது குறியீடுகளெல்லாம் சமரசத்தால் அழிந்தன.
சமரசம் என்பது இரண்டு வகையுண்டு. ஏற்புடைய சமரசம் என்பது நலம் சார்ந்தது. ஏற்பற்ற சமரசம் என்பது நாமே நமக்கு குழிவெட்டி அந்த குழியில் தள்ளிக் கொள்வது. அந்த வகையில் தான் இன்றைய அனைத்து துறைகளும் கார்ப்பரேட்டால் பாதிக்கப்பட்டு புரையோடிவிட்டது.
நம்முடைய பழைய நிலைக்கு வரமுடியுமா என்பது ஒரு கடினமான காரியமே. புதிய பொருளாதாரம், தாராளமயமாக்கல் என்று வந்தபின், உலகம் சார்ந்து எல்லா நடவடிக்கைகளும் நம்மைச் சுற்றி இயங்க ஆரம்பித்தபின் நாம் என்ன செய்ய முடியும். நம்முடைய பாரம்பரிய குறியீடுகளை, பண்பாடுகளை ஒவ்வொரு நாளும் ஒரு விதத்தில் தொலைத்துக் கொண்டு வருகிறோம். வேறு புதிய நமக்கு அந்நியமான காரணிகள் நம்மீது, நம்மை மீறி திணிக்கப்படுகின்றது.
எல்லாவற்றிற்கும் பொருள்வாதமே அடிப்படை. கூட்டுறவு அமைப்பு, கிராம ராஜ்யம், தற்சார்பு விவசாயம், நீர்ப்பாதுகாப்பு என அடிப்படை விடயங்கள் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டோம். இனிமேல் என்ன? எப்படி நிகழ்வுகள் இருக்கும் என்பது உலகமயமாக்கல் சார்ந்த நடவடிக்கைகளை பொருத்தே இயங்கும்.
#கார்ப்பரேட்_பாலிடிக்ஸ் #Corporate_Politics #KSRadhakrishnanpostings #KSRpostings கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 11-11-2018

No comments:

Post a Comment

#*OHCHR*-#*UNHumanRights - #Geneva* #*Eelam Tamils issue*

#*OHCHR*-#*UNHumanRights - #Geneva* #*Eelam Tamils issue*  ———————————— From: OHCHR-UN Human Rights <ohchr-media@un.org> Sent: Friday,...